குரங்குகளைப் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்!
உலகில் 300க்கும் மேற்பட்ட குரங்கு வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகளை கொண்டிருப்பதுதான் சிறப்பு.
முதனிகளுக்கும், மனித குரங்குகளுக்கும் வால் கிடையாது. முதனிகளுக்கும் மூளைப் பருமன் அதிகம். இவைகளின் மூளை மொத்த உடல் எடையோடு ஒப்பிடும்போது மற்ற விலங்குகளை காட்டிலும் அதிகமானது.
சோலை மந்தி, சிங்கவால் குரங்கு என்று அழைக்கப்படும் இவை வெப்பமண்டல மழைக்காடுகளில் மட்டும் வாழ்கின்றன. மிகவும் கூச்ச உணர்வுடைய இவை மனிதர்களைத் தவிர்த்தே வாழ விரும்புபவை. மின் உற்பத்திக்கென அணை கட்டுதல், காடுகளில் சாலைகள் அமைத்தல் போன்ற செயல்களால் சோலை மந்திகளின் வாழ்க்கை வெறும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.
குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு. ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயல்பட வைக்கிறது.
கபுச்சின் குரங்குகள் பெரும்பாலும் பூச்சிகள், இலைகள், சிறிய பல்லிகள், பறவைகளின் முட்டைகள், சிறிய பறவைகள், பழங்கள் ஆகியவற்றை உண்ணும். சில நேரங்களில் தவளைகள், சிறிய பாலூட்டிகளையும் சாப்பிடக் கூடியவை.
உலகில் இரவு நேரத்தில் நடமாடும் ஒரே புதிய உலக குரங்கு ஆந்தை குரங்கு மட்டுமே.
உலகின் மிகப்பெரிய குரங்கினம் மாண்ட்ரில். இவை 3.3 அடி வரை வளரும். 31 கிலோ எடை வரை இருக்கும். மாண்ட்ரில் குரங்கினம் சிங்கத்தை விட நீளமான கோரைப் பற்களை கொண்டவை.
உலகின் மிகச்சிறிய குரங்கு பிக்மி மர்மொசெட் (Pygmy Marmoset). இது 7 அங்குல வாலும், 5 அங்குலங்கள் வரை மிகவும் சிறிய உருவம் கொண்டதாக இருக்கும். மனிதனின் உள்ளங்கை அளவே இருக்கக் கூடியவை. இவை 100 கிராம் எடை வரை இருக்கும். இந்த சிறிய உடலை வைத்துக் கொண்டு 16 அடி வரை இதனால் தாவமுடியும் என்று கூறுகின்றனர்.
மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் இருக்கும் குரங்குகள் புதிய உலக குரங்குகள் என்றும், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ளவை பழைய உலக குரங்குகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
புதிய உலகக் குரங்குகள் தட்டையான மூக்கை கொண்டு, பெரும்பாலும் மரங்களில் மட்டுமே வாழ்வதால் அவற்றிற்கு வால் மிகவும் பயனுள்ள உறுப்பாக உள்ளது.
பழைய உலக குரங்குகள் புதிய உலக குரங்குகளை விட பெரியதாக இருக்கும். கீழே உட்காருவதற்கு ஏற்ற வகையில் இவற்றினுடைய பின்பக்கம் பட்டைகள் இருக்கும்.
குரங்கு கடித்தால் கடுமையான தொற்று ஏற்படும். சிமியன் ஹெர்பெஸ் பி வைரஸ் சிலவகை ஆசிய குரங்குகளில் உள்ளது.
மகாகா குரங்குகள் ஜப்பானின் பனி பிரதேசங்களில் வாழ்கின்றன. இவை முழுவதும் பனியால் சூழப்பட்ட இடத்தில் வசிப்பதுடன் வெந்நீரில் குளிக்கும் தன்மையையும் பெற்றிருக்கின்றன.
குரங்குகள் கத்துவது, அலறுவது, முணுமுணுப்பது, ஊளையிடுவது என ஒவ்வொரு மாதிரியான ஒலிகளையும் எழுப்பி மற்ற குரங்குடன் தொடர்புகொள்ளும்.
ராஜஸ்தானிலும் சில வட இந்திய பகுதிகளிலும் குரங்குகளுக்கு என்று கோயில்களும் உள்ளன.