
Orlov Trotter __ரஷ்யா:
சகிப்புத்தன்மைக்கும் வேகத்திற்கும் பெயர் பெற்ற இது குதிரை ரேஸ்களில் ஈடுபடுத்தப்பட வேண்டிய நல்ல தோற்றத்தை உடையது.
Fjord horse __ நார்வே:
இது மிகவும் பழமையான தோற்றத்தில் adulteration இல்லாத குதிரை. இதற்கு இரண்டு டன் எடை பிடரி மயிர் உள்ளது. வயல் வெளி வேலைகளுக்கும் மற்றும் சவாரி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
மார்வாடி குதிரை _ இந்தியா:
இதற்கு அடையாளம் இதன் உள் மூடிய காதுளும் மற்றும் கம்பீரமான தோற்றம்மும் தான். முன்னாளில் ராஜபுத்திர வீரர்கள் இந்த குதிரையை பாலைவன சீதோஷணத்திற்கு பயன்படுத்தினார்கள்.
Knabstrupper _டென்மார்க்:
உடலில் திட்டு திட்டான அடையாளம் உள்ள இது சர்க்கஸ் மற்றும் ஜம்பிங் போட்டியில் பங்கேற்க பயன்படுத்தப்படுகிறது.
Haflinger ஆஸ்ட்ரியா:
பொன்னிறமான உடலும் மலைச்சாதி குதிரையுமான இது ஆல்ப் மலைப் பகுதிகளில் சவாரி செய்வதற்கு ஏற்றது.
Clydesdale:
அளவில் பெரியதாக இருக்கும் இது ஸ்காட்லாந்தில் காணப்படுகிறது. வண்டிகளை இழுக்கக் கூடியது. முன்பெல்லாம் வயல்வெளி வேலைக்கு உபயோகப்படுத்தப்பட்டது. கடினமாக உழைக்க கூடியதாகவும், அமைதியாகவும் இருக்கக் கூடிய வகையாகும்.
Appaloosa:
கோட் டிசைனுடன் காணப்படும் இது அமெரிக்காவை இருப்பிடமாகக் கொண்டது. சவாரிக்காகவும், போட்டிகளில் கலந்து கொள்ளவும் ஏற்றது.
Shire horse:
உலகிலேயே மிகப் பெரிய குதிரையாக கருதப்படும் இது அமைதியானதாகவும் எல்லாவித சவாரிக்கும் ஏற்றதாகவும் உள்ளது. பிரிட்டனை இருப்பிடமாகக் கொண்டது.
Friesian:
கம்பீரமான தோற்றம் கொண்ட இந்த குதிரை நெதர்லாந்தில் Friesland பகுதியைச் சேர்ந்தது. கம்பீர தோற்றம் ஆனாலும் அமைதியான சுபாவம் உள்ள இது குதிரை ரேஸ் மற்றும் சவாரிகளுக்கு ஏற்றது. சினிமா படங்களிலும் காணப்படுகிறது.
Andalusian:
ஐபீரியன் பெனின்சுலாவைச் சேர்ந்த இது கம்பீர தோற்றம் உடையது. புத்திசாலியான இது சவாரிகளுக்கு மிகவும் சிறந்தது. முன்பு போர்க் காலங்களில் பயன்படுத்தப்பட்டது. தற்போது குதிரை ரேஸ் மற்றும் சவாரிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. சினிமா, டிவி ஷோக்களில் முக்கிய இடம்பெறுகிறது.