தொட்டிச் செடிகள் வாடிப் போகிறதா? இந்த ஒரு பொருள் போதும் பசுமையாக்க!

அலுமினியம் ஃபாயில் மூலம் உங்கள் வீட்டுத் தொட்டிச் செடிகளை வாடாமல் செழிப்பாக வளர்க்க எளிமையான வழிகள்.
தொட்டிச் செடிகள் | Plant and Aluminium foil
தொட்டிச் செடிகள்| Plant and Aluminium foilImage credit: Gemini AI
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on: 

உங்கள் வீட்டிற்கு ஆசையாக நீங்கள் கொண்டுவந்த செடி நல்ல நிலையில் இல்லாதது கண்டு வருத்தப்படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம்; இருக்கவே இருக்கிறது ஒரு தீர்வு‌. இதன்மூலம் செடிகளை ஆரோக்கியமாக வைக்க முடியும்.

நாம் வீடுகளில் செடிகளை வைக்க வேண்டுமென்றால் அதற்கு நாம் பல முயற்சிகள் செய்யவேண்டும்‌. செடிக்கு  தண்ணீர் விட்டால் மட்டும் போதுமானது அல்ல‌; அந்தச் செடிகளுக்கு எந்த அளவிற்கு சூரிய வேளிச்சம் வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு ஒன்று தெரியுமா?

உங்கள் வீட்டுத் தொட்டியில் செடி வைத்திருந்தால் அந்தத் தொட்டியை அலுமினியம் ஃபாயில் கொண்டு சுற்றி வைக்க  அந்தத் தொட்டியில் இருக்கும் செடிகளின் நிலைமையில் நல்ல மாற்றம் தெரியும். 

இந்தமாதிரி அலுமினியம் ஃபாயிலால் தொட்டியை சுற்றி வைப்பதன் மூலம் செடிக்கு பாதுகாப்பான நிலைமை ஏற்படும். இப்படிச் செய்வதன் மூலம் தொட்டியில் இருக்கும் மண் வறண்டு காய்ந்து போவது தடுக்கப்படும். உங்கள் செடிக்குத் தேவையான வெளிச்சம் ஏற்படுவதுடன், அதிக சூரிய வெளிச்சத்தைக் தடுத்து இலைகளை பசுமையாக வைக்கும். மேலும் பூச்சி மருந்து. அடிப்பதும் சுலபமாக இருக்கும்.

அலுமினியம் ஃபாயிலை தொட்டியில் சுற்றி வைப்பதால் ஏற்படும் நன்மைகள்:

இந்தமாதிரி வைப்பதால் தொட்டியில் உள்ள மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுகிறது. தொட்டிச் செடிகள் மேல் பக்கத்திலிருந்து காய் ஆரம்பித்து கீழ் வரை பரவும். இதனால் நீங்கள் தொட்டியின் மண் வறண்டு விடாமல் இருக்க அடிக்க தண்ணீர் ஊற்றுவீர்கள். இப்படி அடிக்கடி தண்ணீர் ஊற்றுவதால் மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நீங்கிவிடும் அபாயம் உண்டு‌. ஆனால், அலுமினியம் ஃபாயில் பேப்பரைத் தொட்டியைச் சுற்றி வைப்பதால் மண்ணின் ஈரம் தக்கவைக்கப்பட்டு வேர்கள் வரை வறண்டு விடாமல் பாதுகாக்கும்.

தொட்டிச் செடிகள்  | Plant and Aluminium foil
தொட்டிச் செடிகள் | Plant and Aluminium foilPlant and Aluminium foil

நாம் நம் வீட்டில் சில இடங்களில் வெளிச்சம் அதிகம் வராத இடங்களில் தொட்டிச் செடிகள் வைத்திருப்போம். ஃபாயில் அந்த மாதிரி செடிகளுக்கும் தக்க வெப்பத்தை அளிக்கிறது. அலுமினியம  ஃபாயிலில் பூசசிகள் ஏற முடியாமல் வழக்கி விழுவதால், செடிகளின் இலைகள் மற்றும் கிளைகளை பூச்சிகளின் தாக்குதலிலிருந்து காத்து, செடிகளைப் பாதுகாப்பாக வைக்க முடியும்‌.

ஒரு முழு ஷீட் கொண்டு தொட்டியை மூடாமல் ஆங்காங்கு சுற்றி வையுங்கள். தொட்டியின் உள்பக்க விளிம்பிலும் சுற்றி வைக்கவும்.

ஆனால், இது செடியையோ அல்லது கிளையையோ தொடாமல் வைக்கவும். நீங்கள் மதியவேளை வெயில் நன்கு அடிக்கும்போது சுற்றி வைத்தால் சூரிய வெளிச்சத்தின் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு இலைகளின் அடியில் பாதிப்பு நேரலாம்.  மண்ணை மூடிவிடாதீர்கள்‌; உங்கள் தொட்டி மண்ணை திறந்தாற்போல் வைத்திருப்பதால் ஆக்சிஜன் வேண்டிய அளவு செடிக்கும் சென்று ஈரப்பதத்தையும் பாதுகாக்கும்.

இதையும் படியுங்கள்:
அடேங்கப்பா.. பாம்பு கொட்டாவி விட இதுதான் காரணமா. இத கட்டாயம் படிங்க!
தொட்டிச் செடிகள் | Plant and Aluminium foil

நீங்கள் அலுமினியம் ஃபாயிலை சுற்றிவைத்த பிறகு வெளிச்சம் மற்றும் ஈரப்பதம் எந்த அளவிற்கு சமன் ஆகிறது என்பதை நன்கு கவனிக்க வேண்டும். அதற்குத் தகுந்தாற்போல் நீங்கள் அலுமினியம் ஃபாயிலை சுற்றி வைக்கலாம். 

செடிகளை நன்கு பாதுகாக்கவே தோட்க்காரர்கள் இந்த அலுமினியம் ஃபாயிலை சுற்றி வைப்பதை மேற்கொள்கிறார்கள். சாதாரணமாக தோட்டத்தில் பூமியில் செடியை வைப்பதை விட தொட்டியில் செடிகளை பாதுகாப்பான நிலையில் வைத்து பராமரிப்பது சிரமமான விஷயமாகும். அதற்கு பலவழிகளிலும் யோசித்து வழிகளைக் தேடவேண்டும். அப்படி ஒரு வழியாக தொட்டியைச் சுற்றி அலுமினியம் ஃபாயிலை வைக்கும்போது தொட்டிச் செடிகள் ஆரோக்கியமாக வளர்க்க முடியும் என்பதை இப்பதிவு உங்களுக்குத் தெளிவாக விளக்குகிறது‌.

logo
Kalki Online
kalkionline.com