மார்க் ஜூக்கர்பெர்க்கின் ராஜ வாழ்க்கை.. 5000 சதுர அடியில் ரகசிய Underground Bunker!

Mark Zuckerberg's Royal Life.
Mark Zuckerberg's Royal Life.

சுமார் 1400 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பசுபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் ஹவாய் தீவில் உலக பணக்காரர்களில் ஒருவரான மார்க் ஜூக்கர்பெர்க் 5000 சதுர அடியில் ரகசிய அண்டர்கிரவுண்ட் பங்கர் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதன் சிறப்புகள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

மாலத்தீவின் அரசியல் தலைவர்கள் இந்தியாவைந் பற்றி அவதூறு தேசியத்திலிருந்து இந்தியாவிலிருந்து விடுமுறையைக் கொண்டாட லட்சத்தீவு செல்லலாமா? அல்லது மாலத்தீவு செல்லலாமா? என சமூக வலைதளங்களில் பலர் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றனர். ஆனால் நம்மில் பலருக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஊட்டி, கொடைக்கானல் போகவே நேரம் இல்லாமல் இருக்கும் நிலையில், தனது விடுமுறையை கொண்டாட மார்க் ஜூக்கர்பெர்க் 1400 ஏக்கரில் ஒரு தனி தீவையை விலைக்கு வாங்கி அங்கு ரகசிய பங்க்கர் கட்டியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்கின் இந்த சொகுசு வாழ்க்கை நம்மை மலைக்க வைத்தாலும், பசிபிக் பெருங்கடலுக்கு இடையே உள்ள ஹவாய் தீவுகளில் 1400 ஏக்கர் அளவிலான கவாய் என்ற தனித்தீவை மார்க் ஜூக்கர்பெர்க் தம்பதி வாங்கி இருக்கின்றனர். இந்த தீவை இவர்கள் 2014 ஆம் ஆண்டிலேயே வாங்கி பழத்தோட்டங்கள், மாட்டுப் பண்ணை, அண்டர் கிரவுண்ட் பங்கர் போன்றவற்றை உருவாக்கினர். 

இதுவரை இந்த ரகசிய இடம் பற்றிய உண்மைகள் வெளியே தெரியாத நிலையில், இப்போது மார்க் ஜூக்கர்பெர்க் அவரது மனைவி மற்றும் நண்பர்களுடன் விடுமுறையைக் கொண்டாட அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மார்க் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். குறிப்பாக அந்த அண்டர் கிரவுண்ட் பங்கரில் கேம் விளையாடுவது போன்ற காணொளி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 

கிட்டத்தட்ட 270 மில்லியன் டாலர் செலவில் இந்த ரகசிய பங்கர் கட்டப்பட்டுள்ளது. அதன் அளவு மொத்தம் 5000 சதுர அடி. இந்த பங்கருக்குத் தேவையான உணவுகள் மற்றும் மின்சாரம் போன்றவை உள்ளிருந்தபடியே உற்பத்தி செய்யப்படுகிறது. எல்லாவிதமான பேரிடர்களையும் தாங்கும் அளவில் உறுதியாக இதை வடிவமைத்து கட்டியுள்ளனர். இந்த பங்கரில் மொத்தம் 30 பாத்ரூம்கள், 30 பெட்ரூம்கள், லிவிங் ரூம்கள் மற்றும் தனி தியேட்டர் போன்றவை உள்ளது. அதேபோல கால்நடைகளை வளர்ப்பதற்கான கட்டிடம், கிட்சன் போன்றவையும் இருக்கிறது. 

இதையும் படியுங்கள்:
அஜித்துடன் இணையும் மார்க் ஆண்டனி பட இயக்குனநர்!
Mark Zuckerberg's Royal Life.

கடந்த சில நாட்களாக தனது விடுமுறையை அங்கு கழித்து வரும் மார்க் ஜூக்கர்பெர்க் அங்கு உள்ள தியேட்டரில் கேம் விளையாடும் படியான காணொளியை பதிவிட்டார். இதன் பிறகுதான் அந்த பங்கர் தொடர்பான விவரங்கள் உலகளவில் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது.  உலகிலேயே அதிக விலை உயர்ந்த Wagyu மற்றும் Angus ரக கால்நடைகளை வளர்த்து வருவதாக மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்திருந்தார். 

தங்களது தோட்டங்களை பராமரிக்க அவரது மகள்கள் உதவுவதாகவும் குறிப்பிட்டு இருந்த மார்க் ஜூகர்பெர்க், தனது விடுமுறையை ஜாலியாக எந்த தொழில் நுட்ப சாதனங்களின் குறிக்கிடும் இன்றி செலவிடுகிறார். ஆனால் அவரது பயனர்கள் எல்லா காலங்களிலும் தங்களது நேரத்தை பேஸ்புக்கிலேயே கழித்து வீணடித்து வருகிறார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com