இமயமலை வெறும் மலையல்ல; அது ஒரு அதிசயத்தின் வரலாறு!

History of the Himalayan miracle
Himalayas
Published on

மயமலை தொடர் இருக்கும் இடத்தில் தற்போது நாம் காணும் உயரமான மலைகள் முன்பு இருந்ததே இல்லை. மாறாக, அந்த இடம் ஒரு பழைய சமுத்திரமாக (The Tethys Sea) இருந்தது.

இதன் விளக்கம்: கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு (சுமார் 200 முதல் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்), இமயமலை இருப்பிடத்தில் டெதிஸ் சமுத்திரம் எனப்படும் பெரிய கடல் பரவியிருந்தது. இந்த சமுத்திரத்தின் வடக்குப் பக்கம் யூரேசிய பிளேட், தெற்குப் பக்கம் இந்திய பிளேட் இருந்தது. இந்திய பிளேட் மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து, சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் யூரேசிய பிளேட்டுடன் மோதியது. அந்த மோதலின் விளைவாக கடல் அடிப்பகுதி மேலே தள்ளப்பட்டு, மடங்கி, உயர்ந்து இன்றைய இமயமலைகளாக மாறியது. இன்று இமயமலையின் சில கற்களிலும் பாறைகளிலும் கடல் உயிரினங்களின் புழுதி (fossils) இன்னும் காணப்படுகின்றன. இதுவே அங்கே முன்பு கடல் இருந்ததற்கான நேரடிச் சான்று. இன்று அந்த மோதலால் உருவான உயர்ந்த மடிப்புகள் இமயமலை தொடராக உயர்ந்து நிற்கின்றன; இன்னும் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. மொத்தத்தில், கடலிலிருந்து மலைக்குச் மாறும் பரிணாமம்தான் இதில் விளங்குகிறது.

இதையும் படியுங்கள்:
உலகில் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் 10 நாடுகள் எவை தெரியுமா?
History of the Himalayan miracle

இமயமலையின் சிறப்புகள்: இமயமலை உலகின் உயர்ந்த மலைத் தொடர்களைக் கொண்டது. எவரெஸ்ட் சிகரம் (Mount Everest) 8,848.86 மீட்டர் உயரம். இதன் உச்சி 7,000 மீட்டருக்கு மேல் உயரமுள்ள பல சிகரங்கள் இங்கே அமைந்துள்ளன.

1. புவியியல் சிறப்பு: சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்திய பீடபூமி (Indian Plate) மற்றும் யூரேசிய பீடபூமி (Eurasian Plate) மோதியதில் உருவானது. இன்னும் வருடத்திற்கு சில மில்லி மீட்டர் உயரம் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

2. நீர் வளங்களின் ஆதாரம்: கங்கை, யமுனா, சிந்து, பிரம்மபுத்திரா, சத்லெஜ் போன்ற ஆறுகளின் பிறப்பிடம். ஆசியாவின் கோடிக்கணக்கான மக்களுக்கு குடிநீர், வேளாண்மை நீர், மின்சாரம் ஆகியவற்றை வழங்குகிறது.

3. உயிரியல் வளம்: பனிமலைக் கழுகு (Snow Leopard), சிவப்பு பாண்டா (Red Panda), திபெத் மான்கள் போன்ற அரிய விலங்குகளின் வாழிடம். பல்வேறு வகையான மூலிகைகள், மருத்துவச் செடிகள் இமயமலையில் மட்டுமே கிடைக்கும்.

4. காலநிலை பாதிப்பு: இந்தியா மற்றும் ஆசியாவின் தெற்குப் பகுதிகளை கடுமையான குளிர்காலத்திலிருந்து காப்பாற்றுகிறது. பருவ மழையின் தன்மையை மாற்றி, வேளாண்மைக்கு உகந்த சூழலை உருவாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
ஆழ்கடலின் ஆச்சரியமூட்டும் 8 விலங்குகள்!
History of the Himalayan miracle

5. ஆன்மிக மற்றும் கலாசார முக்கியத்துவம்: இந்து, புத்த, சிக், ஜெயின் போன்ற பல மதங்களில் புனிதமான இடங்கள் இங்கே உள்ளன. கங்கை ஆற்றின் தோற்ற இடமான கங்கோத்ரி (Gangotri), அமர்நாத் குகை, கேதார்நாத், பத்ரிநாத் போன்ற யாத்திரைத் தலங்கள்.

6. சுற்றுலா மற்றும் சாகச விளையாட்டுகள்: ட்ரெக்கிங், மவுண்டனீரிங், ஸ்கீயிங், ராப்டிங் போன்றவை இமயமலையின் முக்கிய ஈர்ப்புகள். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இது ஈர்க்கிறது.

7. இயற்கை அழகு: பனியில் மூடப்பட்ட சிகரங்கள், பள்ளத்தாக்குகள், அருவிகள், ஏரிகள் ஆகியவை கண்கவர் அழகைத் தருகின்றன. காலையும் மாலையும் சூரிய ஒளி பனிமலையில் மிளிரும் தருணம் புகைப்படக் கலைஞர்களின் கனவு.

இமயமலை (Himalayas) உலகின் மிகச் சிறப்பான, இயற்கை, புவியியல், ஆன்மிக மற்றும் கலாசார முக்கியத்துவம் கொண்ட மலைத்தொடராகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com