Pliosaur: 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் மிருகம்!

Pliosaur.
Pliosaur.

பிரிட்டன் நாட்டில் உள்ள கடற்கரையில் பிரம்மாண்டமான கடல் மிருகத்தின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டை ஓடு சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ந்த ‘ஜுராசிக் ப்ளியோசர்’ என்ற ஊர்வன வகை விலங்குக்கு சொந்தமானதாகும். 

இதுவரை அராயப்பட்டதிலேயே மிகப்பெரிய புதைப்படிவ மாதிரி இதுதான். அதிலும் இந்த மண்டை ஓடு முழுவதுமாக சிதைவின்றி கிடைத்துள்ளது என்பது தனிச்சிறப்பாகவே பார்க்கப்படுகிறது. இப்போதே இந்த உயிரினம் பார்ப்பதற்கு இப்படி இருக்கிறதென்றால், அது உயிருடன் இருக்கும்போது எந்த அளவுக்கு இருந்திருக்கும் என நினைத்துப் பார்ப்பதே பீதியை ஏற்படுத்துகிறது. 

இந்த ப்ளியோசரின் மண்டை ஓடு கொஞ்சம் சேதமடைந்திருந்தாலும் அதன் எலும்புகள் அனைத்தும் அப்படியே உள்ளது. ஒரு சராசரி மனிதனின் உயரத்தை விட இதன் மண்டையோடு உயரமாக உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது இந்த உயிரினம் நிஜத்தில் எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக அதன் 130 கூர்மையான பற்களை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது. 

பார்ப்பதற்கு ஒரு நீளமான கத்தி போல இருக்கும் இதன் பற்கள், ஒரே கடியில் இரையை துண்டாக்கிவிடும். அதன் பற்களை உற்றுப் பார்க்கும்போது அதை பயன்படுத்தி இரையை எப்படி கிழிக்க உதவியாக இருந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அதன் எதிரே வரும் எந்த விலங்கையும் தனக்கு இரையாக்கிக்கொள்ளும் வகையில், 10 முதல் 15 மீட்டர் நீளத்திற்கு மிகப்பெரியதாக இருந்திருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
மரணத்தை கணிக்கும் AI தொழில்நுட்பம்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி!
Pliosaur.

ஜுராசிக் பார்க் திரைப்படங்களில் காட்டுவது போல கடலுக்கு அடியில் வாழும் டைனோசரஸ் ரெக்ஸ் வகையை சார்ந்த உயிரினமாகக் கூட இது இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. கடற்கரையின் மலை முகட்டில் செய்த ஆய்வில் இந்த உயிரினத்தின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது. எப்போதுமே ஒரு பாறையின் நடுவில் இருந்து புதை படிவங்களை அகற்றுவது கடினமானதாகும். அதுவும் கடற்கரையில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் இருக்கும் மண்டையோட்டை சிதைவின்றி எடுப்பது இன்னும் கடினமானது. 

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இந்த மிகப்பெரிய உருவான இனம் எப்படி வாழ்ந்தன அவை நம்முடைய சுற்றுச்சூழலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது பற்றிய விஷயங்களை அறிய ஆர்வம் காட்டுவார்கள் என நம்பப்படுகிறது. அந்த மண்டை ஓட்டை ஆய்வு செய்ததில், இதன் கடிக்கும் திசை மற்ற உயிரினங்களோடு ஒப்பிடும்போது 33,000 நியூட்டன் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

Pliosaur
Pliosaur

இதன் மூலமாக இது எந்த அளவுக்கு சக்தி வாய்ந்த அசுர மிருகமாக இருந்திருக்கும் என்பதை நாம் கணிக்க முடிகிறது. ஏனெனில் ஒரு விலங்கிற்கு எந்த அளவுக்கு கடிக்கும் ஆற்றல் இருக்கிறதோ, அந்த அளவுக்கு இரை வெளியேறும் வாய்ப்பு குறைவு. இப்போது இதன் தலை மட்டுமே கிடைத்துள்ளதால், இந்த மிருகத்தின் எஞ்சிய பாகங்கள் மேற்கொண்டு நடக்கும் அகழ்வாராய்ச்சியில் நிச்சயம் கிடைக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com