விவசாயிகளை பணக்காரராக்கும் குங்குமப்பூ சாகுபடி!

Saffron.
Saffron.

கிலோ மூன்று லட்சத்திற்கு மேல் விற்பனையாகும் குங்குமப்பூ சாகுபடி மூலமாக விவசாயிகள் பல லட்சம் ரூபாயை வருமானமாக ஈட்ட முடியும்.

விவசாயம் எப்போதுமே நிலையற்ற வருமானம் கொண்ட தொழில் என்று விவசாயிகளால் கூறப்படுகிறது. ஆனால் விவசாயத் துறையில் வந்துள்ள புதிய கண்டுபிடிப்புகள், முன்கூட்டியான தகவல்கள் மூலம் பாதுகாப்பான விவசாயத்தை மேற்கொள்ள முடியும் என்று கூறுகின்றனர் வேளாண் வல்லுனர்கள். மேலும் விவசாயத்தில் அதிக லாபம் தரக்கூடிய பொருட்களும் இருக்கின்றன. அவற்றை அதற்கு ஏற்ற சூழல் உருவாகும் பொழுது பயிரிட்டால், ஆண்டிற்கு பல லட்சங்களை வருமானமாக ஈட்ட முடியும் என்றும் கூறுகின்றனர்.

விவசாயிகளுக்கு அதிக வருமானம் தரக்கூடிய சாகுபடி பயிராக உள்ளது குங்குமப்பூ. இந்தியாவில் குங்குமப்பூ குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர் போன்ற ஒரு சில மாநிலங்களிலே அதிகம் பயிரிடப்படுகிறது. இவற்றை பயிரிடும் விவசாயிகள் அதனுடைய முக்கியத்துவம் அறிந்து, அவற்றை பாதுகாப்பாக பயிரிட்டு சாகுபடி செய்கின்றனர். இதனால் ஆண்டிற்கு பல கோடிகளை இவர்கள் வருமானமாக ஈட்டுகின்றனர்.

வளர்ந்த மற்றும் அரபு நாடுகளில் குங்குமப்பூ அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குங்குமப்பூ கிலோ 3 லட்சம் முதல் அதற்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

மிதமான வெயில், சராசரி மழை ஆகியவை குங்குமப்பூ வளர ஏற்ற சூழலை உருவாக்கும். குங்குமப்பூ தண்டு இல்லாத பயிர் வகையாகவும். இது 15 முதல் 25 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும். இதன் மெல்லிய புல் போன்ற இலையில் பூக்கும் நீளம், ஊதா, வெள்ளை பூக்களில் இருந்து குங்குமப்பூ கிடைக்கிறது. ஒரு செடியில் 2 முதல் 3 பூக்கள் வரை மட்டுமே பூக்கும். இதன் அபரிவிதமான மருத்துவ குணமும், மிகக் குறைந்த உற்பத்தியும் இதனுடைய விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

இதையும் படியுங்கள்:
சிவப்பு தங்கம் - குங்குமப்பூ!
Saffron.

இப்படி குங்குமப்பூ சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிகப்படியான லாபத்தை சம்பாதித்ததே வரலாறு ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com