4 புதிய சிறுதானிய ரகங்கள் அறிமுகம்!

4 New Small Grain Varieties.
4 New Small Grain Varieties.

சிறுதானியங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் நான்கு புதிய ரகங்கள் அறிமுகம்.

மனிதர்களுடைய உணவு பழக்கம் பல்வேறு நோய்களுக்கு காரணமாக மாறி இருக்கக்கூடிய சூழலில் நடப்பு 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக தீர்மானிக்கப்பட்டது. இதன் நோக்கம் நாடு முழுவதும் சிறுதானிய உற்பத்தி அதிகப்படுத்தி, மக்களிடம் சிறுதானிய உணவுப் பொருட்களை கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டது. மேலும் சிறுதானியம் என்பது எல்லா வகை கால சூழலிலும், குறைந்த தண்ணீரில் வளரக்கூடியது என்பதால் விவசாயிகளும் பயனடைவர். மேலும் அரிசி, கோதுமையை விட அதிக சத்தை உள்ளடக்கியதால், மக்களிடம் சிறுதானிய உணவை ஊக்கப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு ஊட்டச்சத்து அதிகரிக்கும். இதனால் நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

இந்த நிலையில் தற்பொழுது சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் நான்கு புதிய சிறுதானிய ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

முதல் ரகம், இதற்கு வீரிய ஒட்டு கம்பு கோ ஹச் 10 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது எல்லா கால சூழ்நிலையிலும் வளரும் தன்மை கொண்டது. 85 முதல் 90 நாட்களில் அறுவடை செய்ய முடியும். ஹெக்டேருக்கு 2500 முதல் 3000 கிலோ மகசூல் கிடைக்கும். மேலும் இந்த சிறு தானிய வகையில் இரும்பு சத்து, துத்தநாகசத்து, புரத சத்து, நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இது அதிக வீரிய தன்மை கொண்டது என்பதால் விரைவில் வளரக்கூடியது.

மற்றொரு ரகம், சோளம் கே 13. இது தமிழ்நாட்டின் தென் பகுதிகளுக்கு உகந்த சிறுதானியம் என்று கூறப்படுகிறது. மேலும் இது கரிசல் மண்ணில் மானாவரி பயிராக பயிரிட ஏற்றது. இந்த வகை சோலத்தை தானியமாக மட்டுமல்லாமல் தீவனமாகவும் பயன்படுத்த முடியும். ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் இவற்றை விளைவித்து அறுவடை செய்யலாம். 95 முதல் 100 நாட்களில் பயன் தரக்கூடியது. பூச்சி தாக்குதலையும் எதிர்த்து வளரக்கூடியது.

இதையும் படியுங்கள்:
சத்து மிகுந்த சிறுதானிய லட்டு!
4 New Small Grain Varieties.

குதிரைவாலி அத்திஏந்தல் 1, இந்த ரகம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிரிடப்பட்டு வருகிறது. இது 90 நாட்கள் முதல் 95 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். ஆடி மற்றும் புரட்டாசி பட்டங்களுக்கு உகந்தது. இது ஹெக்டேர் ஒன்றிற்கு 2000 கிலோ வரை மகசூலை தரக்கூடியது. இது சாய்வு தன்மை அற்றது என்பதால் மணிகள் வீணாகாமல் பாதுகாக்கப்படும்.

மற்றொன்று அத்திஏந்தல் 2, இது புரட்டாசி பட்டங்களுக்கு ஏற்றது. மிக விரைவாக வளரும் தன்மை கொண்டது. இரண்டரை மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். 2,100 கிலோ மகசூல் தரும். இந்த புதிய ரகங்கள் அனைத்தும் மிகக்குறுகிய அளவு தண்ணீரை கொண்டு அதிக மகசூலை தரக்கூடியது ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com