மனிதர்களைக் காட்டிலும் அழகாக அபார்ட்மெண்ட் வீடு கட்டும் சிட்டுக்குருவிகள்!

Sociable Weavers bird nest
Sociable Weavers bird nestImage Credits: BirdNote
Published on

குருவிகள் கூடு கட்டுவதற்கான காரணம் அது தங்குவதற்காகவும், தன்னுடைய முட்டையை பாதுகாத்து வைப்பதற்காகவுமேயாகும். அதிகப்படியாக ஒரு சிட்டுக்குருவியின் கூடு என்பது சிறியதாகவே இருக்கும். ஆனால், ஆப்பிரிக்காவில் உள்ள கலஹாரி பாலைவனத்தில் இருக்கும் ‘Sociable weavers’ என்னும் சிட்டுக்குருவிகள் கட்டும் கூட்டை பார்த்தால் வியந்து போய்விடுவீர்கள். அதைப் பற்றிய விளக்கத்தை இந்தப் பதிவில் காண்போம்.

மரத்தின் மீது ஒரு பெரிய வைக்கோல் போரை தூக்கிப் போட்டு வைத்தது போல அங்காங்கேயிருக்கும் Sociable weavers சிட்டுக் குருவியின் கூட்டைப் பார்த்தால் நீங்கள் கூடு என்றே நம்ப மாட்டீர்கள். அவ்வளவு அற்புதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும். Sociable weavers சிட்டுக்குருவிகள் இந்தக் கூட்டிற்குள் 100 ஜோடிகளுக்கு மேல் வாழும். அதுமட்டுமில்லாமல், இந்த சிட்டுக்குருவிகள் இந்த கூட்டை பல தலைமுறைகளாக பாதுகாத்துக்கொண்டு வருகிறது. அதிகபட்சமாக 100 வருடங்கள் வரை கூட இக்கூடுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்தக் கூடு பார்ப்பதற்கு ஒரு அபார்ட்மெண்ட் போன்ற தோற்றத்தை கொடுக்கும். இந்தக் கூட்டின் கீழ் நின்று பார்க்கும்போது கூட்டின் நுழைவாயில் பத்துக்கும் மேல் இருப்பதைக் காண முடியும். ஒவ்வொரு ஜோடியும் ஒவ்வொரு நுழைவாயிலைப் பயன்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

கலஹாரி பாலைவனத்தின் வெப்பநிலை வெயில் காலத்தில் 110 டிகிரி பாரன்ஹீட்டும் குளிர்க்காலத்தில் 14 டிகிரி பாரன்ஹீட்டுமாக மாறக்கூடியதாக இருக்கும். அந்த வெப்பநிலைக்கு தகுந்தாற்போல இந்தக் கூடுகள் வெயில் காலங்களில் குளிர்ச்சியாகவும், குளிர்காலங்களில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். சிட்டுக்குருவிகள் கட்டிய இந்தக் கூட்டின் எடை டன் கணக்கில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
உலகத்தின் மிக அழகிய 3 ரயில் பாதைகள்... பயணங்கள்!
Sociable Weavers bird nest

மற்ற பறவைகளைப் போல Sociable weaver பறவைகள் கூட்டைக் கட்டுவதில்லை. இதன் கூடு பார்ப்பதற்கு ஓலை பின்னப்பட்ட குடிசை போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். இந்தக் கூட்டில் Social weaver பறவைகளைத் தவிர மற்ற பறவைகளான African Pygmy Falcons, Rosy faced love birds போன்ற பறவைகளும் வாழ்கின்றன. இந்தக் கூட்டிற்கு மேல் சிறுத்தை கூட வெயில் காலங்களில் ஏறி இளைப்பாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது எடையைக்காட்டிலும் பல மடங்கு எடைக்கொண்ட கூட்டை கட்டும் இந்த Social weaver சிட்டுக்குருவிகளை ஒரு சிறந்த பொறியாளர்கள் என்றே சொல்ல வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com