சவுதி அரேபியா: பாலைவனம் சோலைவனமாக மாறப்போகும் அதிசயம்!

சவுதி அரேபியா தனது 95 சதவீத பாலைவன நிலப்பரப்பை பசுமை காடுகளாக மாற்ற 1000 கோடி மரங்களை நடும் அதிசய திட்டத்தை விளக்குகிறது.
சவுதி அரேபியா | Saudi Arabia
சவுதி அரேபியா | Saudi ArabiaAI Image
Updated on

சவுதி அரேபியா, 95% பாலைவனமாக உள்ள தன் நிலப்பரப்பை மீண்டும் பசுமை அரேபியாவாக மாற்றும் நீண்டகால திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 2030க்குள் 60 கோடி மரங்கள், மொத்தத்தில் 1,000 கோடி மரங்கள் நடும் இலக்குடன், பனை, அத்தி, மாதுளை, சிட்ரஸ் போன்ற பூர்வீக மரங்களை நட்டு, சொட்டு நீர் பாசனம், மழைநீர் சேமிப்பு, கழிவு நீர் மறுசுழற்சி போன்ற நவீன முறைகள் மூலம் பல்லுயிர் பெருக்கத்தை நோக்குகிறது.

சவுதி அரேபியா தன் பாலைவனப் பகுதி நிலப்பரப்புகளை அடியோடு மாற்றி மழை தாவரங்கள் வளரும் பசுமை காடுகளாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்காக நாடு முழுவதும் 1,000 கோடி (10 billion) மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் 95% நிலப்பரப்புகள் மணல்கள் நிறைந்த பாலைவனமாகும். நாடோடி வாழ்க்கை மற்றும் ஒட்டகப் பயணம் போன்றவை தான் இந்தப் பகுதியின் அடையாளங்களாகும். அதை அப்படியே தலைகீழாக மாற்றி பசுமை தாவரங்கள் நிறைந்த தீபகற்பகமாக மாற்றுவது தான் சவூதி அரேபியாவின் தற்போதைய லட்சியம்.

தற்காலத்தில் பாலைவனமாக இருக்கும் சவுதி, ஒரு காலத்தில் பசுமை அரேபியாவாக இருந்தது என்கின்றனர் விஞ்ஞானிகள். அப்போது மழை தவறாமல் பெய்யுமாம். காலப்போக்கில் சுற்றுச்சூழலின் மாறுபாடு காரணமாக, தாவரங்கள் அழிந்து பாலைவனப் பகுதியாக மாறியதாம்.

இதையும் படியுங்கள்:
ராத்திரியை விட பகல்லதான் பாம்புகள் அதிகம் கடிக்குமாம்... உஷார் மக்களே!
சவுதி அரேபியா | Saudi Arabia

இதனால் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர நீண்ட கால திட்டத்துடன் சவுதி அரேபியா அரசு களம் இறங்கி உள்ளது. இதற்கான திட்டத்தை 2021 இல் சவுதி அரேபியாவின் இளவரசர் மற்றும் பிரதமருமான முஹம்மது பின் சல்மான் துவக்கி வைத்தார். அதன்படி கடந்த ஆண்டு ஜூலை வரை சவுதி அரசு பல மில்லியன் மரங்கள் நடப்பட்டதாக அறிவித்துள்ளது.

வரும் 2030க்குள் 60 கோடி மரங்களை நட்டு வளர்ப்பதற்கான பணிகள் சீராக நடந்து வருவதாக சவுதியின் வேளாண் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

பாலைவனப் பகுதியில் எப்படி மரம் வளர்க்க முடியும் என்பது அனைவரும் கேட்கக்கூடிய ஒன்று. அங்கு மரம் வளர்ப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மழைப்பொழிவு குறைவாக இருக்கும்; வெயில் அதிகமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் மரம் வளர்ப்பது என்பது கடினம்.

இதற்காக சவுதி அரசு இரண்டு ஆண்டுகளாக திட்டம் தீட்டியது. அதை வைத்து தங்கள் நாட்டில் நிலவும் தட்பவெட்ப சூழலுக்கு ஏற்ற வகையில் வறட்சியை தாங்கி நிற்கும் பூர்வீக மரங்களை வளர்க்கத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு பூர்வீக தாவர இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன; மீட்கப்பட்டு வருகின்றன.

சவுதி அரேபியா | Saudi Arabia
சவுதி அரேபியா | Saudi ArabiaAI Image

குறிப்பாக பனை, அத்தி, மாதுளை, சிட்ரஸ் வகை மரங்கள் அந்நாட்டு அரசு நட்டு வருகிறது. இந்த மரங்கள் உணவு பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன. முதல் கட்டமாக 2024 முதல் 2030 வரை குறைந்த மனித தலையீட்டுடன் அங்கு மரம் வளர்க்கும் பணிகள் நவீன தொழில்நுட்ப உதவியுடன் நடந்து வருகிறது.

இதற்காக மரங்கள் வளர்வதற்கு ஏற்றபடி அரை சந்திர வடிவில் குழிகள் அல்லது படிக்கட்டுகள் போன்ற அணைகள் கட்டி அதில் மழை நீரை சேமித்து வைக்கும் முறை மேற்கொள்ளப்படுகிறது. 400 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த பாரம்பரிய முறைகளையும் மரம் வளர்ப்புக்காக பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

செடிகளை நாற்றங்காலில் வளர்த்து பின்னர் அதனை நெடுஞ்சாலைகள் மழைக்காடுகள் தேசிய பூங்காக்கள் பள்ளத்தாக்குகள் போன்ற இடங்களில் நடுகின்றனர்.

வறண்ட பகுதிகளில் நீர் பற்றாக்குறையை சமாளிக்க சொட்டு நீர் பாசனம் போன்ற மேம்பட்ட முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
"சுத்தமான காற்றுள்ள பகுதி" என்று நம் முன்னோர்கள் அடையாளப்படுத்தியது எந்த இடம் தெரியுமா?
சவுதி அரேபியா | Saudi Arabia

கழிவு நீரை மறுசுழற்சி செய்து அந்த நீரையும் பயன்படுத்தி வருகின்றனர்.

மழை நீரை சேமித்து வைக்க தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த நீரை ஆவியாகாமல் தடுக்கும் செயலை வைத்திருக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

இந்த முறையில் 2030க்குள் 60 கோடி மரங்கள் நட திட்டமிட்டுள்ளனர்.

இதன் மூலம் பாலைவனப் பகுதி பசுமையாக மாறினால் அங்கு பல்லுயிர் பெருக்கம் ஏற்படும்.

இதன் மூலம் 1,000 கோடி மரங்களை வளர்க்கும் திட்டத்தையும் சவுதி அரேபியா துவக்கி உள்ளது.

உலகளாவிய காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், வறண்ட நிலப்பரப்புகளை வளமான சுற்றுச்சூழல் அமைப்பாக மாற்றவும் உதவும் எதிர்காலத்துக்கான வழிகாட்டியை வாசகர்கள் இதன் மூலம் அறிந்துகொள்கிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com