வளங்களை அள்ளித் தரும் நட்சத்திர வனங்கள்!

Special Othiyan tree
Star forests
Published on

திருமணத்தில் இரண்டு மரங்களுக்கு பெரும் சிறப்பு உண்டு. ஒன்று வாழைமரம். மற்றொன்று ஒதியன் மரம். எல்லா விசேஷங்களுக்கும் பந்தலின் முன்வாயிலில் வைப்பது வாழை மரத்தைதான். ஏனெனில் அடி முதல் நுனிவரை பயன்படக்கூடிய மரம் வாழை என்பதால் அதற்கு அப்படிப்பட்ட பெருஞ்சிறப்பு. திருமணத்தில் வாழையடி வாழையாக குடும்பம் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காக அதை பந்தலின் முன்பாக கட்டுகிறார்கள். 

ஆனால் ஒதிய மரத்தை "ஒன்றுக்கும் உதவாத ஒதியமரம்" என்றுதான் சொலவடையாக சொல்வார்கள். ஆனால் திருமணத்தின் போது அரசாணி பானையை தாங்கி நிற்கும் அரணாக விளங்குவது ஒதிய மரம்தான். உலகில் எதுவுமே உதவாதது என்று ஒரு பொருளும் இல்லை என்பதைத்தான் இது குறிக்கிறது. நன்கு தேறிய இம்மரத்தில் பலகை அறுப்பது உண்டு. 

மேலும்  திருமணத்தில் வைத்த ஒதிய மரத்தை வீட்டில் நட்டு அந்த மரத்திற்கு திருமணமான பெண்ணின் கையால் முதன்முறையாக தண்ணீர் விட்டு வளர்க்கச் சொல்வார்கள் .அது நன்றாக செழித்து வளர்ந்தால் வீடு சுபமங்கலமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

அதோடு ஒதியன் மரம் நீண்ட நாட்கள் பச்சையை தாங்கி நிற்கும் மரம். அது ஒரு சுப சகுனமாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் ஒதிய மரத்தை திருமணத்தில் அரசாணி பானையுடன் சேர்த்து கட்டுகிறார்கள். இப்படி இந்த இரண்டு மரமும் எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் திருமணத்தில் பொதுவாக பயன்படுவது ஒரு தனிச்சிறப்பு. 

நம் நாட்டில் வேதங்கள் அண்டத்தை 27 பாகங்களாக பிரித்துள்ளன. அதன் அடிப்படையில் ஒவ்வொருவரின் பிறப்பின் அடிப்படையில் அவரவர்களுக்கு நட்சத்திரங்கள் வரையறுக்கப்படுகின்றன.  ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்தாரோ அந்த நட்சத்திரத்தையே பெயராக வைத்து அழைப்பவர்களும் உண்டு. அதற்கு பதிலாக இந்த நட்சத்திரத்திற்கு எந்த எழுத்தை முதலாக வைத்து பெயர் வைக்கப்பட வேண்டும் என்ற விபரத்தையும் ஜோதிடரிடம் கேட்டு பெயர் சூட்டுபவர்கள் உண்டு.

இதையும் படியுங்கள்:
இந்த 'வேர்களின் ரோஜா'வில் இத்தனை மருத்துவ சிறப்புகளா?
Special Othiyan tree

அதுபோல் பெயர் சூட்டினால் பெரும் பெயர்பெற்று புகழடைவார்கள் என்ற  நம்பிக்கையின் காரணத்தால் இது போல் பெயர் வைத்து அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. இதுபோல் இந்த நட்சத்திரங்கள் ஒவ்வொரு மரத்துடன் இணைக்கப் பட்டுள்ளன. நட்சத்திரங்கள் எவ்வாறு தனி மனிதனின் குணாதிசயங்களை வரையறுக்கின்றனவோ அவ்வாறே நட்சத்திர மரங்களை வளர்ப்பது அவரவரின் நலன்களை பேணும் என்பது மக்களின் நம்பிக்கை. நட்சத்திர வனங்கள் வளங்களை அள்ளித் தரும் என்றும் நம்பப்படுகிறது. 

அவ்வகையில் கீழே உள்ள மரங்கள் நட்சத்திரத்துக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டுள்ளன.

அஸ்வதி -எட்டி , பரணி -நெல்லி, கார்த்திகை- அத்தி, ரோகினி- நாவல், மிருகசீரிஷம்- கருங்காலி, திருவாதிரை -செங்கருங்காலி, புனர்பூசம்- மூங்கில், பூசம்- அரசமரம் ,ஆயில்யம் -நான்கு நான்கள் ,சுருளி,மகம்- ஆலமரம், பூரம் -பலாசு அல்லது காட்டுமுருக்கு ,உத்திரம் -அலரி, அஸ்தம் -வேலம், சித்திரை -வில்வம் ,சுவாதி -மருதம்  விசாகம் -விளா ,அனுஷம் -மகிழ், கேட்டை- பிராய் ,மூலம்- குங்கிலியம், பூராடம்- வஞ்சி, உத்திராடம் -பலா, திருவோணம்- எருக்கம், அவிட்டம்- வன்னி, சதயம்- கடம்பு ,பூரட்டாதி- மாமரம், உத்திரட்டாதி -பனைமரம், ரேவதி- இலுப்பை.

இதையும் படியுங்கள்:
அடேங்கப்பா…! வில்வ மரத்தில் இத்தனை மருத்துவ குணங்களா?
Special Othiyan tree

நட்சத்திர வானங்கள் பொதுவாக செவ்வக வடிவிலும், வட்ட வடிவிலும் அமைக்கப்படுகின்றன. இவ்வகையான வடிவங்கள் பூங்காக்கள் மற்றும் கோயில்களுக்கு உகந்தவை. அதிக இட வசதி உள்ள பொது இடங்களிலும் இவ்வகையான நட்சத்திர வனங்களை அமைக்கலாம். குறைவான இடவசதி உள்ள இடங்களில் வட்ட வடிவில் அமைக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com