அமேசான் மழைக் காடுகளில் காணப்படுகிறது. இதன் அமைப்பினால் இது Living fossil என அழைக்கப்படுகிறது. இதன் அங்க அடையாளங்கள் இதன் முன்னோர்கள் டையோனசர்களாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுமார் 64 மில்லியன் வருடங்களுக்கு முன் காணப்பட்டது. இது இன்றளவிலும் காணப்படுகிறது. இதனுடைய கழிவு பசுவின் சாணி போன்று இருந்தாலும் நுகர்வதில் தனி வித்யாசம் தெரிகிறது.
சுமார் 56 மில்லியன் வருடப் பழமையை கொண்டது. ஆப்ரிக்காவில் காணப்படும் இது மிகவும் வலிமையான கால்களுடன் வேகமாக ஓடக்கூடியது. பலவருடங்களாக இருக்கக்கூடிய பழமையான பறவை இது. பறவை இனமாக இருந்தாலும் பறக்காமல் அதிவிரைவாக ஓடக்கூடியது.
இந்த வகை பறவைகள் சுமார் பத்து மில்லியன் வருடங்களாகக் காணப்படுகின்றன. உயர்ந்தும் அழகாகவும் காணப்படும் பறவை. அதிகமாகக் கூச்சலிடும் இவை, வட அமெரிக்காவில் காணப்படுகின்றன. புல் வெளிகளிலும், ஈரம் நிறைந்த பகுதிகளிலும் பெரும்பாலும் காணப்படும்.
ந்யூ காலெடோனியா பகுதிகளில் காணப்படும். பறக்கமுடியாத இது சுமார் 33 மில்லியன் வருடங்கள் பழமையானது. இதன் இறகுகள் க்ரே வண்ணத்திலும் , கால்கள் சிவப்பு நிறத்திலும் காணப்படும். இதன் ஒலி தனித்து இருக்கும். இவை குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றன.
வட அமெரிக்கா மற்றும் யூரேசியாவில் காணப்படும் இது சுமார் 50 மில்லியன் வருடங்கள் பழமையானது. இவற்றின் உறுதியான எலும்பு இவை நீரில் நன்கு நீந்த உதவுகின்றன. நீருக்கடியில் நீண்ட நேரம் இருக்கக் கூடியது. இதன் கூர்மையான அலகுகள் மற்றும் எழுப்பும் வித்யாசமான ஒலி தனித்தன்மையானது. நிலத்தில் இருப்பதை விட தண்ணீரிலேயே வாழ விருப்பம் உள்ள இனம் இது.