ஆண் பாதி, பெண் பாதி… அறிய வகை பறவை கண்டுபிடிப்பு!

rose-brested grosbeak
rose-brested grosbeak

பல அதிசய பறவைகளை நாம் கண்டிருக்கிறோம். ஆனால், அதிசயத்திலும் அதிசயம்தான் ஒரு பக்கம் ஆணாகவும், மற்றொரு பக்கம் பெண்ணாகவும் இருக்கும் இந்தப் பறவை.

பாடும் பறவை என்றப் பட்டப்பெயரால் அழைக்கப்படும் இந்த பறவை வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டுள்ளது. இந்த வகையான பறவைக்கு பெயர் Rose-brested grosbeak. Pheucticus ludovicianus என்பது இதன் பயலாஜிக்கல் பெயராகும். கருப்பான தலை, இறக்கைகள் கொண்ட இந்த பறவைகளை எளிதாக கண்டறிந்துவிடலாம். ஆண் பறவை சிவப்பு நிற இறக்கைகளை கொண்டிருக்கும். பெண் பறவை மஞ்சள்  நிற இறக்கைகளை கொண்டிருக்கும். மேலும் அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும்.

ஆண் பறவை சுமார் 11-13 அங்குல இறக்கைகளுடன் 7-8 அங்குல நீளம் கொண்டவை. இனவிருத்திக் காலத்தில், ஆண் பறவைகள் செழுமையான, மெல்லிசைப் பாடலுக்குப் பெயர் பெற்றவை. இது தெளிவான, விசில் போன்ற மெல்லிசை பாடல்களை பாடும். இந்த இசை காடெங்கிலும் நீண்ட தூரம் வரைக் கேட்கும்.

அதாவது , ”சின்ராசோட பாட்டக்கேட்டுத்தான் எல்லா குட்டிகளும் குஞ்சுகளும் தூங்கும்.”

இந்த பறவைகள் புலம்பெயர்ந்தவை, வசந்த காலத்தில் வடக்கு நோக்கிச் சென்று இனப்பெருக்கம் செய்யும். பின் மீண்டும் இடங்களுக்குத் திரும்புவதற்கு முன்பு மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் தங்கள் குளிர்காலத்தை செலவிடுகின்றன.

இவை முதன்மையாக விதைகள், பெர்ரி, பூச்சிகள் மற்றும் எப்போதாவது சிறிய பழங்களை எடுத்துக்கொள்ளும்.

இதையும் படியுங்கள்:
வௌவால்களின் குழந்தைகள் காப்பகமாக விளங்கும் உலகின் மிகப்பெரிய வௌவால் குகை!
rose-brested grosbeak

இந்தப் பறவை இனத்தில்தான் ஒரு அதிசய பறவை கண்டறியப்பட்டுள்ளது. எப்படி மனித இனத்தில் ஆண் பெண் மற்றும் இருபாலினத்தவர்கள் இருக்கிறார்களோ? அதேபோல் ஆண் பறவை, பெண் பறவை மட்டுமே இருந்த பறவை இனத்தில், தற்போது ஒரு இருபாலின பறவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பறவையின் ஒருபக்கம் ஆண் இறக்கைக் கொண்ட சிவப்பு நிறமும், இன்னொரு பக்கம் பெண் இறக்கை கொண்ட மஞ்சள் நிறமும் உள்ளது. ஆகையால் இந்த பறவை இருபாலின பறவை என்பது தெரியவந்துள்ளது.

இயற்கையின் அதிசய படைப்புகளில் தற்போது இதுவும் ஒன்றாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com