

கடல் மூரைகள் உயிரினத்தைப் பற்றிய தகவல்கள் மற்றும் பயன்கள்.
பிரபஞ்ச படைப்பில் மனிதர்களை வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு நிலத்தில் வாழும் உயிரினங்களும் நீரில் வாழும் உயிரினங்களும் பல வினோதமான, வித்தியாசமான வாழ்க்கை முறை மற்றும் தோற்றத்தை கொண்டுள்ளன.
நிலத்தில் வாழும் உயிரினங்களைப் போலவே கடலிலும் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. அவைகள் பார்ப்பதற்கு மிகவும் அதிசயம் மற்றும் அபூர்வமான உயிரினங்களாகவே உள்ளன. இந்த மூரை உயிரினங்கள் பார்ப்பதற்கு குழந்தைகள் விளையாடும் பொம்மை போல் இருக்கின்றன.
இவைகள் பார்ப்பதற்கு விசித்திரமாக முட்கள் நிறைந்த பந்து போன்ற அமைப்பு கொண்டவை. இவைகளை மீன்கள் பிடிப்பது போன்று வலைகளை வீசி பிடிக்க முடியாது. கடலுக்கு அடியில் சென்றுதான் பாறைகளுக்கு இடையில் வாழும் மூரை உயிரினங்களை பிடித்து வர முடியும். இந்த உயிரினங்களுக்கு முதுகெலும்பு கிடையாது மற்றும் உடலைச் சுற்றிலும் முட்கள் நிறைந்த கடல் வாழ் உயிரினம் ஆகும்.
இது ஸ்டார் பிஷ் வகையைச் சார்ந்த ஒரு கடல் வாழ் உயிரினம் ஆகும். இவைகள் பாறைகள் அதிகமாக இருக்கக்கூடிய இடத்தில் வாழக்கூடியவை. இவைகளின் உடம்பில் இருக்கும் முட்களைப் பயன்படுத்தி இவை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெர்ந்து செல்கின்றன. இந்த மூரை உயிரினம் உணவு பொருளாக கடல் தாவரங்கள் மற்றும் சின்ன சின்ன மிதவை நுண்ணுயிரிகளை சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன.
இந்த மூரை உயிரினம் மிகுந்த மருத்துவ குணம் உடையதாக உள்ளது. இதில் அதிக அளவு புரோட்டின் உள்ளதால் சதைகளை ரிப்பேர் செய்து உடலுக்கு நன்மையைத் தருகின்றன. மற்றும் ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் இவற்றை சாப்பிடுவதன் மூலம் விந்தணு எண்ணிக்கை இயற்கையாகவே அதிகரிக்கிறது. மேலும் இவற்றை உண்பது புண்களை குணப்படுத்தவும் உதவுகிறது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகிறது. இவைகளை உட்கொள்வது மூல நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வகை மூரை உயிரினத்தை உடைத்து உள்ளே இருக்கும் மஞ்சள் நிற சதை போன்ற பகுதியை இவற்றின் உண்ணக்கூடிய பகுதியாகும். இவை கடலில் வாழும் தேவையற்ற களைகளை சாப்பிடுவதால் கடல் சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்க இவை பெரிதும் உதவுகின்றன.
இவை உலகெங்கிலும் சுமார் 950 வகையான கடல் ஆர்சின்கள் கடலில் காணப்படுகின்றன. இவைகளுடைய இனப்பெருக்க முறையானது ஆண் பெண் மூறைகள் முட்டைகளைக் கடலில் ஒன்றிணைத்து நிகழும் ஒரு வெளிப்புற கருவுறுதல் முறையாகும். இந்த மூரை உயிரினங்களை அப்படியே சாப்பிடலாம் இல்லையெனில் குழம்பு அல்லது பொரியல் செய்தும் சாப்பிடலாம். இவற்றில் அதிக அளவு நன்மைகள் நிறைந்துள்ளன.