கரைகளே இல்லாத விசித்திரக் கடல்! அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவே ஒரு 'மிதக்கும் தீவு' - சர்காசோ கடல்!

sargasso-sea
sargasso-sea
Updated on

டல் என்றால் அதற்கு கரைகள் இருக்கும். ஆனால் கரைகளே இல்லாத ஒரு கடல் வட அட்லாண்டிக் பகுதியில் மையப்பகுதியில் உள்ளது விசித்திரமான விஷயம்தானே. கண்டங்களால் சூழப்படுவதற்குப் பதிலாக நான்கு பெரிய நீரோட்டங்களால் சூழப்பட்ட இந்த கடல் சர்காசோ கடல் என்று அழைக்கப்படுகிறது‌. உலக வரைப் படத்தில் எந்தக் கடலை எடுத்தாலும் அதற்கு நிலப்பரப்பு எல்லையாக இருக்கும்.‌ ஆனால் அட்லாண்டிக் பெருங்கடல் நடுவே கரைகளே இல்லாத ஒரு விசித்திரக் கடலாக இருக்கிறது இந்த சர்காசோ கடல்.

சுற்றிலும் நிலத்திற்குள் பதிலாக நான்கு பெரும் நீரோட்டங்களையே எல்லையாகக் கொண்டு ஒரு நீல நிறத் தீவு போல் காட்சியளிக்கும் இந்தக் கடல் இன்று மனிதகுலத்திற்கு ஒரு பேராபத்தை எச்சரித்தும் கொண்டிருக்கிறது‌. கரைகளே இல்லாத இந்தக் கடலின் மேற்பரப்பில் சர்காசம் என்ற பழுப்பு நிறப் பாசிகள் காடுபோல் மிதக்கும்.

இதனால் இக்கடல் ஒரு மிதக்கும் சரணாலயமாகத் திகழ்கிறது.‌ அரியவகை ஆமைகள், ஈல் மீன்கள் மற்றும் சுறாக்களுக்கு இக்கடலே பிரசவ அறை. இதுவே பாதுகாப்பான புகலிடம்‌ ஆனால் கடந்த 40ஆண்டுகளாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு இந்த அமைதியான சொர்க்கத்தில் ஒரு பெரும் புயல் வீசுவதை உறுதிபடுத்தியுள்ளது

பெர்முடா அட்லாண்டிக் டைம் ஆய்வாளர்கள் 1983லிருந்து சேகரித்த தரவுகள் சொல்லும் உண்மைகள், கடலின் மேற்பரப்பு வெப்பநிலை சுமார்0.97டிகிரி அதிகரித்து உள்ளது‌. இது கேட்பதற்குச் சிறியதாகக் தெரிந்தாலும், கடல் சூழவியலில இது ஒரு பெரிய மாற்றம் .நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு 6சதவீதம் குறைந்துள்ளது. இந்தக் கடல்வாழ் உயிரினங்கள் மெல்ல மெல்ல மூச்சு திணறுவதைக் காட்டுகிறது.

நாம் வளிமண்டலத்தில் வெளியேற்றும் கார்பன்டை ஆக்சைடை இக்கடல் உறிஞ்சுவதால் கடல் நீரின் வேதியல் பண்பே மாறிவிட்டது. நீர் அதிக அமிலத்தன்மை அடைந்ததால் சிப்பிகள் மற்றும் எலுபம்புக்கூடு கொண்ட உயிரினங்கள் தங்கள் கூடுகளை உருவாக்க முடியாமல் தவிக்கின்றன. இக்கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப் படுகின்றன. ஒரு சதுர மைல் பரப்பிற்கு சுமார் 5லட்சம் பிளாஸ்டிக் துண்டுகள் மிதப்பதாக தகவல்கள் கூறுகின்றன. கப்பல்கள் திமிங்கிலத்தை சிதைக்கின்றன.

இதையும் படியுங்கள்:
காதலில் முழங்காலிட்டு ப்ரபோஸ் செய்யும் முறை: வரலாற்று பின்னணியும் லீப் ஆண்டு ரகசியங்களும்!
sargasso-sea

சர்வதேசக் கடல் என்பது வெறும் தண்ணீர் பரப்பு மட்டும் அல்ல. அது உலகின் காலநிலை கண்காணிப்புக் கோபுரம் உலகெங்கும் உள்ள ஈல் மீன்கள் இனப்பெருக்கத் திற்காகத் தேடிவரும் இடம் ஒரே இடம் இது. இங்கு மாற்றம் ஏற்பட்டால் ஒரு உயிரினமே அழிந்துவிடும். துரதிஷ்டவசமாக இக்கடல் சர்வதேச எல்லைகளுக்கு அப்பால் இருப்பதால் இதைப் பாதுகாக்க எந்ததனிநாடுக்கும் அதிகாரம் இல்லை.

மனிதர்களின் பேராசையால் உருவான கார்பன் வெளியேற்றம் உலகின் மிகத் தூய்மையான ஒரு பகுதியை அமிலக் குழம்பாக மாற்றிக்கொண்டிருக்கிறது. அட்லாண்டிக் இந்த தங்கக்காடு அழிந்தால் அதன் பாதிப்பு நம் வீட்டு வாசலையும் தேடிவரும் என்பதே கசப்பான உண்மை. சூழ்வியல் ஆய்வாளர்கள் இந்த அரிய உலகின் விசித்திரமான கடல் பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கோண்டு வருகிறார்கள். உலகிலேயே கரைகள் மற்றும் துறைமுகம் இல்லாத அதிசயமான கடல் இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com