சத்து மிகுந்த சிறுதானிய லட்டு!

சிறுதானிய லட்டு
சிறுதானிய லட்டு

தினை மாவு அதிக சத்து கொண்ட சிறுதானிய உணவுகளில் ஒன்று. தினை நம் இதயத்தை பலப்படுத்த உதவும். விட்டமின்களும், தாது பொருட்களும் நிறைந்த ஒரு சிறந்த சிறு தானியம். தினையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து அதிகம் உள்ள இது கொழுப்பின் அளவை குறைக்க வெகுவாக உதவுவதால் எந்த ஒரு டயட் முறையிலும் தினையை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

தேனும் தினை மாவும் லட்டு:

தினை‌. 1 கப்

தேன் 4 ஸ்பூன் 

ஏல பொடி 1/2 ஸ்பூன்

முந்திரிப் பருப்பு 10 

நெய் 2 ஸ்பூன்

தினையை நன்கு நீரில் நனைத்து இரண்டு மூன்று முறை களைய வேண்டும். இதில் நிறைய தூசு, அழுக்குகள் இருக்கும். எனவே நன்கு களைந்து நீரை வடிகட்டி ஒரு காட்டன் துணியில் பரத்தி நன்றாக உலர விடவும். பிறகு வாணலியில் போட்டு நன்கு சூடு வர வறுத்து எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் எப்போதும் சோர்வாக இருப்பதற்கு இந்த உணவுகள்தான் காரணம்!
சிறுதானிய லட்டு

சிறிது ஆறியதும் மிக்ஸியில் நைஸ் பொடியாக அரைத்து எடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி தேன் நான்கு ஸ்பூன், ஏலப்பொடி அரை ஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பு துண்டுகள் எல்லாம் சேர்த்து உருண்டைகளாக பிடிக்க ருசியான, சத்தான, தேனும் தினை மாவும் லட்டு தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com