பரந்து விரிந்த நாடுகள் (vs) நெரிசல் மிகுந்த நாடுகள்!

Countries
Countries
Published on

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் குறைந்த மக்கள்தொகை கொண்ட பரந்த நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றவை. அதில் ரஷ்யா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் கஜகஸ்தான் ஆகியவை குறிப்பிடத்தக்க அதிக காலி  நிலங்களைக் கொண்ட முன்னணி நாடுகளாகும். உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் (17 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது) மக்கள் வசிக்காத சைபீரிய வனப்பகுதிகள் பரந்த அளவில் உள்ளன.

கனடா(10 மில்லியன் சதுர கிலோமீட்டர்) பரப்பளவை உள்ளடக்கியது, அதன் பரந்த வடக்குப் பகுதிகளுடன், இதுவரை தீண்டப்படாத இயற்கை நிலப்பரப்புகளோடு பெரிய பகுதிகளையும் கொண்டுள்ளது. பின் ஆஸ்திரேலியா 7.7 மில்லியன் சதுர கிலோமீட்டர் மற்றும் கஜகஸ்தான் 2.7 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புகளை மொத்தமாக கொண்டுள்ளன.

காலி நிலங்களை கொண்ட நாடுகளுக்கு கிடைக்கும் நன்மைகள்

குறைவான மக்கள் தொகையோடு காலியாக நிறைய பகுதிகளைக் கொண்டிருப்பது பல நன்மைகளை வழங்குகிறது. முதலாவதாக, இந்த நிலங்கள் அதிக மக்கள்தொகை கொண்ட நகர்ப்புற விரிவாக்கத்திற்கு  நிலையான வளர்ச்சி மற்றும் அதேபோல் இயற்கை வாழ்விடங்களுக்கும்  பாதுகாப்பை அனுமதிக்கிறது. அவை விவசாயம், வனவியல் மற்றும் சுரங்கங்களுக்கான வாய்ப்புகளை வழங்குகின்றன.

பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. கூடுதலாக, பரந்த காலி நிலங்கள்,  அச்சுறுத்தும்  கார்பனை கட்டுப்படுத்த  செயல்படும். இதன் மூலம் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சப்பட்டு  காலநிலை மாற்றத்தை தணிக்கவும் உதவுகிறது.

நெரிசலான நாடுகளுடன் ஒப்பிடுதல்

இதற்கு நேர்மாறாக, நெரிசலான நாடுகள், மக்கள் விரிவாக்கத்திற்காக இடங்களை பயன்படுத்துகின்றன, இதனால் அதிக மாசு அளவுகள் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் இயற்கை வளங்களை காக்க வேண்டியதன் அவசியம் போன்ற சவால்களை எதிர்கொள்கின்றன. இதற்கு அப்படியே எதிர்மறையாக பரந்த காலி நிலங்களைக் கொண்ட நாடுகள் நகரமயமாக்கலை மிகவும் திறம்பட நிர்வகித்து, சீரான வளர்ச்சியை உறுதி செய்து, இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கின்றன.

பின் நகர்ப்புற வாழ்க்கை மீதான அழுத்தத்தைக் குறைக்க, தொழில்சாலைகள் அல்லது தொழில்களை செய்ய மக்கள் தொகை குறைந்த பகுதிகளுக்கு மாற்றுவதற்கான நெகிழ்வுத்தன்மையும் அவர்களுக்கு உள்ளது.

நெரிசல் மிகுந்த  நாடுகள் கையாள வேண்டிய உத்திகள்

நெரிசலான நாடுகளுக்கு மிச்சம் இருக்கும் காலி  நிலங்களை பாதுகாத்தல் மற்றும் அதிகரிப்பது மிகவும் முக்கியமானது. நகர்ப்புற விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்தி சிரமமின்றி வாழவும் பசுமையான இடங்களைப் பாதுகாக்கவும் கடுமையான மண்டலச் சட்டங்களைச் செயல்படுத்துவது ஒரு பயனுள்ள உத்தி. பின் உயரமான கட்டிடங்கள் போன்ற செங்குத்து கட்டிட வளர்ச்சியில் முதலீடு செய்தால், தேவையற்ற அதிக நில பயன்பாடு செயலை குறைக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
Stingless Bee Honey - கொடுக்கு இல்லா தேனீக்களின் தேனால் கொட்டும் நன்மைகள்
Countries

கூடுதலாக, கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் குறைந்த மக்கள்தொகை உள்ள பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்றவற்றை செய்வது, மூலம், மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்களை விட்டு வெளியேற ஊக்குவிக்கும். பின்  தேசிய பூங்காக்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்குவது போன்ற பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம், இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கலாம்.

இப்படி, பரந்த காலி நிலங்களைக் கொண்ட நாடுகள் நிலையான வளர்ச்சி, பொருளாதார வாய்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல நன்மைகளை அனுபவிக்கின்றன. அதே சமயம்  நெரிசல் மிகுந்த நாடுகள் தங்கள் நில வளங்களை திறம்பட நிர்வகிக்க பல்வேறு உத்திகளை கட்டாயம் பின்பற்றி , சீரான வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்க வழிகளை மேற்கொள்ளலாம்.

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com