புதைமணல் மற்றும் புதைக்குழி என்றால் என்ன? அதில் சிக்கியவர்கள் எப்படி எளிதாக தப்பிக்கலாம்!

புதைமணல் மற்றும் புதைக்குழி என்றால் என்ன? அதில் சிக்கியவர்கள் எப்படி எளிதாக தப்பிக்கலாம் என்ற முழுமையான வழிகாட்டி.
புதைமணல் | Quick sand
புதைமணல் | Quick sandImage credit: Chatgpt
Updated on

புதைக்குழி மற்றும் புதைமணலின் பின்னணி என்ன? அதில் மாட்டிக்கொண்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

புதை குழி என்பது (quick sand) எனப்படும். இயற்கையாக மணல் நீர் கலந்து சேரு போல காணப்படும் ஒரு சதுப்பு நிலப்பகுதி புதைமணல் எனப்படும். இதில் சிக்கினால் மெதுவாக உள்ளே இழுக்கப்பட்டு மூழ்கி விடுவார்கள். புவியின் அடியில் இயற்கையான நிலத்தில் மேற்பரப்பில் தோன்றும் பள்ளம் புதைமணல் (Sinkhole) எனப்படும்.

பூமியின் அடியில் சுண்ணாம்பு போன்ற கார்பனேட் பாறை அடுக்குகள் கரைவதால் இந்த புதைகுழிகள் ஏற்படுகின்றன. உலகின் பல பகுதிகளில் இத்தகைய புதை புலிகள் காணப்படுகின்றன. மேலும் இவை ஒரு மீட்டர் முதல் 6000 மீட்டர் வரை அகலத்திலும் ஆழத்திலும் காணப்படும். இவை திடீரென்று அல்லது படிப்படியாகவோ உருவாகலாம்.

புதைகுழி என்பது சேரும் காற்றும் அடங்கிய சதுப்பு நிலப்பரப்பு, கடற்கரை ஏரி மற்றும் பெரிய குளங்கள் நீண்ட காலமாக நீர் தேங்கியுள்ள நிலப்பகுதியாகும். கடல் நீரும் குட்டை நீரும் கலந்து உவர்ப்பாக இருக்கும்.

இதனுள் மனிதர்கள் விலங்குகள் ஏன் யானை கூட விழுந்தால் சிறிது சிறிதாக உள்ளே இழுத்து விடும். அந்த இடங்களில் புதர்கள், கோரைபுற்கள் நிறைந்து காணப்படும்.

தமிழக கடலோர சதுப்பு நில காடுகள் வளர்க்கப்பட்டு சுமார் 4000 வகை உயிரினங்கள் இருப்பிடமாக உள்ளன.

ராமேஸ்வரம் சிதம்பரத்தில் உள்ள பிச்சாவரம் போன்ற பகுதியில் சதுப்பு நிலக்காடுகள் காணப்படுகின்றன.

இவை கடல் நீரால் ஏற்படும் அரிப்பை தடுக்கின்றன. கோடியக்கரை பகுதிகளிலும் சதுப்பு நில கடுகள் உள்ளன. சென்னை பள்ளிக்கரணையில் சதுப்பு நிலக்காடு உள்ளது. இந்த இடத்தில் இதுவரை கடல் நீர் உள்புகவில்லை.

இதையும் படியுங்கள்:
மனிதர்கள் அழிந்தால் பூமியை ஆளப்போகும் இந்த உயிரினம்... செம ஷாக்கிங் தகவல்!
புதைமணல் | Quick sand

இந்தியாவில் கோடியக்கரை தவிர குஜராத்திலும் வங்காளத்தில் சுந்தர்பன் காடுகளிலும் சதுப்பு நில கடுகள் நிறைய காணப்படுகின்றன.

புதை மணல் புதை குழியில் சிக்கிக் கொண்டவர்கள் தப்பித்துக் கொள்வதற்கும் வழி உண்டு.

பெரும்பாலும் புதைமணல் புதைகுழியில் விழுந்தவர்கள் மிதக்கத்தான் செய்வார்கள். புதை மணல் என்பது மணல், களிமண், உப்புத்தண்ணீர் கலவையாகும்

இதன் மேல் பகுதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டால் இறுகிவிடும்.

பொதுவாக புதைக்குழியில் விழுபவர்கள் இடுப்பு வரை மட்டுமே உள்ளே செல்ல முடியும்.

புதைமணலில் சிக்கிக் கொண்டவர்கள் பயப்படக்கூடாது.

எந்த காயங்களும் இல்லாமல் எளிதாக தப்பிக்கலாம். பொதுவாக புதை மணலில் யாரும் மூழ்க மாட்டார்கள்.

இதில் மிதக்கத்தான் செய்வார்கள்.

இதில் இடுப்பு வரை மட்டுமே முழுக முடியும். புதைமணலில் யாரும் விழுந்தால் அதன் அடிப்பகுதி இறுகி கட்டியாகி விடும்.

கொஞ்சம் கொஞ்சமாக அடர்த்தி கூடும். புதைமணலில் விழுந்தவர்களை கையைப் பிடித்து இழுக்க கூடாது. புதை மணலில் சிக்கிக் கொண்டவர்கள் தங்கள் கால்களை சைக்கிள் பெடல் ஓட்டுவது போன்று காலை அசைக்க வேண்டும்.

புதைமணல் | Quick sand
புதைமணல் | Quick sandImage credit: Gemini AI

அதன் அடிப்பகுதியில் வெற்றியிடம் ஏற்பட்டு தண்ணீர் புகும்.

அந்த இடத்தில் நீர் நெருங்குவதால் நாம் சற்று உடலை சாய்க்க வேண்டும்.

பின்னர் கைகளை நீச்சல் அடிப்பது போன்று செய்கை செய்து

கால்களை அசைக்க வேண்டும்.

கால்கள் வெளியே வந்தவுடன் மிதக்கும் நிலையை அடைவார்கள்.

கடைசியாக நல்ல மணற்பரப்பில் வந்தவுடன் மெதுவாக நகர்ந்து எழுந்திருக்க வேண்டும். புதை மணலில் சிக்கி இருப்பவர்கள் அலைகள் அல்லது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஆபத்து என்பதை உணரலாம்.

இதையும் படியுங்கள்:
விருந்தாளியாய் நுழைந்து வில்லனாகும் ஸ்ட்ராங்ளர் அத்தி: இயற்கையின் விந்தையான செடி!
புதைமணல் | Quick sand

இந்த இடங்களில் நீர் மேற்பரப்புக்கு செல்வதில்லை. இதன் மேற்பரப்பில் இலைகள், சருகுகள் மற்றும் கழிவுகள் தங்கி அந்த இடம் புதை குழி என தெரியாமல் காணப்படும். இதுதான் தெரியாமல் மாட்டிக் கொள்வார்கள்.

புதைமணல், புதை குழியில் விழுந்தவர்கள் பெரும்பாலும் இடுப்பு வரை தான் செல்வார்கள்; மற்றபடி மிதக்கத்தான் செய்வார்கள்

பயத்தின் காரணமாகத்தான் சில உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com