10 அடி நீள தந்த மூக்கு கொண்ட அரிய வகை நார்வால் திமிங்கலத்தின் சிறப்புகள்!

Tusk-nosed narwhal
Tusk-nosed narwhalhttps://www.businessinsider.in
Published on

திமிங்கலங்கள் தண்ணீரில் வாழும் பெரிய விலங்குகள். திமிங்கலத்தில் இரண்டு அடிப்படை வகைகள் உள்ளன. பல் மற்றும் பலீன் எனப்படும் பற்கள் அற்றவை. பல் திமிங்கலங்கள் கூர்மையான பற்கள் கொண்டவை. நார்வால் பற்கள் கொண்ட திமிங்கலமாகும். இது ஒரு தனித்துவமான ஆர்க்டிக் வேட்டையாடி இனமாகும்.

1. நீள தந்தம்: நார்வால் திமிங்கலங்கள் சாம்பல் மற்றும் வெள்ளை நிற தோல் வடிவத்தைக் கொண்டுள்ளன. இவற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் தந்தம். இது பொதுவாக ஆண் திமிங்கலங்களில் காணப்படுகிறது. யானையின் தந்தம் போல முன்புறம் நீண்டு காணப்படும். இதன்  நீளம் 10 அடி. இது உண்மையில் ஒரு நீளமான கோரைப்பல்லாகும். ‘கடலின் யூனிகார்ன்கள்'  என்று அழைக்கப்படும். சில நார்வால்களுக்கு இரண்டு தந்தங்கள் கூட உண்டு.

நார்வால் தந்தங்கள் மில்லியன் கணக்கான நரம்பு முடிவுகளைக் கொண்ட ஒரு உணர்ச்சி உறுப்பு ஆகும். இவை தந்தங்களைத் தேய்ப்பது தகவல்களைத் தொடர்புகொள்வதற்கான ஒரு வழியாகக் கருதப்படுகிறது.

வாழ்விடம்: நார்வால்கள் ஆர்க்டிக் பெருங்கடலின் குளிர்ந்த நீரில், கனடா, கிரீன்லாந்து, நார்வே மற்றும் ரஷ்யாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. அவை தனித்துவமான கடல் பாலூட்டிகளாகும். மேலும் அவை மோனோடோன்டிடே குடும்பத்தைச் சேர்ந்தவை.

உணவு: இவை முதன்மையாக மீன், கணவாய், இறால் ஆகியவற்றை உண்கின்றன. இவற்றின் உணவில் ஆர்க்டிக் காட் மற்றும் கிரீன்லாந்து ஹாலிபுட் ஆகியவை அடங்கும்.

ஆழமான டைவர்ஸ்: நார்வால்கள் அதிக ஆழத்திற்கு டைவிங் செய்யும் திறன் கொண்டவை.  பெரும்பாலும் 1,500 மீட்டர் (4,900 அடி) வரை டைவ் செய்து, 25 நிமிடங்கள் வரை இவற்றால் நீருக்கடியில் இருக்க முடியும். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக 800 மீட்டர் ஆழத்திற்கு கீழே நீருக்கடியில் செலவிட முடியும்.

முதுகுத் துடுப்பு இல்லை: வில்ஹெட் மற்றும் பெலுகா உள்ளிட்ட பிற ஆர்க்டிக் திமிங்கலங்களைப் போல நார்வால்களுக்கு முதுகுத் துடுப்பு  இல்லை. முதுகுத் துடுப்பு இல்லாததால்,  நார்வால் மற்றும் பிற ஆர்க்டிக் திமிங்கலங்கள் வெப்ப இழப்பைத் தடுக்கவும், தங்களை குளிர்வித்துக் கொள்ளவும் ஆர்க்டிக் நீரில் பனிக்கட்டிகளின் கீழ் நீந்தவும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
உட்கார்ந்திருக்கும்போது கால் ஆட்டும் பழக்கம் இருக்கா உங்களுக்கு? போச்சு! 
Tusk-nosed narwhal

நிறம்: நார்வால் வயதுக்கு ஏற்ப நிறத்தை மாற்றுகிறது.புதிதாகப் பிறந்த நார்வால்கள் நீலம் - சாம்பல் புள்ளிகள், பதின்ம வயதினர் நீலம் - கருப்பு, பெரியவர்கள் புள்ளிகள் சாம்பல் மற்றும் வயதான நர்வால்கள் கிட்டத்தட்ட வெள்ளை நிறத்தில் இருக்கும்.

குழுக்கள் மற்றும் குரல்கள்: நார்வால்கள் சமூக விலங்குகள். பொதுவாக 5 முதல் 10 நபர்களைக் கொண்ட குழுக்களாக இவை பயணிக்கின்றன. ஆனால், தேவை ஏற்பட்டால் பெரிய குழுக்களாகவும் பயணிக்கின்றன. நார்வால், கிளிக்குகள், விசில்கள் மற்றும் தட்டுதல்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான குரல்களுக்கு பெயர் பெற்றவை. அவை தனது இனத்தாரை தொடர்பு கொள்ள மற்றும் எதிரொலிக்கு பயன்படுத்துகின்றன.

பாதுகாப்பு நிலை: காலநிலை மாற்றம், வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடுதல் ஆகியவற்றின் காரணமாக நார்வால்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடும் என கருதப்படுகின்றன. புவி வெப்பமடைதலின் தாக்கங்களுக்கு உள்ளானதால் கடல் பனியை அவை சார்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நார்வாலின் சராசரி ஆயுட்காலம் 30 முதல் 40 ஆண்டுகள். ஆனால், அதையும் தாண்டி 50 வயது வரை கூட சில வாழ்வதாகக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com