அன்றாட வாழ்வில் அடிக்கடி நிகழும் பூச்சிக்கடிக்கு எளிய வீட்டு வைத்தியம்!

பூச்சிக்கடி
https://manithan.com

வீட்டில் அல்லது தோட்டத்துப் பக்கம் செல்கின்ற பொழுது, எதிர்பாராதவிதமாக சிறு சிறு பூச்சிகள் கடிக்கலாம். அதில் சில விஷப் பூச்சிகளாகக் கூட இருக்கலாம். பூச்சிக்கடியை பொறுத்தவரையில் ஒவ்வொரு பூச்சிக்கும் ஒவ்வொரு வகையான விஷத்தன்மை உண்டு. எந்தெந்த பூச்சிகள் கடித்தால் என்னென்ன இயற்கையான எளிய வீட்டு வைத்தியங்களைச் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

* குளவி, தேனீக்கள் கொட்டினால் வலி, வீக்கம் ஏற்படும். ஒருவித எரிச்சலுடன்கூடிய வலி, கொட்டிய இடத்தில் வெள்ளை நிற திட்டு மற்றும் வீங்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். கொட்டிய இடத்தை கையால் தேய்த்தால் விஷம் இறங்கி வலி அதிகமாகும். முள்ளு அல்லது கொடுக்கை எடுத்துவிட்டு மண்ணெண்ணெயை கடிபட்ட இடத்தில் தேய்க்க நிவாரணம் கிடைக்கும்.

* ஜெல்லி மீன்களால் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் அரிப்புக்கு பாதிக்கப்பட்ட பகுதியை வினிகர் கொண்டு கழுவி விட குணமாகும்.

* தேள் கொட்டினால் இரண்டு வெற்றிலையுடன் ஐந்தாறு மிளகு சேர்த்து மென்று சாப்பிட விஷம் இறங்கிவிடும்.

* கம்பளி பூச்சியின் ரோமம் பட்ட இடத்தில் அரிப்பு வீக்கம் உண்டாகும். வெற்றிலையை கடிபட்ட இடத்தில் வைத்து அழுத்தி தேய்க்க விஷம் இறங்கி விடும். வலியும் இருக்காது.

* வண்டு கடித்தால் பப்பாளி இலையை கசக்கி கடித்த இடத்தில் நன்கு தேய்த்து விடவும் அல்லது பப்பாளி இலையை அரைத்து தடிமனாக பற்று போல் போட குணமாகும்.

* சிலந்தி கடிக்கு ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து விட குணமாகும்.

* எலி கடித்தால் உடலில் அரிப்பு ஏற்படுவதுடன் கண் சிவந்து காணப்படும். எலிகளின் உமிழ்நீர் மற்றும் கழிவுகள் நோய்களை பரப்பும். எனவே, எலி கடித்தால் சரியான சிகிச்சை மிகவும் அவசியம். எலிக்கடி விஷம் முறிய விளாமரத்தின் பூக்களை தண்ணீரில் கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்க விஷம் முறிந்து போகும்.

* அரணை கடித்தால் பனைவெல்லம் 100 கிராம் அளவில் சாப்பிட விஷம் முறியும்.

* வண்டு, சிறு பூச்சிகளின் கடிக்கு வெள்ளைப் பூண்டை நசுக்கி அல்லது அரைத்துக் கட்ட, வலி போய் விஷமும் முறிந்து விடும்.

* பூரான் கடித்தால் தடிப்பு ஏற்பட்டு அரிப்பும் எடுக்கும். சுண்ணாம்பு, மஞ்சள் தூள், உப்பு மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து விட, விஷம் இறங்குவதுடன் வலியும் போகும்.

* எறும்பு கடிக்கு கடித்த இடத்தில் வெங்காயத்தை தேய்த்து வர வலி போய்விடும்.

* பூனை கடித்து விட்டால் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்.

இதையும் படியுங்கள்:
புத்திசாலிகள் சந்திக்கும் பிரச்சனைகள்!
பூச்சிக்கடி

* தேனீக்கள் கொட்டினால் சுண்ணாம்பு, மஞ்சள் பொடி இரண்டையும் நன்கு பிசைந்து தேனீ கொட்டிய இடத்தில் அழுத்தி தேய்த்து விட்டு கடிபட்ட இடத்திலேயே ஒட்ட வைத்து விட்டால் கடுப்பு நின்றுவிடும். வலியும் உடனடியாக குறைந்து விடும்.

* எந்த விஷக்கடியானாலும் வெங்காயத்தை நறுக்கி அடிபட்ட இடத்தில் தேய்க்க வலி குறைவதுடன் வீக்கமும் குறைந்து விடும். அதேபோல் குப்பைமேனியை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துத் தடவ குணமாகும்.

இவை எல்லாமே முதலுதவியாக செய்து கொள்ளலாம். பக்கவிளைவுகள் அற்றது. முதலுதவி செய்து கொண்ட பின் முறையாக மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com