SRI முறை: வெறும் 1 லிட்டர் தண்ணீரிலா? ஒரு ஏக்கரில் 100 மூட்டை நெல் எடுக்கலாம்!

Rice paddy
Rice paddy
Published on

சராசரியாக, நாம் உண்ணும் ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய கிட்டத்தட்ட 3,000 முதல் 5,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆம், உண்மைதான். தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் விவசாயத்திற்குப் பயன்படும் தண்ணீரில் 70% முதல் 80% வரை நெல் சாகுபடிக்காக மட்டுமே செலவிடப்படுகிறது.

நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் இந்தச் சூழ்நிலையில், நம் விவசாயிகளின் தலைக்கு மேலே கத்தியைப் போல் தொங்கும் மிகப் பெரிய சவால் 'குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி, அதிக விளைச்சலை எப்படி எடுப்பது?' என்பதுதான்.

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் ஒரு புரட்சிகரமான விவசாய முறையைப் பற்றித் தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் என்ற மந்திரத்தை நிஜமாக்கியுள்ளது SRI (System of Rice Intensification) எனப்படும் நெல் தீவிர சாகுபடி முறை.

இதைக் குறித்து முதன்முதலில் கேள்விப்படும்போது, இது நம்ப முடியாத கற்பனைக் கதை போல் தோன்றலாம். ஆனால், உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த விவசாயிகள் இந்த முறையின் மூலம் நம்ப முடியாத அளவுக்கு விளைச்சலை அடைந்துள்ளனர்.

SRI முறைக்குப் பின்னால் உள்ள அறிவியல் மிகவும் எளிமையானது, ஆனால் சக்தி வாய்ந்தது.

சாதாரண விவசாய முறையில், விவசாயிகள் 25 முதல் 30 நாட்கள் ஆன முதிர்ந்த நாற்றுகளை, ஒரு குத்துக்குள் 4 முதல் 5 நாற்றுகள் என அடர்த்தியாக நடுவார்கள். ஆனால், SRI முறையில், வெறும் 8 முதல் 12 நாட்களே ஆன இளமையான நாற்றுக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
ஒரே இரவில் பூக்களால் நிரம்பும் பாலைவனம் தெரியுமா?
Rice paddy

இந்த இளமையான நாற்றுகளை, ஒவ்வொன்றாக, ஒரு குத்துக்கு ஒரே ஒரு நாற்று என்ற அளவில் நடவு செய்வார்கள். இதனால், ஒரு நாற்றுக்கு ஆரோக்கியமாக வளரவும், கிளைகள் விடவும் போதுமான இடமும், ஒளியும் கிடைக்கிறது.

நெல் சாகுபடி என்றாலே, வயல் முழுவதும் தண்ணீர் தேங்க வேண்டும் என்ற ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், இது தவறு என்கிறது SRI முறை.

  • பாரம்பரிய முறை: வயலை எப்போதும் நீரில் மூழ்கடித்து வைத்திருப்பது.

  • SRI முறை: வயலை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மட்டும் போதுமானது. அதாவது, தண்ணீர் தேங்காமல், நிலம் காய்ந்து விடாமலும் பார்த்துக் கொள்வது.

இதையும் படியுங்கள்:
இயற்கை விவசாயத்தில் லாபம் தரும் தரமான விதை உற்பத்தி ரகசியங்கள்!
Rice paddy

இதன் மூலம், பாரம்பரிய முறையை விட 50% வரை தண்ணீர் சேமிக்கப்படுகிறது. தண்ணீர் தேங்காததால், நெற்பயிரின் வேர்கள் ஆழமாகச் சென்று, மண்ணில் உள்ள சத்துக்களை எளிதாக எடுத்துக்கொள்ள முடிகிறது.

SRI முறையில் ஒரு முக்கியக் கட்டம் உண்டு. அதுதான் உழவு (Weeding). பயிர் நடுவுல உழவுச் சக்கரம் (Weeder) கொண்டு அடிக்கடி உழும்போது, களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், மண்ணுக்குள் ஆக்ஸிஜன் ஊடுருவுகிறது.

இந்த ஆக்ஸிஜன், மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாட்டைத் தூண்டி, அவை இயற்கையான உரங்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன. இதனால், பயிரின் வளர்ச்சி மளமளவென அதிகரிக்கிறது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் மிக வயதான மரம் எங்கிருக்கிறது தெரியுமா?
Rice paddy

SRI முறையைப் பயன்படுத்தும் விவசாயிகள், நாற்றுகள் அதிகமாகவும், ஆரோக்கியமாகவும் கிளைவிட்டு, ஒவ்வொரு செடியிலும் அதிக எண்ணிக்கையில் நெற்கதிர்களைப் பார்க்கின்றனர். பாரம்பரிய முறையில் ஏக்கருக்கு 25 முதல் 35 மூட்டை (நெல் மூட்டை 75 கிலோ) கிடைத்தால், SRI முறையில், சரியான மேலாண்மையுடன் பயிரிட்டால், ஏக்கருக்கு 70 முதல் 100 மூட்டைகள் வரை மகசூல் கிடைப்பதாகப் பல ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன!

குறைவான நீர், குறைவான விதை, குறைவான இரசாயன உரங்கள், ஆனால் அதிக மகசூல்.

SRI முறை என்பது ஒரு தொழில்நுட்பம் மட்டுமல்ல, இது நம் விவசாயிகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் ஒரு வழி. தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு, இந்த முறை ஒரு வரப்பிரசாதம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com