

சிவப்பு ரோஜாக்கள் தினம் ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று கொண்டாடப்படுகிறது. காதல், பேரார்வம், மற்றும் மரியாதையின் உலகளாவிய அடையாளமான இந்த சிவப்பு ரோஜா மலரின் கலாச்சார வரலாற்றை கொண்டாடும் விதமாக இது கொண்டாடப்படுகிறது.
வரலாறு முக்கியத்துவம்.
பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய கலாச்சாரங்களில், சிவப்பு ரோஜாக்கள் காதல் தெய்வங்களான அப்ரோடைட் மற்றும் வீனஸ் உடன் நெருங்கிய தொடர்பு உடையவை.
விக்டோரியன் காலம்.
விக்டோரியன் காலத்தில் 'புளோரியா கிராபி ' எனப்படும் பூக்களின் மொழி பிரபலமாக இருந்தது. அப்போது அன்பை வெளிப்படுத்த வார்த்தைகளுக்குப் பதிலாக சிவப்பு ரோஜாக்கள் பரிசாக கொடுக்கப்பட்டன. வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை பூக்கள் மூலம் பரிமாறிக் கொள்ளும் வழக்கம் உருவானது அப்போது ஒருவருக்கு நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை எந்த வித தயக்கமும் இன்றி உணர்த்த ஒரு சிவப்பு ரோஜாவை பரிசளிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
காதலின் சின்னம் சிவப்பு ரோஜா.
காதலர்களின் இரத்தத்தில் இருந்து முதல் சிவப்பு ராஜாக்கள் முளைத்ததாக புராணக்கதைகள் கூறுகின்றன. இது நித்திய அன்பு மற்றும் பக்தியை குறிக்கிறது.
சிவப்பு ரோஜா தினம்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் வணிகமயமான காதலர் தினத்திற்கு அப்பால் சிவப்பு ரோஜாவின் அழகையும் அதன் குறியீட்டு அர்த்தங்களையும் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் நாள் தேசிய சிவப்பு ரோஜா தினம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் மலர் பிரியர்களால் கொண்டாடப்படுகிறது. எல்லா காலத்திலும் மிகவும் புகழ்பெற்ற மலரான சிவப்பு ரோஜாவைக் கொண்டாடுவதற்கென இந்த சிறப்பு நாளாக அனுசரிக்கப்படது. சிவப்பு ரோஜா தன்னகத்தே கொண்டுள்ள அழகு, , சக்தி மற்றும் ப குறியீட்டுத் தன்மையைக் கொண்டாடும் ஒரு நாள் இது.
மலர்களின் ராணி.
சிவப்பு ரோஜா அதன் அழகு மென்மையான வடிவம் , இனிய நறுமணம் பராமரிப்பதற்கு எளிதான தன்மை ஆகியவற்றிற்காக விரும்பப்படுகிறது. இது பெரும்பாலும் மலர்களை ரசிப்பவர்கள், அழகான விஷயங்களை விரும்பு பவர்கள் சிவப்பு ரோஜாவை சிறப்பானதாக ஆக்கும். அனைத்தையும் போற்றுவதற்காக இந்த நாளை ஒதுக்கி கொண்டாடுகிறார்கள்.
அரசியல் சின்னம்.
காலப்போக்கில் சிவப்பு ரோஜா அதன் அர்த்தத்தை தக்க வைத்துக் கொண்டு இலக்கியம் முதல் அரசியல் வரை அனைத்திலும் மையமாக விளங்கியது. சிவப்பு ரோஜா விசுவாசம் தூக்கம் வேற ஆர்வம் மட்டுமே வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது உதாரணம் இங்கிலாந்தில் ரோஜா போர்களின்போது அது ஒரு அரசியல் சின்னமாக மாறியது. அங்கு சிவப்பு ரோஜா லங்காஸ்டர்வம்சத்தை குறித்தது.
ரோஜா பரிசளித்தல்.
உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சிவப்பு ரோஜாக்களை பரிசளிப்பதன் மூலம் தேசிய சிவப்பு ரோஜா தினத்தின் அன்பையும், மகிழ்ச்சியையும் பரப்பலாம். அவர்கள் உங்கள் வாழ்க்கை துணையாகவோ குடும்ப உறுப்பினர்களாகவோ அல்லது நெருங்கிய நண்பர் களாகவோ இருக்கலாம். ஒரு சிவப்பு ரோஜா பூ மட்டுமே உங்கள் பாசத்தை வெளிப்படுத்தி அவர்களின் நாளை பிரகாசமாக்கும்.