
இமயமலையில் மொத்தம் 681 பனிப்பாறைகள் உள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் 482 பனிப்பாறைகள் உள்ளன. இந்தப் பனிப்பாறைகள் தட்பவெப்ப நிலை காரணமாக உருகி விரிவடைந்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு பெரிய ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது என மத்திய நீர் கமிஷன் எச்சரிக்கை செய்து உள்ளது.
இந்தப் பணிகளை மத்திய நீர் கமிஷன்தான் கவனித்து வருகிறது. லடாக், ஜம்மு காஷ்மீர், சிக்கிம், உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசம் இவற்றில் உள்ள 432 பனி ப்பாறைகள் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளன. இவை அனைத்தும் உருகி விரிவடைந்து வருவதாக அறிக்கை கூறுகிறது. இதனால் நீர் பரவும் பகுதிகள் அதிகரித்து பெரும் பாதிப்பு அடையும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்தப் பனிப்பாறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பருவநிலை மாறுபாடு காரணமாகவும் வெப்பநிலை காரணமாகவும் இந்த மோசமான நிகழ்வு ஏற்படப்போவதாக எச்சரிக்கை செய்துள்ளது. அதற்கு முன்பாக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இதுவரை 30 சதவீதம் உருகி விரிவடைந்து உள்ளது. 1917 ஹெக்டேராக இருந்த பனிப்பாறைகள் தற்போது 2508 ஹெக்டேர் விரிவடைந்து உள்ளது. இது மிகுந்த கவலை அளிப்பதாக இருக்கிறது என மத்திய நீர் கமிஷன் கூறி உள்ளது.
அதிகபட்சமாக அருணாச்சலப் பிரதேசத்தில் 197 பணிப்பாறைகள், லடாக்கில்120 பனிப்பாறைகள், ஜம்மு காஷ்மீரில் 57 பனிப்பாறைகள், சிக்கிம் மாநிலத்தில் 47 பனிப்பாறைகள், இமாச்சலப் பிரதேசத்தில் ஆறு பனிப்பாறைகள், உத்தரகாண்டில் 5 பனிப்பாறைகள் உருகி விரிவடைந்து உள்ளது. அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் இதனைக் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். செயற்கைக்கோள்கள் மூலமும் கண்காணித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுகின்றனர்.
இமயமலையில் உள்ள இந்துகுஷ் பனிப்பாறைகள் உருகி கவலை அளிக்கின்றன. இதன் மூலம் 75 சதவிகிதம் பனிப்பாறைகள் உருகி விரிவடைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் 2100 குள் இந்துகுஷ் இமயமலை பகுதி இருக்காது என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். உலகில் வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் போது ஒட்டுமொத்த பனிப்பாறைகளும் உருகி நான்கில் ஒரு பகுதி மட்டுமே இருக்கும் என மத்திய நீர் கமிஷன் கவலை தெரிவித்துள்ளது.