

கேரள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் மூலம், நம் நாட்டு கடற்கரைப் பகுதிகளில் இதுவரை கண்டறியப்படாத ஒரு புதிய வகை ஸ்பைனி கடல் குதிரை (Spiny Seahorse) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய கடல் குதிரைகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? இந்த அதிசயக் கடல் வாழ்வினத்தை நாம் எப்படி பாதுகாக்கப் போகிறோம்? சுவாரஸ்யம் நிறைந்த இந்த அறிவியல் அற்புதத்தின் முழு விவரங்களையும் தொடர்ந்து படியுங்கள்!
கேரள விஞ்ஞானிகளால் கடல்பகுதியில் ஸ்பைனி கடல் குதிரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த Spiny Seahorse, அமண்டா வின்சென்ட் என்ற கடல் குதிரை ஆராய்ச்சியாளரால் கண்டுபிடிக்கப்பட்டதால் அவருடைய பெயரே இந்த புதிய கண்டுபிடிப்புக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
கடல்களில் ஆராய்ச்சி செய்யும் கடல் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கடல்குதிரையின் விஞ்ஞானப் பெயர் ஹிப்போகாம்பஸ் அமண்டா வின்சென்ட் என்பதாகும்.
Kerala University of Fisheries and Ocean (KUFOS) குழுவின்மூலம் இது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஜர்னல் ஜுடாக்ஸா என்ற பத்திரிகையில் இந்த ஸ்பைனி கடல் குதிரையைப் பற்றி செய்தி வெளிவந்திருக்கிறது.
முதலில் கடல் குதிரைகள் பசிபிக் கடல் பகுதியைச் சேர்ந்தவை என கருதப்பட்டது. ஆனால் இந்த புதிய கண்டுபிடிப்பு மற்ற வகையில் இருந்து தனித்து நிற்கிறது. 2856ம் வருடம் கடல் குதிரையில் ஹிப்போகாம்பஸ் ஹிஸ்ட்ரிக்ஸ் வகையானது ஜப்பானில் இந்தப் பெயரிலேயே அழைக்கப்பட்டது.
ஆனால் புதிய கண்டுபிடிப்பின் மூலம் 6லிருந்து 7சதவீதம் வித்தியாசங்கள் அறியப்பட்டுள்ளன. இரண்டு வகை கடல் குதிரைகளான ஹிப்போகாம்பஸ் அமண்டா வின்சென்ட் மற்றும் ஹிப்போகாம்பஸ் ஹிஸ்ட்ரிக்கும் உள்ள வித்தியாசங்களை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. புதிய கண்டுபிடிப்பான ஸ்பைனி கடல் குதிரையைப் பற்றி அறிய பல விஷயங்களை சேகரிக்க வேண்டி இருந்தது. இரண்டுவித கடல்குதிரைகளையும் கடல் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் சில விஷயங்களை கண்டு பிடித்தனர்.
ஹிப்போகாம்பஸ் ஹிஸ்ட்ரிக்ஸ் கடல் குதிரை இனமானது செங்கடல் பகுதியிலிருந்து பசிபிக் கடலுக்கு வந்ததாகத் தெரிகிறது.
மேலும் செங்கடல் பகுதியில் ஹிப்போகாம்பஸ் ஜெயகரி என்ற வகை கடல் குதிரை என தெரியவருகிறது. இந்த கடல் ஆராய்ச்சியாளர்கள் ஆழமான கடல் பகுதிகளிலிருந்து பல புதிய வகைக் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
கடல் ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி கேரளா லக்ஷதீபம் மற்றும் கேரள கடற்கரைப் பகுதிகளில் பவளப் பாறைகளில் புதிய ஸ்பைனி கடல் குதிரை கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இவை கடல் புறங்களிலும் காணப்படும்.
சீன மருந்துகளில் கடல் குதிரையைப் பயன்படுத்துவதால் கடல்குதிரைகள் குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஸ்பைனி கடல் குதிரையைக் கண்டுபிடித்த அமண்டா கடல்குதிரை ஆராய்ச்சியில் முழு மூச்சுடன் ஈடுபடுபவர் தன் புதிய கண்டுபிடிப்பிற்கு அவருடைய பெயரே வைக்கப்பட்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறார்.
ஆஸ்திரேலியாவில் சோட்வானா பிக்மி கடல் குதிரை அறியப்பட்டுள்ளது. (Sodwana pygmy seahorse). இது ஆப்ரிக்க மற்றும் இந்தியப் பெருங்கடலிலும் கண்டுபிடிக்கப்பட்டது. இது இரண்டு செ. மீ அளவே இருக்கும். அதாவது ஒரு அரிசியின் அளவுதான் இருக்கும்.
தேன் நிறத்தில் உடலும் சிவப்பு நிறத்தில் வாலும் இருக்கும் ஹிப்போகாம்பஸ் நலு என்ற விஞ்ஞானப் பெயர் உள்ள இது ஆஸ்திரேலியாவின் மியூசியத்தில் உள்ளது. இந்த பிக்மி கடல் குதிரையை ஆராய்ச்சியாளர்கள் மணல்பகுதி நிறைந்த கடல் பக்கத்தில் தென் ஆப்ரிக்கா பகுதியில் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது.
மணல் பகுதிகளிலேயே இவை தேர்ந்தெடுக்கின்றன. இந்த கடல்குதிரைக்கு தலைப்பகுதியில் பின்னே முட்கள் போன்ற அமைப்புகள் உள்ளன. இது எட்டாவது வகையாகும். முதல் பிக்மி கடல்குதிரை 1969ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஏழு பிக்மி கடல்குதிரைகள் அறியப்பட்டன. அவை பின்வருமாறு;
ஹிப்போகாம்பஸ் டெனிஸ்_2003
ஹிப்போகாம்பஸ கொலிமனி-2005
ஹிபாபோகாம்பஸ் பொன்டோஹி_2008
ஹிப்போகாம்பஸ் வாலனீயஸ்_2009
ஹிப்போகாம்பஸ் ஜபாபிகு_2018
கடல் குதிரைகள் சுமார் 26 செ. மீ இருக்கும். இதன் தலைப்பகுதியில் கிரீடம் போன்ற அமைப்பு இருக்கும் புதிய கண்டுபிடிப்பான ஸ்பைனி கடல் குதிரைக்கு உடல் முழுவதும் முட்கள் போன்ற அமைப்பு இருக்கும். மீன் பிடிப்பது அதிகமாக இருப்பதாலும், மேலும் அக்வேரியத்தில் வைத்து வளர்க்க இவை பிடிக்கப்படுவதாலும் கடல் குதிரைகளின் இனத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.