கடல் என்பது அதிசயங்களின் உலகம். அங்கு பல அற்புதமான உயிர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இத்தகைய பரந்த மற்றும் மர்மமான உலகில் கொலையாளி திமிங்கலம் என அழைக்கப்படும் ORCA திமிங்கலங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அதன் புத்திசாலித்தனம் மற்றும் குறிப்பிடத்தக்க வேட்டையாடும் திறன், கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் Apex பிரிடேட்டராக அவற்றை வைத்துள்ளது. சரி வாருங்கள் இந்தப் பதிவில் ஓர்காவின் பண்புகள் மற்றும் நடத்தைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ORCA-வின் பண்புகள்: எதற்கும் அஞ்சாத இந்த ORCA இனம் டால்பின் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் நன்கு வளர்ந்த திமிங்கலங்கள் 30 அடி நீளம் மற்றும் 10 டன் எடை வரை இருக்கும். இவை மற்ற டால்பின் இடங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவத்தைக் கொண்டுள்ளன. இதன் மூலமாக தண்ணீரில் இவற்றால் வேகமாக நகர முடிகிறது. அவற்றின் தனித்துவமான கருப்பு மற்றும் வெள்ளை நிறம் இந்த இனத்தை நாம் அடையாளம் காண உதவுகிறது.
ஆர்கா இனத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் அவற்றின் பற்கள் இடம்பெறுகிறது. சுமார் 4 அங்குல நீளத்தில் கூம்பு வடிவத்தில் இருக்கும் இதன் பற்கள் மூலமாக, இரையை ஒரே கடியில் கிழித்துவிடும். கூர்மையான பற்கள் மற்றும் சக்தி வாய்ந்த தாடைகளின் உதவியுடன் ஆர்காஸ் சிறந்த வேட்டையாடிகளாக கடலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
வேட்டையாடும் உத்திகள்: மீன்கள், ஸ்குவிட்கள், சுறாக்கள், கடல் சிங்கங்கள் மற்றும் பெரிய திமிங்கலங்கள் என பல வகையான உயிரினங்களை மிகவும் திறமையாக ஆர்காஸ் வேட்டையாடும். அவை தங்களின் கூட்டாக வேட்டையாடும் நுட்பங்களுக்கு பெயர் பெற்றவை. இந்த நுட்பத்தில் வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்பதால், எப்போதும் கூட்டமாக சென்றுதான் இவை வேட்டையாடும். வேட்டையாடுவதில் ஒவ்வொரு ஆர்காவும் குறிப்பிடத்தக்க அங்கம் வகிக்கும்.
ORCAS பயன்படுத்தும் வேட்டை உத்தி ‘Carousel Feeding’ என அழைக்கப்படுகிறது. இந்த நுட்பத்தில் மீன்களின் கூட்டம் அல்லது கடல் பாலூட்டியை சுற்றி வளைத்து, குமிழிகளின் வளையத்தை உருவாக்குகின்றன. இதனால் திசை திருப்பப்படும் இரை, மேற்பரப்பை நோக்கி நகர்ந்து செல்வதால், அங்கே அவற்றை எளிதாக ஆர்காஸ் வேட்டையாடுகின்றன.
இந்த குறிப்பிடத்தக்க டால்பின் இனம் குறிப்பிடத்தக்க நுண்ணறிவு மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களைக் கொண்டுள்ளன. தங்களின் வாலைப் பயன்படுத்தி செயற்கையாக அலைகளை உருவாக்கி இரைகளை வேட்டையாடுகின்றன. அதேபோல கடற்கரையில் இருக்கும் உயிரினங்களையும் சீறிப்பாய்ந்து பிடிக்கும் தந்திரசாலிகள் இவை.
இத்தகைய பண்புகள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாகவே ORCA மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிரினமும் வேட்டையாடாத கடல் ராஜாக்களாக சுற்றித் திரிகின்றன.