நம் உடலின் எடை ஏற்றமோ இறக்கமோ கொள்வதற்கும், நாம் உட்கொள்ளும் உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உட்கொள்ளும் உணவின் தன்மைக்கேற்ப எடையில் மாற்றம் நிகழும். உடல் எடை அதிகரித்து, அதை சமநிலைக்குக் கொண்டு வர பலரும் டயட்டில் இருப்பதை நாம் பார்க்கிறோம். அதோடு அவர்கள் இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் 8 வகை உணவுகளை டின்னரில் சேர்ப்பதை தவிர்த்தால் அதிகளவு பலன் கிடைக்கும். அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
ஒயிட் ரைஸில் கார்போஹைட்ரேட்கள் அதிகம். நார்ச்சத்துக்கள் குறைவு. இதை இரவில் உட்கொள்ளும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். உடலின் எடை கூடவும் வாய்ப்பு உண்டாகும்.
எண்ணெயில் பொரித்தெடுத்த உணவுகளை இரவில் உண்பது ஆரோக்கியத்திற்கு உகந்ததாகாது. ஏனெனில் பொரித்த உணவுகளில் எண்ணெயும் கலோரி அளவும் அதிகம். அவை செரிமானமாக அதிக நேரம் பிடிக்கும். அதன் விளைவாக கொழுப்புகள் உடலில் தேங்கி உடல் எடை அதிகரிப்பதற்கு காரணியாகிவிடும்.
இதில் ஊட்டச்சத்துக்களும், நார்ச்சத்தும் குறைவு. அதனால் வயிறு நிறைந்த திருப்தி ஏற்பட வாய்ப்பிருக்காது. கூட இரண்டு ரொட்டி எடுத்துக் கொள்வோம். அப்போது எடை ஏற்றம் காணும்.
இந்த மாதிரி உணவில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் கலோரி அளவு அதிகமிருக்கும். இரவுக்குள் கொழுப்புகள் எரிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு.
சர்க்கரையும் கலோரி அளவும் அதிகம் நிறைந்த இவ்வகை உணவுகளை இரவில் உட்கொள்வது, உடலில் சேரும் கொழுப்பின் அளவை அதிகரிக்கவே உதவும்.
இந்த வகை உணவுகளில், அவை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாதிருக்க சேர்க்கப்படும் இரசாயனப் பொருட்கள் (Preservative), சோடியம், மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் இருக்கும். அவை மெட்டபாலிச செயல்பாடுகளில் குறுக்கிட்டு குறைபாடு உண்டாகச் செய்யும்.
பொதுவாக இவை மிருதுவான டெக்ச்சர் கொண்டிருந்தாலும், இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட்களின் அளவு அதிகமாகவே இருக்கும். எனவே, இதை இரவு உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமாகாது. குறைந்த அளவில் எடுத்துக் கொள்வதில் தவறேதுமில்லை.
சோடா மற்றும் லெமனேட் போன்ற இனிப்பு சேர்த்த பானங்களில் கலோரி கிடையாது. அவற்றில் சேர்க்கப்பட்ட இனிப்பானது உடலில் கொழுப்பை சேமிக்க மட்டுமே உதவும். இந்த 8 வகை உணவுகளை இரவில் உட்கொள்வதை தவிர்த்து வந்தால், எடை பராமரிப்பு ஈஸியாகும்.