இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமில்லை. ஏராளமான விலங்குகள் மற்றும் பூச்சி இனங்களும் இங்கு வாழ்கின்றன. Stag beetle எனப்படும் வண்டு லுகானிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இவற்றின் தாடைப் பகுதி பார்ப்பதற்கு மான் கொம்பு போன்று இருப்பதால் ஸ்டாக் பீட்டல் (மான் கொம்பு வண்டு) என்று அழைக்கப்படுகிறது.
வெப்ப மண்டலப் பகுதிகளில் மட்டுமே இந்த மான் கொம்பு வண்டுகளால் வாழ முடியும். குளிர்பிரதேசங்களில் இவற்றால் தாக்குப்பிடிக்க முடியாது. இவை இறந்த மரங்களை மட்டுமே சாப்பிடுவதால் இயற்கை சூழலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதன் தனித்துவமான தோற்றம் மற்றும் அரிதான தன்மை காரணமாக மிகவும் விலை உயர்ந்த பூச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த இறந்த பூச்சிகளின் விலை பழங்கால பொருட்களுக்கு இணையாக இருப்பதால் இந்த வண்டு பூச்சியை சேகரிப்பாளர்கள் அதன் விலையை பொருட்படுத்தாமல் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த வண்டுகள் 2 முதல் 6 கிராம் வரை எடை இருக்கும். ஆண் வண்டுகள் 35 முதல் 75 மி.மீ. நீளமும், பெண் வண்டுகள் 30 முதல் 50 மி.மீ. நீளமும் இருக்கும்.
இந்த வண்டுகள் அழுகும் மரத்தையும், பழச்சாறு மற்றும் மரச்சாறுகளையும் மட்டுமே சாப்பிட்டு சுமார் ஏழு ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. இதில் ஆண் வண்டுகளுக்கு முன்பு இருக்கும் தாடைப் பகுதி மான் கொம்பு போன்று காணப்படும். ஆண் ஸ்டாக் வண்டுகள் இனப்பெருக்கக் காலத்தில் பெண் வண்டுகளுடன் இணைவதற்காக அவற்றின் தனித்துவமான கொம்பு போன்ற தாடைகளை பயன்படுத்துகின்றன.
இந்த வண்டுகளின் தலையில் ஐந்து அங்குல நீளமான கருப்பு கொம்புகள் காணப்படுகின்றன. இந்தக் கொம்புகள் ஆபத்தான நோய்கள் பலவற்றுக்கு மருந்து தயாரிக்கப் பயன்படுவதால் அதிக மதிப்புடையதாகவும் விலை உயர்ந்ததாகவும் உள்ளது.
இந்த வண்டுகளின் வாழ்விடமும் இயற்கைச் சூழலும் அழிக்கப்பட்டு வருவதால் இவை இனப்பெருக்கம் செய்வதை மிகவும் கடினமாக்கியது. அதனால் இந்த வண்டு அழியும் அபாயத்தில் உள்ளது என்று கூறப்படுகிறது. பெரும்பாலான ஸ்டாக் வண்டுகள் அழுகும் மரக்கட்டைகளை சுற்றியே வாழ்கின்றது. மரக்கழிவுகள் மற்றும் குப்பைகளில்தான் இந்த வண்டுகள் அதிகம் காணப்படும்.
உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான வண்டு இனமாகக் கருதப்படும் மான் கொம்பு வண்டுகள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன. பெரிய வண்டுகள் மரங்களில் இருந்து கசியும் சாற்றை உண்கின்றது. லார்வாக்கள் அழுகும் மரங்களில் குறிப்பாக ஓக் மரத்தில் வாழ்கின்றன. சிறிய ஸ்டேக் வண்டுகளுக்கு கொம்புகள் கிடையாது. குப்பையில் வளரும் இந்த வண்டு BMW காரை விட விலை அதிகம்! இந்த வண்டுகள் கிடைத்தால் ஒரே நாளில் பணக்காரர் ஆகிவிடலாமாம்!