நம் உடலின் அத்யாவசியமான உள்ளுறுப்புகளில் ஒன்று இதயம். இதயம் உடலின் மற்ற பாகங்கள் அனைத்திற்கும் இரத்தத்தை அனுப்பி அதன் மூலம் அவைகளுக்கு ஆக்ஸிஜனும் ஊட்டச் சத்துக்களும் கிடைக்கவும், கழிவுப் பொருட்களை அங்கிருந்து அகற்றவும் உதவி புரிகிறது. ஆனால், சில உயிரினங்கள் இதயமே இல்லாமல் அதற்குப் பதில் வேறு மாற்று அமைப்புகளுடன் செயல் பட்டு, உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறான 6 வகை உயிரினங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
மிகச் சாதாரணப் புழுக்கள் போன்றவை இவை. இவைகளுக்கு இதயம் மற்றும் இரத்தக் குழாய்கள் எதுவும் கிடையாது. இதன் தட்டையான உடலமைப்பு ஆக்ஸிஜனையும், ஊட்டச் சத்துக்களையும் நேரடியாக செல்களுக்குள் சென்றடைய உதவுகிறது. இது போதாதா? உடலுக்குள் மற்ற செயல்பாடுகள் அனைத்தும் சுமுகமாக நடைபெற வேறெந்தப் பிரத்யேகமான அமைப்புகளும் இவற்றிற்குத் தேவைப்படவில்லை.
இதன் உடல் மிகவும் மிருதுவானது. கண்ணாடி போன்ற அமைப்புடன், கடலின் மேற்பரப்புகளில் மிதந்து கொண்டிருக்கும். நீரின் வழியாக ஆக்ஸிஜனும், ஊட்டச்சத்துக்களும் இதன் உடலுக்குள் சென்றுவிடுகிறது. நீரின் அசைவுகளோடு இது மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதால், இதற்கு இதயமோ இரத்தக் குழாய்களோ தேவைப்படவில்லை.
பூமியில் தோன்றிய மிகப் பழமையான உயிரினங்கள். இவற்றுக்கு இதயமோ இரத்த ஓட்டம் செல்வதற்கான அமைப்புகளோ கிடையாது. இதற்குப் பதிலாக, இவற்றின் உடலில் உள்ள சிறு சிறு துவாரங்களின் வழியாக தண்ணீர் உட் புகுந்து ஆக்ஸிஜனையும், ஊட்டச்சத்துக்களையும் கொடுத்துவிட்டு, கழிவுகளை வெளிக்கொண்டு சேர்த்து விடுகிறது.
தெளிந்த நீரில் வசிக்கும் மிகச் சிறிய விலங்கு ஹைட்ரா. இதன் சிம்பிளான உடலின் தோல் வழியாக ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்துக்களும், நேரடியாக செல்களைச் சென்றடைந்து விடுகின்றன. சுத்தமான நீரில் வசித்து வரும் ஹைட்ராவுக்கு உயிர் வாழ வேறெந்தத் தேவையும் இல்லாததால் இதற்கும் இதயம் இல்லை.
இதுவும் ஒரு இதயமில்லா உயிரினம் தான். இதயத்திற்குப் பதில் 'வாட்டர் வாஸ்குலர் சிஸ்டம்' என்றதோர் அமைப்பு உபயோகத்தில் உள்ளது. அதாவது, துல்லியமான திசுக்களாலான கால்வாய்கள் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டு அவற்றின் வழியாக கடல் நீரை உடலுக்கு உள்ளே கொண்டு வர உதவி புரிகின்றன. இந்த முறையில் ஸ்டார் ஃபிஷ் நகரவும், மூச்சு விடவும், உண்ணவும் செய்கிறது.
ஸ்டார் ஃபிஷ் போல இதுவும் இதயம் இல்லாமல் 'வாட்டர் வாஸ்குலர் சிஸ்டம்' என்ற முறையைப் பின்பற்றி வாழ்ந்து வருகிறது. ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் தேவைக்கு உடலுக்குள் புகும் கடல் நீரைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த சாதாரண வாழ்வியல் முறை, கடலின் மேற்பரப்பில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருக்கும் அர்ச்சின்களுக்குப் போதுமானதாக உள்ளது. நீரோட்டத்துடன் இணைந்து செயல் புரியக்கூடிய உடலமைப்புக் கொண்ட இவ்வுயிரினங்களுக்கு இதயமோ இதயத் துடிப்போ தேவையற்ற ஒன்றுதான்.