

பேரழிவுகள் என்பது இயற்கையில் நடக்கக்கூடிய காலநிலை மாற்றத்தால் உருவாகும் ஒரு மிகப்பெரிய அழிவு தான் பேரழிவு ஆகும்.
இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மனித செயல்பாடுகள் முக்கிய காரணமாக இருந்தாலும், ஒரு சில நேரங்களில் இயற்கையாகவே பல்வேறு பேரழிவுகள் ஏற்படுகின்றன.
பூமி உருவாகி இப்போதிலிருந்து பல கோடி வருடங்களுக்கு முன், பல பேரழிவுகள் நம் பூமியில் ஏற்பட்டிருக்கின்றன. இதனால்தான் பல அரிய வகை விலங்குகள் அழிய காரணமாகின. பூமியில் ஏற்பட்ட குறிப்பிட்ட மிகப்பெரிய பேரழிவு பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
பூமியில் நடந்த மிகப்பெரிய பேரழிவு.
1. பெர்மியன் பேரழிவு (Permian Extinction)
பெர்மியன் காலகட்டமானது, கிட்டத்தட்ட இப்போதிலிருந்து 250 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்ததாம். இந்த காலத் கட்டத்தில் உலகில் உள்ள கண்டங்கள் எல்லாம் பிரியாமல் ஒன்றுடன் ஒன்று இணைந்து தான் காணப்பட்டதாம். அதேபோல் அப்போது டைனோசர்களும் உருவாகவில்லை. எந்த ஒரு பாலூட்டி இனங்களும் உருவாகவில்லை.
கடலில் சின்ன சின்ன உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தது. அப்படியே நிலத்தில் சிறு சிறு பூச்சிகள் காணப்பட்டன. அதன் பிறகு டைனோசரை விட சிறிய அளவில் புற்களைத் உண்ணக்கூடிய ஒரு விலங்கு தோன்றியது. அப்படியே படிப்படியாக உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலான நிலப்பரப்புகள் காய்ந்து வறண்டு காணப்பட்டன.
மிகப்பெரிய அளவில் பல எண்ணிக்கையிலான எரிமலைகள் வெடிக்கத் தொடங்கியது. அதுவும் இப்போது உள்ள சைபீரியன் போன்ற பகுதிகளில் இந்த அழிவானது மிகப் பெரிய அளவில் காணப்பட்டதாம். எரிமலைகளில் இருந்து எரிமலை குழம்புகள் கிட்டத்தட்ட 50 லட்சம் கியூபிக் கிலோ மீட்டர் அளவில் பரவியது. இந்த எரிமலை குழம்புகள் பரவுவதற்கு கிட்டத்தட்ட 10 லட்சம் ஆண்டுகள் ஆனதாம். இதனால் பல்வேறு நச்சு புகைகள் மற்றும் விஷ வாயுக்கள் காற்றில் பரவியது.
இந்த எரிமலைகள் வெடிப்புக்கு, விண்ணில் இருந்து விண்கல்கள் கீழே வந்து எரிமலைகளில் மோதி இருக்கலாம் அல்லது வெப்பநிலை அதிகரித்ததின் விளைவாக எரிமலை குழம்புகள் வெளியேறி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இதனால் கடல் நீரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகம் சூடாகின. பெரும்பாலான தோன்றிய உயிரினங்கள் அனைத்தும் இறந்து விடுகின்றன. குறிப்பாக கடலில் தோன்றிய சிறிய உயிரினங்களும் இறந்து விடுகின்றன. மரங்கள் தாவரங்கள் பெரும்பாலும் கருகி விடுகின்றன.
அறிவியல் அறிஞர்களின் கூற்றுப்படி, இந்த பேரழிவால் கிட்டத்தட்ட 90 சதவீதம் உயிரினங்கள் கடலில் அழிந்து விடுகின்றன. அதேபோல் நிலத்தில் 70 சதவீதம் உயிரினங்கள் அழிந்து விடுகின்றன. இந்தப் பேரழிவுகளுக்கு பிறகு டைனோசர் இனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலும் அழிந்து விட்டன.
அதன் பிறகு பல்வேறு ஆண்டுகளுக்குப் பிறகு வெப்பம் காரணமாக மழை பொழிய தொடங்குகிறது.
பிறகு மீண்டும் பூமியில் சின்ன சின்ன உயிரினங்கள் படிப்படியாக மீண்டும் தோன்ற ஆரம்பித்தது. ஒரு செல் உயிரினங்கள், ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என்று படிப்படியாக தோன்ற ஆரம்பித்தது. முதலில் மரங்கள், தாவரங்கள் வளர ஆரம்பித்தது.பூமியில் உயிரினங்கள் நன்கு செழித்து வளர்வதற்கு கிட்டத்தட்ட பத்து மில்லியன் ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாம்.
இப்போதும் பூமியில் ஆங்காங்கே இயற்கை சீற்றங்களும், பேரழிவுகளும் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மனித செயல்பாடுகள் தான். மனிதன் தன் சுயநலத்திற்காக இயற்கையை சுரண்டுகிறான். இதனால் நாளடைவில் நமக்கும் மிகப்பெரிய அளவில் பெர்மியன் பேரழிவு போன்ற ஒரு மிகப்பெரிய பேரழிவு நடக்கும் என்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை..!