காவேரிப் படுகை பகுதியில் தாவரங்களின் பரப்பளவு குறைந்துள்ளதாக ஆய்வில் தகவல்.
கர்நாடக மாநிலம் குடகு மலையில் தலைக்காவிரியாக பிறந்து தமிழகத்தின் பூம்புகார் வங்கக்கடல் வரை பரந்து விரிந்து பிரம்மாண்ட தோற்றத்தில் காட்சியளிக்கிறது காவேரி. 800 கிலோ மீட்டர் வரை பாய்ந்து, செல்லும் பகுதியில் எல்லாம் வளத்தை தாராளமாய் தந்திருக்கிறது காவேரி. தமிழகத்தின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு காவிரி முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் வழியே தனது பயணத்தை காவிரி மேற்கொள்கிறது. தஞ்சையை நெற்களஞ்சியம் என்று மாற்றிய பெருமையும் காவிரிக்கே உண்டு.
இப்படித்தான் செல்லும் வழியெல்லாம் பசுமையை அள்ளித் தெளித்து. உணவாதாரமாக விளங்கி வரும் காவேரி தற்போது தன்னுடைய தன்மையை சிறுக சிறுக இழந்து வருவதாக அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அறிவியல் கழக ஆய்வாளர்கள் டி வி ராமச்சந்திரன், வீனஸ் எஸ், பாரத் எஸ், ஐதல் ஆகிய ஆய்வாளர்கள் வெளியிட்டு இருக்கக்கூடிய ஆய்வு தகவல் காவிரியின் இன்றைய நிலையை விளக்கி இருக்கிறது.
1965 முதல் 2016 வரை 50 ஆண்டுகாலத்தில் 12,850 சதுர கிலோ மீட்டர் அளவிற்க்கு காவேரி படுகை பகுதிகளில் தாவரங்கள் காணப்பட்ட இடங்கள் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பகுதிகளின் பல்வேறு வகையான மருத்துவ குணம் வாய்ந்த, பல்வேறு வகையான பல்வேறு சிறப்புகளை வாய்ந்த, நறுமணம் தரக்கூடிய, ஆரோக்கியம் தரக்கூடிய, சுற்றுச்சூழலை பாதுகாக்க கூடிய தாவரங்கள் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு காவேரி படுகை பகுதியில் பரந்து விரிந்து காணப்பட்ட 46 சதவீத கரையோர தாவர பரப்பு குறைந்து இருக்கிறது. அடர்த்தியாக காணப்பட்ட 35 சதவீத தாவர பரப்பு குறைந்திருக்கிறது. 612 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு தாவரங்களினுடைய பரப்பளவு சிதைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் வேளாண் பயிர்பரப்பும் குறைந்திருக்கிறது. இதனால் நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மேலும் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து இருக்கிறது. கடுமையான மழை வெள்ள காலங்களில் காவேரிப்படுகை பகுதியில் ஆபத்து அதிகரித்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.