அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை இந்திய விலங்குகள்!

சிங்கவால் குரங்கு
சிங்கவால் குரங்கு

டந்த பல வருடங்களாக மனித மக்கள் தொகை பெருக்கம், அதனால் உண்டான வளர்ச்சி மற்றும் நகரமயமாதல் காரணமாக பறவைகளும் விலங்குகளும் நாளுக்கு நாள் தங்களின் வாழ்விடங்களை இழந்து தவிக்கின்றன. வனவிலங்குகள் சில அழிவின் விளிம்பில் உள்ளன. உலக நாடுகளில் இல்லாத இந்தியாவில் மட்டுமே உள்ள அழிவின் விளிம்பில் இருக்கும் சில அரிய உயிரினங்கள் பற்றி இப்பதிவில் காணலாம்.

சிங்கவால் குரங்கு: சோலை மந்தி, கருங்குரங்கு என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காணப்படும். இவை அதன் வெள்ளை நிறத்திலான பிடரி பகுதியின் ரோமங்கள் மற்றும் கருப்பு நிற முகத்தினால் சிறப்பு பெற்றது. இவை மூன்று முதல் பத்து கிலோ எடை வரை இருக்கும். இதன் வால் பகுதியில் 25 செ.மீ. நீளம் வரை இருக்கும். இவை 20 முதல் 30 ஆண்டுகள் வரை வாழும். தமிழகத்தில் மேட்டுப்பாளையம் பகுதிகளில் காணப்படும் சிங்கவால் குரங்கு அழிவின் விளிம்பில் உள்ளது.

காஷ்மீர் ஸ்டேக்: ஹங்குல் என அழைக்கப்படும் காஷ்மீர் ஸ்டேக் ஒரு அரிய வகை சிவப்பு மான் இனமாகும். ஹங்குல் ஜம்மு காஷ்மீரின் தேசிய விலங்காகும். இவை டச்சிகாம் தேசிய பூங்காக்களில் மட்டுமே காணப்படுகிறது. ஸ்ரீ நகரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தப் பூங்காவில் ஹங்குல், மலை நரி மற்றும் இமயமலை செரோ ஆகிய அழிவின் விளிம்பில் இருக்கும் சில விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சங்காய் மான்: நான்கு கொம்புகளைக் கொண்ட இந்த சாங்காய் மான் மணிப்பூரில் உள்ள கெய்புல் லாம்ஜோ தேசிய பூங்காவில் உள்ளது. இந்த மான் இனத்தை காப்பாற்றும் பொருட்டு  மணிப்பூர் மாநிலத்தில் ஆண்டுதோறும் சங்காய் திருவிழா 2010 முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

காட்டெருமை
காட்டெருமைhttps://tamil.oneindia.com

இந்திய காட்டெருமை: இந்திய காட்டெருமை தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு விலங்கு. இவை வேட்டையாடப்படுதல், இறைச்சி, கொம்புகள் மற்றும் சுருங்கி வரும் வாழ்விடங்கள் ஆகியவற்றால் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம்: இவை இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் அதிகம் காணப்படுகின்றன. மருத்துவ குணம் நிறைந்த இவற்றின் கொம்புகளுக்காக இவை அதிகம் வேட்டையாடப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
வித்தியாசமான அமைப்பில் நவக்கிரகங்கள் காட்சி தரும் திருத்தலங்கள்!
சிங்கவால் குரங்கு

எறும்புத்தின்னி: உலகில் மருத்துவப் பலன்களுக்காக கடத்தப்படும் விலங்குகளில் இந்த எறும்புத்தின்னியும் ஒன்று. இந்த விலங்கின் எண்ணிக்கை மிகவும் குறைவாகிக் கொண்டே வருகிறது. இந்தியாவில் மணிப்பூரில் உள்ள தமெங்லாங்கில் எறும்புத்தின்னி எனப்படும் சீன பாங்கோலின் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நோல் கஹோரி: நோல்  கஹோரி என அழைக்கப்படும் பிக்மி பன்றிகள் இந்தியாவில் வாழும் அரிய வகை விலங்காகும். 10 அங்குலமே உயரமுள்ள இந்த சிறிய அளவிலான பன்றிகள் வாழும் ஒரே இடம் அசாமில் உள்ள மனாஸ் தேசிய பூங்காவில் மட்டும்தான். அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை வாழக்கூடிய இந்த குட்டை பன்றிகள் 200க்கும் குறைவாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com