சிவப்பு எறும்பு சட்னிக்கு ஏன் புவிசார் குறியீடு கொடுத்தார்கள் தெரியுமா? 

Red Ant Chutney.
Red Ant Chutney.
Published on

சமீபத்தில் மத்திய அரசு ஒடிசா மாநிலத்தின் பிரபலமான சிவப்பு இரும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கி கௌரவித்தது. அப்படி எறும்புகளை வைத்து தயாரிக்கப்படும் இந்த சட்னிக்கு என்னதான் சிறப்பு எனத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.  

அன்று முதல் இன்று வரை உலகம் முழுவதும் மக்கள் சிலவகை பூச்சிகளை உணவாகப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஒடிசாவில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடியின மக்கள், சிவப்பு எறும்பை பயன்படுத்தி சட்னி செய்து சாப்பிடுகின்றனர். இது ஒரிசாவில் பல இடங்களில் பிரபலமாக உள்ளது. இதில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுப்பதால் மக்கள் விரும்பி தயாரித்து சாப்பிடுகின்றனர். இந்நிலையில் தான் சிவப்பு எறும்பு சட்னியின் தனித்துவமான பண்புகள் மற்றும் சுவைக்காக மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியது. 

சட்னி தயாரிக்க பயன்படுத்தப்படும் எறும்புகள் Oeceophylla Smaragdina என்ற அறிவியல் பெயரைக் கொண்ட சிவப்பு எறும்புகளாகும். இவை ஒரு மனிதனைக் கடித்தால் அதிக வலியைக் கொடுக்கும். ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் காடுகளில் இந்த வகை எறும்புகள் அதிக அளவில் காணப்படுகிறது. பல ஆண்டுகளாக அங்கு வாழும் பழங்குடியின மக்கள் இந்த சிவப்பு எறும்பு சட்னியை பயன்படுத்தி வந்தாலும், இப்போதுதான் அது பிரபலமடைந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் பல்வேறு உணவகங்களில் இது உணவாக சேர்க்கப்பட்டுள்ளது. 

ஒடிசா மாநிலத்தின் நூற்றுக்கணக்கான பழங்குடியினங்கள் இந்த எறும்புகளை சேகரித்து சட்னி தயாரித்து விற்பனை செய்து தங்களின் குடும்பத்தை நடத்துகின்றனர். இந்த சட்னி தற்போது பிரபலமடைந்துவிட்டதால் பலர் போலியான சட்னிகளையும் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாகவே போலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:
பிள்ளையார் எறும்பு – பெயர் வந்த கதை தெரியுமா?
Red Ant Chutney.

சிவப்பு எறும்பு சட்னியில் கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், புரதம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் விட்டமின் பி12 போன்ற பல ஆரோக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சட்னி மூளை வளர்ச்சிக்கு அதிகம் பங்களிப்பதாக கூறப்படுகிறது. நினைவாற்றல் இழப்பு, மனச்சோர்வு, எப்போதும் சோர்வாக உணர்வது போன்ற நோய்களுக்கு சிறந்த தீர்வைக் கொடுக்குமாம்.

எனவே இதன் தனித்துவம் மற்றும் பாரம்பரியம் காரணமாக மத்திய அரசு சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com