டிஜிட்டல் விவசாயத்தின் ஏழு பயன்பாடுகள்!

டிஜிட்டல் விவசாயத்தின் ஏழு பயன்பாடுகள்!
Published on

திநவீன கண்டுபிடிப்புகள் தற்போது அனைத்துத் துறைகளிலும் மேலோங்கி வருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் உலகில் மிகப்பெரிய புரட்சி நடத்தத் தொடங்கி இருக்கிறது. இதன் வழியாக அனைத்துத் துறைகளும் கணினி மயமாக மிக வேகமாக மாறி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவின் பிரதான தொழில்களில் ஒன்றான விவசாயம் சந்திக்கும் பல்வேறு இன்னல்களைக் களையும் பொருட்டு விவசாயத்தில் டிஜிட்டல் முறையைப் பயன்படுத்த இந்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ‘இன்டர்நெட் ஆப் திங்ஸ்’ வலை அமைப்பு மூலம் விவசாயத்தில் தற்போது நிலவும் ஆட்கள் பற்றாக்குறையை பெருமளவில் குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக IoT சென்சார் சாதன செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் செயலி மூலம் விவசாயத்தின் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் சென்சார் மென்பொருட்களை கட்டுப்படுத்தி இயந்திரங்களை செயல்படுத்தவும் விவசாயத்தின் அனைத்து படிநிலைகளிலும் பணியாற்றவும் முடியும்.

இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT- internet of things) செயலி மூலம் விவசாயத்தில் மேற்கொள்ள முடியும் எனக் கூறப்படும் செயல்பாடுகளைக் காண்போம்.

1. பயிர் கண்காணிப்பு: புகைப்படம், ட்ரோன் தரவு, சென்சார் ஆகியவற்றைக் கொண்டு பயிர்களின் நிலை, நோய் பாதிப்பு, பூச்சி பாதிப்பு, வானிலை பாதிப்பு, நீர் தேவை ஆகியவற்றை துல்லியமாக அறிய முடியும்.

2. கால்நடைகள் மேலாண்மை: டிஜிட்டல் முறையில் கால்நடைகளுக்குத் தேவையான உணவு, அவற்றின் உடல் நிலை, பாதுகாப்பு ஆகியவற்றை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும்.

இதையும் படியுங்கள்:
அரிய வகை கருப்பு வைர ஆப்பிள் பற்றி தெரியுமா?
டிஜிட்டல் விவசாயத்தின் ஏழு பயன்பாடுகள்!

3. துல்லியமான விவசாயம்: விவசாயத்துக்குத் தேவையான பொருட்களை சரியான அளவில், சரியான நேரத்தில் விளைநிலங்களுக்கு அளிக்க முடியும்.

4. ஸ்மார்ட் செயல்பாடு: இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே விவசாயத்திற்கு தேவையான அனைத்து செயல்பாடுகளையும் கணினி மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ நேர்த்தியாக செய்ய உதவும்.

5. செயலி மூலமாக உபகரணங்களை, இயந்திரங்களைக் கண்காணிக்கவும், இயக்கவும் முடியும்.

6. மின்சாரத் தேவையை மிக எளிதாக செயல்படுத்த உதவும்.

7. விவசாயக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தவும், உரமாகப் பயன்படுத்தவும் சரியான வழிகாட்டல்களையும் மற்றும் கால நிலையால் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டியே தெரியப்படுத்த உள்ள எச்சரிக்கை செய்யவும் இது உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com