டைனோசர்களின் அழிவுக்கு இதுவும் ஒரு காரணம்!

Reason for the extinction of the dinosaurs
Reason for the extinction of the dinosaurs

சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் இந்த பூமியில் கம்பீரமாக வாழ்ந்து கொண்டிருந்த டைனோசர் இனம், 65 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பூமியில் இருந்தே முற்றிலுமாக அழிந்த உயிரினமாக மாறியது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், குறிப்பிட்டு சொல்லப்படுவது விண் கற்கள் பூமியின் மேற்பரப்பில் மோதியதாலேயே இந்த இனம் அழிந்தது என்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது டைனோசர் இனம் அழிந்ததற்கு வேறு ஒரு காரணமும் உள்ளது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பூமியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளும், அதனால் காலநிலையில் ஏற்பட்ட அதிதீவிர மாற்றங்களுமே டைனோசர்களின் ஒட்டுமொத்த அழிவுக்குக் கூடுதல் காரணமாக இருந்திருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விண்கல் மோதியதில் டைனோசர்கள் இறுதியாக அழிவதற்கு முன்பிலிருந்தே, கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் நிலையை சந்தித்து வந்திருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் மத்திய மற்றும் மேற்கு இந்தியாவின் டெக்கான் டிராபிஸிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் அமெரிக்கா, நார்வே, ஸ்வீடன், இத்தாலி போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பங்கு பெற்றனர். இதற்கான இறுதி முடிவுகள் ஜெனரல் சயின்ஸ் ஆப் அட்வான்ஸ் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்:
புதுவகை டைனோசர் கால் தடம் பற்றிய ரகசியம் வெளியானது!
Reason for the extinction of the dinosaurs

சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலைகள் வெடித்ததன் மூலம் வெளியேறிய ஃபுளோரின் மற்றும் சல்பர் வாயுக்கள் வளிமண்டலத்தில் கலந்து காலநிலை மாற்றத்தை எக்குத்தப்பாக மாற்றியிருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்காக தக்காண பீடபூமியிலிருந்த பாறைகளை சோதித்துப் பார்த்தபோது, வளிமண்டலத்தில் சல்பர் மற்றும் ஃப்ளோரின் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, டைனோசர்களின் ஒட்டுமொத்த அழிவுக்கு எரிமலை வெடிப்பும் காரணமாக இருந்திருக்கும் என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com