சிவப்பு தங்கம் என்று அழைக்கப் படும் குங்குமப்பூவில் ஆன்டி ஆக்சிடன்ட், மாங்கனீசு மற்றும் வைட்டமின் சி அதிகளவில் உள்ளன.
தினசரி உணவில் குங்குமப்பூவை சேர்ப்பது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை தடுக்கிறது.
மன உளைச்சல், மனச் சோர்வு உள்ளவர்களுக்கு குங்குமப் பூவினை எடுத்துக் கொள்ளும்போது செரடோனின் என்ற பொருள் உடலில் சுரப்பதன் மூலம் மன உளைச்சல் நீங்குகின்றது.
வயதானவர்களின் பார்க்கும் திறனை அதிகரிப்பதில் குங்குமப்பூ முக்கியப்பங்கு வகிக்கிறது.
குங்குமப்பூவுடன் சிறிதளவு சந்தனம் மற்றும் 2 ஸ்பூன் பால் இவை மூன்றையும் கலக்கி முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவந்தால் உங்கள் முகம் பொலிவாக இருக்கும்.
நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.
குங்குமப்பூவில் ஆன்டிசெப்டிக் தன்மை உள்ளது. இது நரம்பு மண்டலத்தை இறுக்கத்திலிருந்து தளர்த்துகிறது. இது இயற்கையான நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது.
மூட்டு வலி உடையோருக்கு குங்குமப் பூ எடுத்துக் கொள்வதன் மூலம் மூட்டு சதை வீக்கங்கள் குறைகின்றது. மூட்டு பலவீனம் நீங்குகின்றது.
குங்குமப்பூவை தண்ணீரில் கலந்து குடிப்பதால் முடி வலுவடையும். மேலும் இது முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகின்றது.
குங்குமப்பூவில் காணப்படும் குரோசின் மற்றும் குரோசெடின் ஆகிய ரசாயன கலவைகள், நினைவாற்றல் மற்றும் மூளை செயல்பாடுகளை மேம்படுத்த உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
குங்குமப்பூ குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் 5 மாதம் முதல் 9 மாதம் வரை குங்குமப்பூவை சேர்த்துகொள்ளலாம். இது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், இரத்ததை சுத்திகரிக்கவும் உதவுகிறது. இரத்த சோகை ஏற்படுவதும் குறையும். சிசுவிற்கும், தாய்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.
குங்குமப்பூவில் தியாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற தாதுக்கள் நிரம்பியிருக்கின்றன. இவை இதய ஆரோக்கியத்தை உறுதி செய்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது
ஆஸ்துமா நோயாளிகளுக்கு குங்குமப் பூ ஒரு வரப்பிரசாதம். நுரையீரலில் உள்ள திசுக்களின் வீக்கத்தினை குறைத்து ரத்த நாளங்களை சீராக வைக்கின்றது. இதனால் சுவாசக் குழாய்கள் சீராக இயங்குகின்றன.
குங்குமப் பூவினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அதனால் குறைவான அளவு எடுத்துக்கொள்வது நல்லது.