மனிதர்களால் ஒருநாள் உணவு இல்லையென்றால் கூட வாடிவிடுவர். ஆனால் சில உயிரினங்கள் பல நாட்கள் ஏன் பல மாதங்கள் கூட உணவில்லாமல் வாழும் தன்மை கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட உயிரினங்களை காண்போம்.
இவைகளுக்கு பொறுமை அதிகம். இது தன் முட்டையிடும் நேரத்தில் இரண்டு மாதங்கள் கூட உணவில்லாமல் வாழும். இதன் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தே இதற்கு போதுமானதாக உள்ளது. 60டிகிரி குளிரில் கூட அண்டார்டிகாவில் வாழக்கூடியது. இவைகளின் மெடபாலிசமும் அப்போது குறைகிறது. முட்டையிடும் காலங்களில் உண்ணாமலேயே இருக்கும்.
பெரும்பாலும் இவைகளுக்கு சக்தியை எரிக்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை. இவற்றை cold blooded இனங்கள் என்று கூறுவர். இவைகள் மூன்று மாதங்களோ சமயத்தில் ஒரு வருடம் கூட உணவு உண்ணாமல் வாழக்கூடிய பண்பு படைத்தது. இவைகளுக்கு சக்தியை சேர்த்து வைக்கக்கூடிய பண்பு உள்ளது. தன் உடல் கொழுப்பையே அது நம்புகிறது. இவைகளுக்கு பெரும்பாலும் உணவு கிடைப்பது அரிதானதால் இயற்கையே இதற்கு பட்டினியோடு வாழ வழி வகுத்துள்ளது.
வாரத்தில் ஒருநாள் அல்லது மாதத்தில் ஒருநாள் மட்டும் உண்டு உயிர்வாழும் தகுதி படைத்தது இதற்கு கிடைத்திருக்கும் பொருளின் அளவைப் பொறுத்தது பெரிய இரை கிடைத்தால் அதை ஜீரணிக்கவே பலநாட்கள் ஆகும். இதன் மெடபாலிசம் மிக மெதுவாக இருப்பதால் உண்ணும் உணவு ஜீரணிக்க நாள் ஆகும். சில வகை பாம்புகள் 6 மாதம் கூட உணவே இல்லாமல் வாழக்கூடியது.
இவை குட்டிகளை ஈன்றும்போது உணவு உண்பதோ சிறுநீர் கழிப்பதோ நீர் அருந்துவதோ இல்லை. ஏழு மாதங்கள் கூட இப்படி இது இருக்கும் குளிருக்கு முன் நிறைய உணவை உண்டு கொழுப்பை சேமிக்கும். இதன் உடம்பில் புரதம் ரீ சைக்கிள் செய்யப்படுவதால் உணவு இல்லையென்றாலும் உயிர் வாழும்.
பல வாரங்கள் உணவு உண்ணாமல் வாழக்கூடியது இந்த ஆமை இனம்.. இவை முட்டையிடும் காலத்தில் முழுமையாக உணவு உண்ணுவதையே நிறுத்திவிடும். மேலும் பலமைல்தூரம் பிரயாணம் செய்யும் போதும் உண்ணுவதை நிறுத்திவிடும். தாங்கள் உண்ணும் உணவை கொழுப்பாக மாற்றி சேமிக்கும். இவைகளின் மெடபாலிசமும் மெதுவாக இருப்பதால் பல மைல்கள் பிரயாணம் செய்தாலும் உணவின்றி உயிர் வாழமுடியும்.