

உலகின் மிக உயரமான சிகரமாக இருக்கும் எவரெஸ்ட் சிகரம் ஒவ்வொரு வருடமும் 4 மிமீ வளர்ந்து வருகிறது என்பதுதான் மிகவும் அதிர்ச்சியான உண்மை. சீனா, எவரெஸ்ட் சிகரம் 8,844 மீ உயரம் கொண்டது என்று அறிவித்தாலும், நேபாளம் எவரெஸ்ட் சிகரம் 8,848.86 மீ உயரம் கொண்டதாக அறிவித்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தினை நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் பரஸ்பர எல்லைகளாக பகிர்ந்து கொள்கின்றன.
எவரெஸ்ட் என்பது அந்த சிகரத்தில் ஏறிய முதல் பிரிட்டிஷ் காரரின் பெயராகும். ஆனால், பாரம்பரியமாக வானத்தின் நெற்றி என்று பொருள்படும் வகையில் 'சாகர் மாதா' என்று நேபாள மொழியில் அழைக்கப்பட்டது. ஆனால், சமஸ்கிருத மொழியில் கடலின் தாய் என்று பொருள்படுகிறது. முன்னொரு காலத்தில் எவரெஸ்ட் சிகரம் உள்ள இமயமலை கடலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. திபெத்தியர்கள் உலகின் தாய் என்று பொருள்படும் 'சோமாலுங்மா' என்று அழைக்கின்றனர்.
எவரெஸ்ட் சிகரம் உள்ளூர் புராணக் கதைகளில் மிகவும் புனிதமானதாகவும், இறைவனின் சக்தி கொண்டதாகவும் நம்பப்படுகிறது. மற்றவர்களுக்கு எவரெஸ்ட் சிகரம் ஏறுவது மிகக்கடினமாக தெரிந்தாலும் ஷெர்பா எனப்படும் சமூகத்தினருக்கு அது சாதாரண மலை ஏற்றமாக இருக்கிறது.
திபெத்தியர்களும் ஷெர்பாக்களும் சக்தி வாய்ந்த பெண் தெய்வமாக இந்த சிகரத்தினை வழிபடுகின்றனர். இந்து மதம், புத்த மதம் மற்றும் சீன மதங்களில் இந்த சிகரம் பெண் தெய்வமாக வணங்கப்படுகிறது. சில உள்ளூர் புராணக் கதைகளில் இந்த சிகரம் ஆணாகவும் உருவகம் செய்யப்படுகிறது. இந்த மலையில் தீய சக்திகளும் ஆவிகளும் இருப்பதால் அது பனிச்சரிவு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.
எவரெஸ்ட் சிகரம் இந்திய மற்றும் யுரேசிய புவி தட்டுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த இரு தட்டுகளும் இப்போதும் மோதிக் கொண்டிருப்பதால், இந்த மலை இன்னும் நிலையானதாக கருத முடியவில்லை. அது தொடர்ந்து உயர்ந்து கொண்டும் நகர்ந்து கொண்டும் இருக்கிறது.
எவரெஸ்ட் சிகரத்தில் 200 மைல் வேகத்தில் காற்று வீசுகிறது. இது பெரிய சூறாவளியின் வேகத்தை விட மிகவும் அதிகமாகும்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஆக்ஸிஜன் அளவில் மிகவும் குறைவாக இருக்கிறது 4.89 PSI என்னும் மிகக் குறைவான அளவே ஆக்சிஜன் இருக்கிறது.
பனிப்புயல், பனிச்சரிவு, கடும் குளிர், உடல் விரைத்துப் போதல், பனிக்கடி, ஆக்சிஜன் குறைவு ஆகியவற்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான உயிரிழப்பு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்படுகிறது. உடல்களை மீட்பதும் இங்கு உயிருக்கு ஆபத்தான விஷயம் என்பதால், பெரும்பாலான உடல்கள் மீட்கப்படாமல் அதே இடங்களில் கிடக்கிறது. 'வானவில் பள்ளத்தாக்கு' என்ற பகுதியில் இறந்த உடல்கள் வண்ணத் துணிகளில் போர்த்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை கடக்கும் போது, இந்தக் காட்சி மலை ஏறுபவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.
இன்று உலகின் உயரமான சிகரமாக இருந்தாலும், ஒரு காலத்தில் டெத்திஸ் என்னும் பெருங்கடலாக இந்த பகுதி இருந்துள்ளது. இன்றும் கூட இந்த மலைப் பகுதிகளில் கடலில் எச்சங்கள் கிடைக்கின்றன.
ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் 1978-ல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் நபர் ரெய்ன்ஹோல்ட் மெஸ்னர் ஆவார்.