இயற்கையின் அற்புதமான படைப்புகளில் Tanzanite என்ற கனிமமும் ஒன்று. தனது தனித்துவமான நீல நிறத்துடனும், அரிதான தன்மையுடனும் உலகெங்கிலும் உள்ள நகை ஆர்வலர்களை இந்த கனிமம் கவர்ந்து வருகிறது. இந்தத் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இன்று வரை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1967 ஆம் ஆண்டு தான்சானியாவின் மரா மலைகளில், தான்சனைட் கல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கல் தனது அழகிய நீல நிறத்தால் உடனடியாக பிறரது கவனத்தை ஈர்த்தது. அப்போது, இந்தக் கல்லின் தனித்துவமான தன்மை மற்றும் அதன் மதிப்பு பற்றி யாருக்கும் தெரியாது. பின்னர், இந்தக் கல்லை ஆய்வு செய்த கனிமவியலாளர்கள், இது முற்றிலும் புதிய வகை கனிமம் என்பதை உறுதிப்படுத்தினர். அதன் பிறகு தான் இந்த கல்லுக்கு தான்சானியாவின் பெயரைக் கொடுத்து “தான்ட்சனைட்” என்று பெயரிடப்பட்டது.
தான்சனைட் கல்லின் மிகவும் குறிப்பிடத்தக்க பண்பு அதன் அழகான நீல நிறம். இந்த நீல நிறம் எந்த ஒரு செயற்கையான பொருளும் சேராமல், இயற்கையாகவே உருவாகும். இந்தக் கல்லின் நிறம் வெப்பத்தால் மாறும் தன்மை கொண்டது. அதிக வெப்பத்தில் இந்த கல் தனது நீல நிறத்தை இழந்து மஞ்சள் நிறமாக மாறும். தான்சனைட் மிகவும் கடினமானது. மோஸ் கடினத்தன்மை அளவில் 6.5 - 7 வரை உள்ளது. இதன் காரணமாக இது நகைகள் தயாரிக்க மிகவும் பொருத்தமானது என்பதால் வளையல்கள், நெக்லஸ் மற்றும் மோதிரங்கள் செய்ய இதை பயன்படுத்துகின்றனர்.
இந்தக் கல்லின் விலை, அதன் அரிதான தன்மை, கேரட், எடை, நிறம், தூய்மை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். பெரிய கேரட் எடையுள்ள தூய்மையான அடர் நீளமுள்ள டான்சனைட் கற்கள் மிகவும் விலைமதிப்பு மிக்கவை. கிட்டத்தட்ட ஒரு கேரட் 100 முதல் 500 டாலர்கள் வரை இருக்கும். தான்ட்சனைட் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தே அதன் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தான்சனைட் கல் மிகவும் கடினமானது என்றாலும், அதை கவனமாகக் கையாள வேண்டும். இந்தக் கல்லை வேறு கற்களுடன் தொடர்புகொள்ள அனுமதிக்கக் கூடாது. மேலும், இதை சுத்தம் செய்யும்போது மென்மையான துணியைப் பயன்படுத்தி, சூடான சோப்பு கரைசலில் கழுவ வேண்டும். இல்லையேல் இவற்றின் உண்மையான தன்மை மங்கிவிடும்.