மழை உருவாவதற்கு பின்னால் இருக்கும் 'தூசி' ரகசியம்: ஆச்சரியமான தகவல்!

 Surprising information!
Surprising information!
Published on

வானத்தில் படர்ந்திருக்கும் தூசிகள் காரணமாகவே மழை பொழிவு ஏற்படுகிறது. மழையை ரசித்த காலம் சென்று தற்போது மழை என்றாலே அச்சப்படும் நிலைக்கு மக்கள் வந்திருக்கின்றனர். பருவநிலை மாறுபட்டின் காரணமாக தற்போது அளவுக்கு அதிகமான மழைப்பொழிவு உலகம் முழுவதும் பதிவாக தொடங்கி இருக்கிறது. அளவுக்கு அதிகமான வெப்பத்தான் காரணமாக இந்த மிகப்பெரிய மழைப்பொழிவுகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன.

அதே நேரம் ஒரு சில பகுதிகளில் மழை மிக அதிக அளவில் காணப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் மழை பொழிவே இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இப்படியான பல்வேறு சூழல்களுக்கு நடுவே உலகில் பல்வேறு பகுதிகள் சிக்கித் தவிக்கிறது.

மேகத்தோற்றம்:-

அதே சமயம் வானத்தில் தூசிகள் இயல்பாகவே காணப்படுகின்றன. மேலும் காற்றின் வேகம் காரணமாக பூமியின் நிலப்பரப்பில் இருந்து மணல் துகள்களும் அடித்து செல்லப்பட்டு வானத்தில் தேங்குகின்றன. அவைகள் வானத்தில் தூசி கூட்டங்களாக பரவி படர்ந்து உள்ளன. இவ்வாறான தூசிகளில் நீராவிகள் படர்வதனால் உருவாகும் தோற்றமே மேகங்கள்.

இதையும் படியுங்கள்:
என்ன பாஸ் தனியா போறீங்க? - அந்த ஒரு பென்குயினின் சோகமான முடிவு!
 Surprising information!

மழை உருவாதல்:-

மழை மூன்று பரிணாமங்களை கொண்டதாக உள்ளது. சூரிய வெப்பம் பூமியில் இருக்கும் தண்ணீரை ஆவியாக்கி மேலே இழுத்து செல்கிறது. அவை வானத்தில் இருக்கக்கூடிய சிறிய தூசிகள் மீது படிந்து மேகக் கூட்டங்களாக உருவெடுக்கின்றன. அந்த மேகக் கூட்டங்கள் மீது மீண்டும் மீண்டும் அதிகப்படியான நீர் துளிகள் சேர சேர எடை அதிகரிக்கிறது. அந்த நேரத்தில் வீசும் குளிர்ந்த காற்றினால் மேகங்கள் உதிர்ந்து மழைத்துளிகள் ஏற்படுகின்றன.

-க. இப்ராஹிம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com