பாட்டு பாடும் 'பத்தினி பறவை'!

Red-whiskered Bulbul
Red-whiskered Bulbul
Published on

நாம் வாழும் இந்த சுற்றுச்சூழலில் பல வகையான பறவையினங்கள் உள்ளன. அதில் நாம் பார்த்து தெரிந்துக்கொண்ட பறவைகள் குறைவு தான். அந்த வகையில் நாம் அடிக்கடி பார்க்கும் பறவைகளில் ஒன்று தான் இந்த புல்புல் பறவை. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயரை கொண்டு இந்த புல்புல் பறவை அழைக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதை சின்னான் என்று அழைப்பார்கள்.

சின்னான் பறவை இன்றும் இருக்கிறதா? அதை ஏன் பத்தினி பறவை என்று அழைக்கிறார்கள்? சின்னான் பறவை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை காணலாம்.

சின்னான்:

சின்னான் அல்லது செம்மீசைச் சின்னான் அல்லது சிவப்பு மீசை சின்னான் அல்லது செம்மீசைக் கொண்டைக்குருவி என்று பல பெயர்களால் இது அழைக்கப்படுகிறது. புல்புல் பறவை இனத்தில் கிட்டத்தட்ட 120க்கும் அதிகமான பறவைகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் அதிக அளவு காணப்படும் புல்புல் பறவையாக இந்த செம்மீசைச் சின்னான் அல்லது செம்மீசைக் கொண்டைக்குருவி இருக்கிறது. இது மித வெப்பமுடைய ஆசிய பகுதிகளில் காணப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை Red-whiskered Bulbul என்று அழைப்பார்கள். 

புல்புல் பற்றிய சுவாரசிய தகவல்கள்: 

ஆசிய பகுதி மட்டும் இல்லாமல் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு போன்ற பகுதிகளிலும் வாழ்கிறது. புதர் அதிகமாக உள்ள இடங்களில் இந்த பறவை காணப்படும். நீர்நிலைகள் அருகில் உள்ள காடு பகுதிகளில் காணப்படும். தற்போது அதிகமாக நகரப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்த புல்புல் பறவையின் தனிச்சிறப்பு என்னவென்றால் இந்த பறவைக்கு கொண்டை காணப்படும். மேலும் சிகப்பு நிறத்தில் மீசை இருக்கும். 

இதையும் படியுங்கள்:
காதலிக்காக வீடு கட்டி, வண்ணம் பூசும் பறவை! அடேங்கப்பா, இதுவல்லவோ உண்மையான காதல்!
Red-whiskered Bulbul

பழங்களையும், பூச்சிகளையும் விரும்பி உண்ணக்கூடிய இந்த பறவைகள், சில சமயங்களில் தேனையும் உணவாக உட்கொள்ளும். பழங்களின் விதைகளை எச்சங்கள் மூலம் வெளியேற்றுவதால் செடி, மரம் வளர்வதை ஊக்குவிக்கிறது. 

இது 20 சென்டிமீட்டர் நீளத்தில் சிறிய பறவையாக காணப்படுகிறது. சிறிய பறவையாக காணப்படும் இந்த புல்புல் பறவை, மரங்களின் கிளைகளில் புலப்படாதவாறு அமர்ந்து கொண்டு ஓசை எழுப்புகின்றன. 

மற்ற பறவைகள் போன்று இந்த பறவை கூச்சலிடாமல் இனிமையான குரலில் பாடல் பாடுவது போன்ற ஓசையை எழுப்புகின்றன. இந்த ஓசையை கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
காதலின் இலக்கணத்துக்கு உதாரணமாய்... வாழ்ந்தால் இப்படி வாழோனும் காதலர்களே!
Red-whiskered Bulbul

மேலும் இந்த பறவை தன் வாழ்நாளில் ஒரே இணையுடன் மட்டும் தான் வாழும். இதனால் இந்த பறவையை பத்தினி பறவை என்றும் அழைப்பார்கள்

இந்த பறவையால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் இந்த பறவை கூட்டமாக பறந்து சென்று பல பகுதிகளிலும் இனப்பெருக்கம் செய்வதால் ஆசியாவில் மட்டுமல்லாமல் பல பகுதிகளிலும் பரவி காணப்படுகிறது. புல்புல் பறவையின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com