Pink River Dolphin: ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ! 

Pink River Dolphin.
Pink River Dolphin.

இயற்கை உலகம் பல அசாதாரண உயிரினங்களின் தாயகமாக உள்ளது. இதில் ஒவ்வொரு உயிரினமும் அதன் தனித்துவமான பண்புகள் மற்றும் நடத்தைகளைக் கொண்டுள்ளன. இதில் அமேசான் ரிவர் டால்ஃபின் மற்றும் போட்டோ என அழைக்கப்படும் பிங்க் ரிவர் டால்ஃபின்கள் வசீகரிக்கும் பண்புகளைக் கொண்ட உயிரினமாகும். இதன் தனித்துவமான பிங்க் நிறத் தோற்றம் நீர்வாழ் உயிரின ஆர்வலர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது. 

பிங்க் ரிவர் டால்ஃபின்களின் அம்சங்கள்: 

இந்த டால்பின்கள் தன்னுடைய பிங்க் நிறத்திற்கு புகழ்பெற்றவை. இதன் மூலமாகவே கடலில் வாழும் மற்ற டால்ஃபின்களிடம் இருந்து இது தனித்து நிற்கிறது. உண்மையில் இதுபோன்ற தனித்துவமான நிறங்களைக் காட்டும் டால்பின் இடங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் தோலின் மேற்பரப்புக்கு அருகில் அமைந்துள்ள ரத்த நாளங்கள் காரணமாக இந்த பிங்க் நிறத்தில் இவை காட்சி அளிக்கின்றன. 

இந்த டால்பின் இனங்கள் தென் அமெரிக்காவின் நன்னீர் ஆறுகளான அமேசான் மற்றும் ஓரினோககோ நதிப் படுகைகளில் அதிகம் காணப்படுகிறது. இந்த டால்ஃபின்கள் அவற்றின் சுறுசுறுப்பு மற்றும் துள்ளி விளையாடும் தன்மைக்கு பெயர் பெற்றவை. பெரும்பாலும் இவை தண்ணீரில் இருந்து அழகாக சுழன்று குதிப்பதைப் பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும். 

 நடத்தை: பொதுவாகவே டால்பின்கள் ஒரு சமூக விலங்கு. கூட்டம் கூட்டமாக குழுக்களை உருவாக்கிக் கொண்டு வாழ்கின்றன. கூட்டமாக சென்று வேட்டையாடுதல் மூலமாக இவற்றின் சமூகப் பிணைப்பு வெளிப்படுகிறது. இவற்றின் புத்திசாலித்தனம் மற்றும் விளையாட்டுத்தனமான இயல்பு மற்ற டால்பினங்களை விட கூடுதலாகவே இருக்கும். குச்சிகளை பயன்படுத்தி விளையாடுதல் மற்றும் குமிழ்களை ஊதி விளையாடுவது போன்ற நடத்தைகள் இவற்றின் தனித்துவமாகும். 

இதையும் படியுங்கள்:
மார்க் ஜூக்கர்பெர்க்கின் ராஜ வாழ்க்கை.. 5000 சதுர அடியில் ரகசிய Underground Bunker!
Pink River Dolphin.

அச்சுறுத்தல்கள்: என்னதான் பிங்க் ரிவர் டால்ஃபின்கள் அழகாக இருந்தாலும் இவற்றின் உயிருக்கு ஏராளமான அச்சுறுதல்கள் உள்ளது. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் இவற்றை அதிகம் பாதிக்கப்படும் இனமாக பட்டியலிட்டுள்ளது. காடுகளை அழித்தல், அணை கட்டுவது போன்ற காரணங்களால் இவற்றின் வாழ்க்கை சவாலாக இருந்தாலும், நீரின் மோசமான தரம், மாசுபாடு மற்றும் அவ்வப்போது மீன்பிடி வலைகளில் சிக்கிக் கொள்வதால் அவற்றின் எண்ணிக்கை குறைய வழி வகுக்கின்றன. 

எனவே இவற்றின் வாழ்விடத்தை பாதுகாக்க பல்வேறு அமைப்புகளும் ஆராய்ச்சியாளர்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நிலையான மீன்பிடி நடவடிக்கைகளை உண்டாக்குதல் மற்றும் இவற்றுக்கென பாதுகாப்பு பகுதிகளை நிறுவுதல் போன்றவற்றால், இந்த இனம் நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கு வழிவகை செய்ய முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com