கல்லா? செடியா? கல் செடியா? செடியைப் போன்ற கல்லா?

Lithops
Lithops
Published on

கல்செடி (Lithops) என்பது ஐசோஏசியே எனும் சதைப்பற்றுத் தாவரப் பேரினத்தில் உள்ள பனித்தாவரக் குடும்பத்தைச் சார்ந்த பேரினமாகும். இப்பேரினத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக முப்பத்தியெட்டு இனங்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இவை, கூழாங்கல் தாவரம் அல்லது உயிர்க்கல் என்றும் சொல்லப்படுவதுண்டு.

தென்னாப்பிரிக்காவின் ஆய்வாளர் மற்றும் தாவரவியலாளரும் கலைஞருமான வில்லியம் ஜான் புர்செல் என்பவரால் கற்செடியின் முதல் அறிவியல் விளக்கம் தரப்பட்டது. 1811 ஆம் ஆண்டு கற்செடி இனம் உருவாக்கப்பட்டு அவற்றின் கீழ் இவை வகைப்படுத்தப்பட்டதன் விளைவாக, அடுத்தடுத்த பத்தாண்டுகளில் டஜன் கணக்கான இனங்கள் வெளியிடப்பட்டன. 1950 ஆண்டு வரையிலும், இந்த இனமானது வகை பிரித்தல் வழியாக நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை.

1950 ஆம் ஆண்டுகளில், டெஸ்மண்ட் மற்றும் நவ்ரீன் கோல் கற்செடிகளைப் பற்றி படிக்கத் தொடங்கினர். இருவரும் சேர்ந்து, வெவ்வேறு கற்செடிகளைக் கிட்டத்தட்ட அனைத்து இயற்கை வாழ்விடங்களையும் பார்வையிட்டனர். மேலும், தோராயமாக 400 மாதிரிகளைச் சேகரித்தனர். அவர்கள் அவற்றை ஆவணப்படுத்தி அடையாளம் கண்டு, ஒரு எண்ணை வழங்கினர். இப்போது உலகம் முழுவதும் இன்றும் பயன்படுத்தப்படும் 'கோல்' (Cole) எண் என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் 1988 ஆம் ஆண்டில் இனங்கள், கிளையினங்கள் மற்றும் வகைகளை விவரிக்கும் ஒரு உறுதியான புத்தகத்தை கற்செடி - பூக்கும் கற்கள் (Lithops: Flowering Stones) எனும் பெயரில் வெளியிட்டுள்ளனர்.

கல்செடிகளுக்குத் தண்டு கிடையாது. இவை தென் ஆப்பிரிக்காவின் பாலைவனப் பகுதியில் வளர்கின்றன. மணல் மீது சிறிய சிறிய கற்கள் கிடப்பது போல் காட்சியளிக்கின்றன. இச்செடி பார்ப்பதற்கு மிக ஆச்சரியமாக இருக்கும். இலைகள் கல் போன்று இருக்கும். இந்த இலைகளும் இரண்டு பிரிவுகளாக, உடைபட்ட இரண்டு கல் போல் காட்சியளிக்கும். இதன் இலைகள் சதைப்பற்று உடையவை. சாம்பல் நிறத்தில் இருக்கும். இலைகளின் இடையே பூ வளர்கிறது.

இதையும் படியுங்கள்:
நேர்மறை ஆற்றலையும் அதிர்ஷ்டத்தையும் தரக்கூடிய ஆர்க்கிட் மலர்கள்!
Lithops

கற்செடிகளின் இனப்பெருக்கம் விதை அல்லது வெட்டல் மூலம் செய்யப்படுகிறது. ஒரு தாவரம் இயற்கையாகப் பிரிக்கப்பட்டு பல தளிர்களை உருவாக்கிய பிறகு மட்டுமே புதிய தாவரங்களை உற்பத்தி செய்ய வெட்டுதல் பயன்படுத்தப்படும், எனவே பெரும்பாலான இனப்பெருக்கம் விதை மூலம் செய்யப்படுகிறது. ஒரு இனத்தின் இரண்டு தனித்தனி குளோன்கள் ஒரே நேரத்தில் மலர்ந்தால், கற்செடிகள் கையால் எளிதில் மகரந்தச் சேர்க்கை செய்யப்படும். மேலும் விதை சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு முழு வளர்ச்சியடைந்து பழுத்திருக்கும். விதை முளைப்புத்திறன் அதிகம். ஆனால், இதன் நாற்றுகள் சிறியதாகக் காணப்படும். முதலிரண்டு வருடங்கள் நாற்றுகள் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கும், மேலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை கற்செடிகள் பூக்காது என்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com