ரயில் பயணம் செய்வது என்பது ஒரு அலாதியான இன்பத்தைக் கொடுக்கும். அதிலும் அழகிய பாதையில், பச்சை பசேலென்று இருக்கும் இயற்கை சூழலில் அமைந்திருக்கும் ரயில் பயணங்கள் நம் மனதில் நீங்காத நினைவுகளை தரக்கூடியதாய் இருக்கும். அத்தகைய 3 அழகிய ரயில் பயணங்களைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாக காண்போம்.
1. Nilgiri mountain railways.
இந்தியாவில் உள்ள பழமையான மலை ரயில் பாதைகளில் ஒன்றுதான் Nilgiri mountain railways ஆகும். இது மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரையுள்ள 46 கிலோ மீட்டர் தூரத்தை இணைப்பதுபோல அமைந்திருக்கும். இந்த ரயில் பாதை அடர்ந்த காடுகள் வழியாக செல்வதால் நிறைய அருவிகள், ஆறுகள், மலைகளைக் கடந்து செல்லும் அதன் அழகை ரசித்துக்கொண்டே செல்வது வேற லெவல் அனுபவமாகவேயிருக்கும் என்று சொல்லலாம். இந்த ரயிலை செல்லமாக Toy train என்று அழைப்பார்கள். இந்த ரயிலில் பயணம் செய்து ஊட்டியை அடைய 5 மணி நேரம் ஆகும். 2005 ல் UNESCO உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக இந்த ரயில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2.Jocobite Railways, Scotland.
British Railways ஆல் இயக்கப்படும் இந்த ரயில் மொத்தமாக 66 கிலோ மீட்டர் நீளமுடையது. இந்த நீராவி ரயிலைத் தான் பிரபலமான ஹாலிவுட் படமான ஹேரிப்பாட்டரில் வரும் Hogwarts express ஆக காட்டியிருப்பார்கள். இந்த ரயிலை செல்லமாக Jacobian train or Harry potter steam train என்று அழைப்பார்கள். இந்த ரயிலில் பயணிப்பது உண்மையிலேயே ஒரு ஃபேன்டஸி உலகிற்கு கூட்டிச்செல்லும் ரயிலில் பயணிக்கும் அனுபவத்தை மக்களுக்கு கொடுக்கும்.
3. Srilanka Railways.
இலங்கையில் இருக்கும் Colombo to Badulla railways இலங்கையின் தலைநகரமான கொலும்புவிலிருந்து பதுலா என்று அழைக்கப்படும் ஒரு நகரத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் 292 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில்பாதையில் செல்கிறது. ஒரு நாளைக்கு 4 முறை இயக்கப்படுகிறது.
இது கிட்டத்தட்ட இலங்கையின் ஒரு முனையில் இருந்து அடுத்த முனைக்கு செல்வதால், மொத்த இலங்கையின் அழகையும் ரசித்துக்கொண்டே இந்த ரயிலில் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயிலை செல்லமாக Podi manike என்று அழைக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் ஸ்ரீலங்காவில் உள்ள கண்டியிலிருந்து பதுலா செல்லும் நீலநிற ரயிலும் உலகப் பிரசித்திப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 3 ரயில்களில் உங்களைக் கவர்ந்தது எது என்று சொல்லுங்கள்.