மாடித் தோட்டம் அமைக்கலாம் வாங்க!

மாடித் தோட்டம்...
மாடித் தோட்டம்...

க்கள் அனைவருக்கும் தரமான நஞ்சற்ற உணவு கிடைக்க தீர்வு ஒன்று உண்டென்றால், அதுதான் இயற்கை விவசாயம். கிராமங்களில் சில வீடுகளுக்கு முன்பு தோட்டம் அமைத்து பராமரிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். தோட்டத்தில் பூச்செடிகள் மற்றும் காய்கறிச் செடிகளே அதிகம் இடம் பிடித்திருக்கும். நமது தோட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள் நஞ்சற்றதாக இருக்கும் என்பதால், உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. 

கிராமத்தில் மட்டும்தான் தோட்டம் என்பது சாத்தியமா? எங்கு பார்த்தாலும் கட்டடங்களாக காட்சியளிக்கும் நகரங்களில் தோட்டம் சாத்தியமில்லையா என்று நகரவாசிகள் ஏங்கித் தவித்தனர். அதிலும் நஞ்சற்ற காய்கறிகளை நம்மால் விளைவிக்க முடியாதா என்ற ஏக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது. நகரவாசிகளின் இந்த ஏக்கத்தைப் போக்க வந்ததுதான் மாடித்தோட்டம்.

மாடித்தோட்டத்தின் சிறப்பு என்னவென்றால், மிகக் குறைந்த இடத்தில், மிகக் குறைந்த செலவில் நமக்குத் தேவையான காய்கறிச் செடிகளை உற்பத்தி செய்யலாம். மாடித்தோட்டம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால், நாடு முழுவதும் மாடித்தோட்டங்களின் எண்ணிக்கை வெகு சில நாட்களிலேயே அதிகரித்தது. நகரங்களில் மட்டுமல்லாது, கிராமங்களிலும் மாடித்தோட்டம் தனி இடத்தைப் பிடித்தது என்றால், அது மிகையாகாது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் உள்ள வித்தியாசமான கடற்கரைகள்… தகவல்கள்!
மாடித் தோட்டம்...

மானியம்:

மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு அரசின் மானியம் பெரிதும் உதவியாக உள்ளது. இந்த மானியத் திட்டத்தில், ‘மாடித்தோட்டம் கிட்’ வழங்கப்படுகிறது. இதில், தோட்டம் அமைப்பதற்கான விதைகள் முதல் உரங்கள் வரை அனைத்துமே இடம் பெற்றிருக்கும். அவரவர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையை அணுகினால் மாடித்தோட்டம் தொடர்பான அனைத்து விவரங்களையும், ஆலோசனைகளையும் பெறலாம்.

மாடித்தோட்டம் அமைக்கத் தேவையானவை:

1. தொட்டி அல்லது பாலித்தீன் பைகள்:

மண் தொட்டிகளை பயன்படுத்துவது மிகச் சிறந்தது. ஏனெனில், மண்தொட்டியில் உள்ள நுண் துளைகள் மூலம் வேர்களுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். தொட்டிகளுக்கு பதிலாக பாலித்தீன் பைகளைப் பயன்படுத்தினால் 200 மைக்ரான் தடிமன் உள்ள பைகளைப் உபயோகப்படுத்துவது சிறந்தது. ஏனெனில் குறைந்த தடிமன் பைகள் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்காது. அதிக தடிமன் பைகளில் குறைந்த அளவு மண்தான் நிறையும். 

2. மண்:

வேர்கள் நன்றாக ஊன்றி வளர, மண்தான் முக்கியக் காரணம். தொட்டி அல்லது பைகளில் முக்கால்வாசி மண் நிரப்பினால் போதுமானது.

3. சூரிய வெளிச்சம்:

மாடியில் சூரிய வெளிச்சம் நன்றாக படும் என்பதால், இதில் பிரச்னை இருக்காது.

4. உரங்கள்:

சமையலறைக் கழிவுகளையே உரங்களாகப் பயன்படுத்தலாம். 

5. தண்ணீர்:

மழைக்காலத்தில் தண்ணீருக்குப் பிரச்னை இருக்காது. மற்ற நாட்களில் காலையிலேயே தண்ணீர் ஊற்றுவது நல்லது. மாடித்தோட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கவும் அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.

6. விதைகள் மற்றும் நாற்று:

அரசின் மாடித்தோட்ட கிட் பையில், விதைகள் இருக்கும்.
மேலும், விதைகள் மற்றும் நாற்றுகள் வேண்டும் என்றால் வேளாண் துறையை அனுகி வாங்கிக்கொள்ளலாம்.

மாடித்தோட்டம்...
மாடித்தோட்டம்...Image credit - youtube.com

இயற்கை உரங்கள்:

மாடித்தோட்டத்தை சிறப்பான முறையில் கையாள இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது மட்டுமே சிறந்த வழியாகும். இயற்கை உரங்களில் உள்ள ஒரு பெரிய நன்மை என்னவென்றால், உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் நஞ்சற்றதாக கிடைக்கும். உரங்களை தனியே வாங்க வேண்டி இருக்காது. வீட்டில் உள்ள சமையலறைக் கழிவுகளையும், பழத் தோல்களையும் உரங்களாக உபயோகப்படுத்தலாம். மேலும், வேப்ப இலைகளை அரைத்து, தண்ணீர் கலந்து செடிகளின் மீது தெளித்தால் பூச்சித் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும்.

தாமதம் வேண்டாம்:

மாடித்தோட்டம் அமைத்தால் வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் நஞ்சற்றதாக உற்பத்தியாகும். அதோடு மன நிறைவும் கிடைக்கும். தோட்டத்தின் மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். மாடியே, பசுமையாகக் காட்சியளிக்கும். மாடித்தோட்டம் அமைக்க விருப்பம் கொண்டால் தாமதிக்க வேண்டாம். உடனே, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்குங்கள். நம் வருங்கால சந்ததியினருக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க மாடித்தோட்டத்தில் இருந்து நம் கடமையைத் தொடங்குவோம்‌.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com