ஹைனாக்கள் பற்றிய சில அரிய விவரங்கள்!

Some rare facts about hyenas!
hyenas
Published on

ஹைனாக்கள் என்று கூறப்படும் கழுதைப்புலிகள் இவை கூட்டமாக வந்து பெரிய விலங்குகளையும் தாக்கும் திறன் கொண்டவை.

கழுதைப்புலிகள் ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், மத்திய நாடுகளிலும், ஆசியக்கண்டத்தில் பாகிஸ்தான், இந்தியாவிலும் காணலாம்.

இந்த விலங்கு பாலூட்டி வகையைச் சார்ந்தவை.

அடர்ந்த புதர் மற்றும் முட்காடுகளில் வசிப்பவை.

ஒரே இடத்தில் வசிக்காமல் நீர் நிலைகளைத்தேடி அலையும்.

பொதுவாக உடலின் மேற்பகுதி சாம்பல் நிறம் கொண்டதாகவும், தோள்பட்டை, காதுகள் கருப்பு நிறத்தில் இருக்கும்.

சண்டை இடும்பொழுது சிலிர்த்துக்கொண்டு உருவத்தை பெரிதாக ஆக்கவும், ஆக்கிரோஷத்தை வெளிப்படுத்தவும் இவைகளால் முடியும்.

எல்லா வகை உணவுகளையும் உண்ணும். இவைகளை விட உருவத்தில் பெரிதாக உள்ள விலங்குகளை கொன்று உண்ணும் திறமை கொண்டவை.

கழுதைப்புலிகளின் தாடைகள் மிகவும் வலிமை மிக்கவை. தடிமனாக இருக்கும். இவைகளுடன் கூறிய பற்கள் இரைகளை உண்ண உதவுகின்றன.

சிங்கங்களுடன் அடிக்கடி மோதும் வழக்கம் கொண்டவை.

கால்கள் மிகவும் நீளமானவை. வால்களில் அடர்த்தி மிக்க ரோமங்கள் நீண்டு இருக்கும்.

ஆண் பெண் உடல் அமைப்பில் வேறுபாடுகள் கிடையாது.

இதையும் படியுங்கள்:
கோடைக்கு வந்து குவியும் நம் தேசத்து மாம்பழ வகைகள்!
Some rare facts about hyenas!

குகைகளில் மட்டுமே குட்டிகள் போடும். 1 முதல் 5 குட்டிகள் ஈனும். குட்டிகள் 30 நாட்கள் ஆனதும் மாமிச உணவை உண்ண தொடஙகும்.

வேட்டை ஆடும் திறன் உடைய கழுதைப்புலிகள், பிற மிருகங்கள் தின்று விட்டு விட்டு மீதம் இருப்பவற்றையும் உண்ணும்.

கழுதைப்புலிகள் மூன்று வகை உள்ளன. அவை உடலில் புள்ளிகள் இருப்பவை, பிரவுன் நிறம் கொண்டவை, முதுகில் வரிகள் இருப்பவை.

காடுகளில் 20 வருடங்களும், பாதுகாப்பாக வளர்வதாக இருந்தால் 25 வருடங்களும் உயிர் வாழும்.

இவைகளால் பிற மிருகங்களின் தோல், எலும்புகளையும் சாப்பிட முடியும்.

இவைகளுக்கு நன்றாக பார்வைத் திறன், செவித்திறன், வாசனையை கண்டு பிடிக்கும் திறன் உண்டு.

இவைகள் கத்தும் பொழுது சிரிக்கிற மாதிரி ஓலி எழுப்பும்.

கழுதைப்புலிகள் மிகவும் சாமர்த்தியம் மிக்கவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com