பல்லுயிர் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வௌவால்களின் பங்கு!

Role of bats in environmental conservation
Role of bats in environmental conservation
Published on

லகெங்கிலும் 2000 வௌவால் இனங்கள் உள்ளன. வௌவால்கள் மட்டுமே பறக்கும் சக்தி உள்ள பாலூட்டிகள் ஆகும். இவை பல்லுயிர் பெருக்கத்திற்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும், விவசாயம் உள்ளிட்ட மனித நல்வாழ்க்கைக்கும் குறிப்பிடத்தக்க பங்கை வழங்குகின்றன.

மகரந்தச் சேர்க்கை: வௌவால்கள் சுற்றுச்சூழலுக்கு செய்யும் முக்கியமான சேவைகளில் ஒன்று மகரந்த சேர்க்கை. குறிப்பாக பழம் தின்னும் வௌவால்கள் மற்றும் தேன் உண்ணும் வௌவால்கள் பல்வேறு தாவரங்களுக்கு முக்கியமான மகரந்தச் சேர்க்கைகள் ஏற்பட உதவுகின்றன. நீலக் கற்றாழைச் செடிகளின் மகரந்தச் சேர்க்கைக்கு மெக்சிகன் நீண்ட மூக்கு வௌவால்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், வௌவால்கள் இரவில் பூக்கும் பல்வேறு வகையான பூக்களின் இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது. தேன் உண்ணும் வௌவால்கள் தற்செயலாக மகரந்தத்தை ஒரு மலரில் இருந்து இன்னொரு மலருக்கு மாற்றி மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது. வெப்ப மண்டல மற்றும் பாலைவன சுற்றுச்சூழல் அமைப்புகளில் வௌவால்கள் மிகவும் இன்றியமையாதவை.

பூச்சிக் கட்டுப்பாடு: வௌவால்கள் ரசாயன பூச்சிக்கொல்லிகளின் தேவைகளை குறைக்கும். ஏனென்றால், இவை இயற்கையான பூச்சி மேலாண்மையை வழங்கும் திறன் பெற்றவை. ஒரே இரவில் நூற்றுக்கணக்கான அந்துப்பூச்சிகள், வண்டுகள் மற்றும் கொசுக்கள் போன்ற விவசாயப் பூச்சிகளை உண்ணுகின்றன. இந்தப் பூச்சிக் கட்டுப்பாடு விவசாய அமைப்புகளில் மிகவும் மதிப்பு மிக்கது பயிர்களை பூச்சி சேதத்தில் இருந்து பாதுகாத்து பொருளாதார இழப்புகளை கணிசமாகக் குறைக்கின்றன. வௌவால்களின் வாழ்விடங்களுக்கு அருகில் அமைந்துள்ள பண்ணைகள் குறைவான பூச்சித் தொல்லைகளை அனுபவிக்கின்றன. இதனால் அதிகப் பயிர் விளைச்சல் மற்றும் பூச்சிக்கொல்லி செலவுகள் குறைக்கப்படுகின்றன. இது சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, நிலையான விவசாய நடைமுறைகளிலும் வௌவால்களின் பங்கு முக்கியமானது.

விதைகளைப் பரப்புதல்: வௌவால்கள் விதைப் பரவுதலிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, வெப்ப மண்டல மழைக்காடுகள் மற்றும் பிற அடர்ந்த தாவரப் பகுதிகளில் பழமுண்ணும் வௌவால்கள் பல வகையான பழங்களை உட்கொள்வதோடு அவற்றின் கழிவுகள் மூலம் விதைகளை வெகு தூரம் வரை பரப்ப உதவுகின்றன.

பல்லுயிர்ப் பெருக்கம்: தாவர பல்லுருவாக்கம் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளை பராமரிப்பதற்கு இந்த இயற்கை செயல்முறை மிகவும் முக்கியமானது. துரியன் மற்றும் அத்தி போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் உட்பட பல மர இனங்கள் விதை பரவலுக்கு வௌவால்களையே நம்பியுள்ளன. பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு வௌவால்கள் பெரிதும் உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
எலும்பு பலவீனப் பிரச்னைக்குக் காரணமும் அதைத் தீர்க்கும் உணவுகளும்!
Role of bats in environmental conservation

உரமாகும் எச்சங்கள்: வௌவால்களின் எச்சங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அவற்றின் கழிவுகள் குயானோ என்று அழைக்கப்படுகின்றது. இதில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. அதனால் இது ஒரு நல்ல உரமாகப் பயன்படுகிறது. இவை தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. மண்ணுக்கு நல்ல உரமாகவும் பயன்படுகிறது. இயற்கை உரமாக இயற்கை விவசாய முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. அதில் அதிக நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளடக்கம் இருப்பதால் ரசாயன உரங்களுக்கு மாற்றாகக் கருதப்படுகிறது.

வன விலங்குகளுக்கு நன்மை: சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு அப்பால் வௌவால்கள் ஈர நிலங்கள் மற்றும் காடுகள் போன்ற வன விலங்குகளுக்கு முக்கியமான குறிப்பிட்ட வாழ்விடங்களை பாதுகாக்க உதவுகின்றன. ஆரோக்கியமான பூச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலமும் தாவர வளர்ச்சியை ஆதரிப்பதன் மூலமும் வௌவால்கள் வாழ்விடங்களின் நிலைத்தன்மை மற்றும் மீள் தன்மைக்கு பங்களிக்கின்றன.

வௌவால்கள் தங்கள் வாழ்விட இழப்பு, கால நிலை மாற்றம் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. நகர மயமாக்கல் பூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் காடு அழிப்பு ஆகியவை அவற்றின் வீழ்ச்சியை மேலும் அதிகரிக்கின்றன. சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் பல்லுயிர்ப் பெருக்கத்தை ஆதரிப்பதிலும் பெருமளவு உதவும் வௌவால்களை அவசியம் பாதுகாக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com