உலகின் ஒரே கொதிக்கும் நதி எது தெரியுமா?

Shanay Timpishka River
Shanay Timpishka River

லா பம்பா என்றப் பட்டப்பெயரால் அழைக்கப்படும் நதியே உலகின் ஒரே கொதிக்கும் நதியாகும். இதன் நீரின் வெப்பநிலை 93.3 டிகிரி செல்சியஸ் என்பதால், அதில் தெரியாமல் விழும் உயிரினங்களும் இறந்துப்போகும். அந்தவகையில், இந்த நதியைப் பற்றிய சுவாரசிய தகவல்களைப் பற்றி பார்ப்போம்.

பொதுவாக நாம் மழைக் காலங்களில் சுடு நீரில் குளிக்கத் தயங்கவே மாட்டோம். ஆனால், இதுவே வெயில் காலங்களில் சுடு நீரைப் பார்த்தாலே தூரம் செல்வோம். அப்படியிருக்கையில், எப்போதுமே நீர் சூடாக இருக்கும் ஒரு நதியைக் கண்டால் எப்படி இருக்கும்? அந்த நதியின் நீரில் யாராலும் குளிக்க முடியாது, அருகில் செல்லவே சிலர் தயங்குவார்கள். அப்படியிருந்தாலும் கூட, அது இயற்கையின் அதிசயமாகவே கருதப்படும்.

அந்த அதிசயம் தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளில்தான் காணப்படுகின்றது. இந்த நதி, வெள்ளை நிற கற்களால் சூழப்பட்டுள்ளது. மிக உயரமான மரங்கள் கொண்ட பசுமையான காடுக்கு மத்தியில் இருக்கும் இந்த நதியின் நீர், 93.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் கொண்டுள்ளதாகும். புவி இயற்பியலாளரான ஆண்ட்ரெஸ் ருசோ, கடந்த 2011ம் ஆண்டு இந்த நதியைப் பார்க்க சென்றார். அதன்பின்னர் அதைப் பற்றி ஆய்வு செய்து முழு அறிக்கையையும் வெளியிட்டார்.

அந்த ஆற்றங்கரையில் உள்ள சேறு கூட மிகவும் வெப்பமாக இருக்கும். சூரியனின் வெப்பத்தினால் கொதிக்கும் நீர் என்ற அர்த்தத்தில் இந்த நதிக்கு “Shanay Timpishka” என்று பெயரிடப்பட்டது. ஆனால், சூரியனின் வெப்பத்தினால் மட்டும் அந்த நதியின் நீர் சூடாக இருக்கவில்லை. ஏனெனில், இந்த நீர் குளிர்க்காலங்களிலும் கூட சூடாகத்தான் இருக்குமாம்.

Shanay Timpishka River
Shanay Timpishka River

அதன் வெப்பநிலை 86 முதல் 93 டிகிரி வரை மாறுபடும். நீர் மிகவும் வெப்பமடைவதற்குக் காரணமான எந்த எரிமலை அல்லது மாக்மாடிக் செயல்பாட்டையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது ஆண்ட்ரெஸ் ருசோவை குழப்பமடையச் செய்தது. பல ஆய்வுகளுக்குப் பிறகு, நதியின் நீர் வெப்பம் அடைவதற்கான காரணம், இது ஒரு வெப்ப அம்சம் கொண்ட நீருள்ள நதியாகும் என்று அவர் நம்பினார்.

மேலும், தற்செயலாக யாரும் தண்ணீரில் விழுந்தால்கூட, ஒரு நொடிக்குள் தீக்காயங்களால் தீவிரமாக பாதிக்கப்படுவார்கள். இறந்த விலங்குகள் தண்ணீரில் மிதப்பதையும் ருசோ பார்த்திருக்கிறார்.

உள்ளூர் மக்கள் இந்த நதியின் நீர் பல நோய்களை குணபடுத்துகிறது என்று கூறுகிறார்கள். ஆகையால், அவர்களுக்கு இது புனித நதியாகவே விளங்குகிறது.

இதையும் படியுங்கள்:
காலையில் எழுந்ததும் வேம்பு நீர் குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்!
Shanay Timpishka River

இந்த நதிக்கு ஒரு புராண கதை இருப்பதாகவும் அந்த மக்கள் கூறுகிறார்கள். இது ஒரு வெப்ப அம்சம் கொண்ட நீருள்ள நதி என்று இறுதி ஆய்வில் தெரிவித்தாலும், அறிவியல் ரீதியாக சரியான விளக்கம் கண்டறியவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆகையால், அந்த புராணக் கதையை அங்குள்ள மக்கள் முழுமையாக நம்புகிறார்கள். அதாவது, குளிர்ந்த நீர் மற்றும் சூடான நீருக்கும் பிறந்த Yacumama மற்றும் நீரின் தாய் என்றழைக்கப்படும் ராட்சஸ பாம்பினால்தான் இந்த நீர் கொதிக்கிறது என்பது அவர்களின் நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com