
காலிபோர்னியாவில் உள்ள Death valley national parkல் Racetrack playa என்ற இடத்தில் இருக்கும் கற்கள் தானாகவே நகர்ந்து செல்கிறது. இந்த கற்களை 'Sailing stones' என்று அழைக்கிறார்கள். இந்த கற்கள் சின்னதாக இருக்காது. கிட்டத்தட்ட 300-400 கிலோ இருக்கும் கற்கள் கூட தானாக நகர்கிறது. இதற்கான காரணம் என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம்.
இந்த நகரும் கற்கள் தங்கள் போகும் வழிகளில் ஒரு டிராக்கை உருவாக்கிக் கொண்டே நகர்ந்துச் செல்கிறது. இதை பார்த்த மக்களுக்கு இந்த நிகழ்வு எதனால் நடக்கிறது என்றே தெரியவில்லை. சிலர் இது அதிக காற்று அடிப்பதால் நகர்கிறது என்று நினைத்தனர், இன்னும் சிலரோ இது புவியீர்ப்பு விசைக் காரணமாக நிகழ்கிறது என்று சொன்னார்கள். இன்னும் சில மக்கள் ஒருப்படி மேலே சென்று இது ஏலியனின் வேலையாக இருக்கும் என்று நம்பினார்கள்.
மிக பெரிய கற்கள் யாருமே நகர்த்தாமல் எப்படி தானாக நகர்ந்து செல்ல முடியும்? என்று ஆராய்ச்சியாளர்கள் குழம்பினார்கள். எனவே, 2014 ல் ஆராய்ச்சியாளர்கள் அந்த கற்களை ஆராய்ச்சி செய்ய முடிவெடுக்கிறார்கள். அந்த கற்களின் மீது GPS track வைத்து அதை சுற்றி Time-lapse Camera வை வைத்து அந்த கற்கள் எதனால் நகர்கிறது என்பதை கவனிக்கத் தொடங்கினார்கள்.
இந்த கற்கள் நகர்வதற்கான காரணம், Death valley national park மிகவும் வறட்சியாக இருக்கும் இடமாகும். எனவே, குளிர்ச்சியான Winter season இன் போது அந்த கற்களை சுற்றியும், அதன் அடிபாகத்திலும் ஐஸ் உருவாகிறது. இரவு நேரத்தில் உருவான ஐஸ் அடுத்த நாள் காலை சூரிய ஒளியின் போது உருகத்தொடங்குகிறது.
அந்த நேரம் காற்று அடிக்கும் போது இந்த கற்கள் தரையில் வழுக்கிக் கொண்டு போய்விடுகிறது. இது மிகவும் மெதுவாக நடக்கக்கூடிய நிகழ்வு தான். இந்த நிகழ்வு வெறும் கண்களில் பார்க்கும் போது தெரியாது.
ஆனால், நேரம் ஆக ஆக கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து ஆரம்பத்தில் இருந்த இடத்தில் இருந்து 100 முதல் 200 அடி கூட தள்ளி சென்றுவிடும். இயற்கையின் அதிசயத்தை பார்த்தீர்களா? அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.