உலகிலேயே மிகவும் மெதுவாக இயங்கும் 9 வகை விலங்குகள்!

Slow-moving animals
Slow-moving animals
Published on

ந்த உலகில் வாழும் உயிரினங்களில் பல மெதுவாக நகரும் இயல்புடையவை. அவற்றின் மந்தமான வேகம் பெரும்பாலும் அவற்றின் வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சித் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளதுதான் அதற்கான காரணம். பாலூட்டிகள் முதல் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பூச்சிகள் வரை சில மெதுவாக நகரும் 9 உயிரினங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. ஸ்லாத் (Sloth): மூன்று கால்கள் கொண்ட ஸ்லாத் மிக மெதுவாக நகரும் இயல்புடையது. இது மணிக்கு 24 மீட்டர் மட்டுமே நகரும். இது மிகக் குறைந்த வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. பெரும்பாலான நேரத்தை மரத்தில் ஓய்வெடுப்பதில் கழிக்கின்றது. தனது உடல் ஆற்றலை சேமிக்கவும், வேட்டையாடுபவர்களின் கவனத்தைத் தவிர்க்கவும் இது மெதுவாக நகர்கின்றது.

2. தோட்டத்து நத்தை: இந்த உயிரினம் மணிக்கு சுமார் 50 மீட்டர் வேகத்தில்தான் பயணிக்கும். இது உடலின் தசைச் சுருக்கங்கள் மற்றும் மசகு சளிப் பாதையால் இயக்கப்படுவதால், உடல் குறைந்தபட்ச ஆற்றலை மட்டுமே வெளிப்படுத்துமாறு அமைந்துள்ளது. கரடு முரடான மேற்பரப்புகளில் இருந்து பாதுகாப்புடன் நகர்ந்து செல்ல இது மிகவும் மெதுவாக நகர்கிறது.

இதையும் படியுங்கள்:
கருப்பு வெள்ளையா பார்த்தா போதும், அதை கட்டுவிரியன்னு நினைக்காதீங்க!
Slow-moving animals

3. வாழை நத்தை (Banana Slug): இது தோட்ட நத்தையை விட மெதுவாக நகரும் இயல்புடையது. மணிக்கு சுமார் பத்து மீட்டர் வேகத்தில்தான் நகரும். இதனுடைய மென்மையான உடல் மற்றும் இயக்கத்திற்கு சளி போன்ற ஒரு திரவத்தை நம்பி இருக்கிறது. இது அழுகும் இலைகள், தாவரப் பொருள்கள், பூஞ்சைகள், பாசி மற்றும் காடுகளில் காணப்படும் இறந்த கரிம பொருள்களை உண்பதாலும் இதனுடைய இயக்கம் குறைவாக இருக்கிறது.

4. ராட்சத ஆமை: இது மணிக்கு 0.2 மைல் வேகத்தில் மெதுவாக நடக்கும். இதன் கனமான ஓடு, உள்நோக்கித் திரும்பிய கால்கள் மற்றும் நீண்ட ஆயுள் ஆகியவை முக்கியமாக ஆற்றல் சேமிப்பு மற்றும் நீடித்து நிலைக்கும் தன்மைக்கு ஏற்ப வேண்டுமென்றே மெதுவாக நகர வழி வகுக்கிறது.

5. கடல் அனிமோன் (Sea Anemone): உலகிலேயே மிகவும் மெதுவாக நகரும் உயிரினம் இது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு சென்டி மீட்டர்தான் நகரும். பார்த்தால் இது அசையாமல் அப்படியே இருப்பது போன்று தோற்றத்தை அளிக்கும். பெரும்பாலும் கடற்பரப்பில் ஒரு ஓரத்தில் தங்கியிருந்து, தனது அருகில் நீந்திச் செல்லும் இரையைப் பிடிக்கும் வரை மிக மெதுவாக காத்திருந்து பிடிக்கும்.

இதையும் படியுங்கள்:
விஷமாகும் மருந்துகள்: எக்ஸ்பயரியான மாத்திரைகளை அப்புறப்படுத்துவது எப்படி?
Slow-moving animals

6. கோலா கரடி: குறைந்த வளர்சிதை மாற்ற விகிதம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள யூகலிப்டஸ் இலைகளை இவை உண்ணுவதன் காரணமாக ஜீரணிக்க நீண்ட நேரம் ஆகும். தனது உடலின் ஆற்றலை சேமிக்க ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை தூங்குகிறது. உடலின் சக்தியை மிகக் குறைந்த அளவே செலவிடுகிறது.

7. குள்ள கடல் குதிரைகள்: இவை மிகவும் மெதுவாக நகரும் மீன் வகையாகும். ஒரு மணி நேரத்திற்கு 5 அடி மட்டுமே நகரும். தனித்துவமான நிமிர்ந்த உடல் வடிவம் மற்றும் சிறிய துடுப்பு போன்றவை இவை வேகமாக நகர அனுமதிக்காது. இது சுற்றுச்சூழலுடன் கலந்து தனது மெதுவாக இயங்கும் தன்மையால் தனது இரையை திருட்டுத்தனமாக அணுக உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
விவசாயத்தில் மனிதர்களுக்கு முன்னோடி எறும்புகள் என்பது தெரியுமா?
Slow-moving animals

8. லோரிஸ் (Slow Loris): வேண்டுமென்றே மிகவும் எச்சரிக்கைத் தன்மையுடன் நகரும் உயிரினம். வேட்டையாடுபவர்களிடமிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள மெதுவாக நகர்கிறது. இது கிளைகள் வழியாக கவனமாக நகர்ந்து அருகில் இருக்கும் இரையைத் தாக்கும்போது விரைவாக தாக்குகிறது.

9. நட்சத்திர மீன்: இது தன்னுடைய குழாய் கால்களைப் பயன்படுத்தி மணிக்கு சுமார் 0.005 மெயில் வேகத்தில் நகரும். தன்னை வேட்டையாடும் பிற விலங்குகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக தன்னை மறைத்துக்கொள்ளும் வகையில் மிகவும் திறமையாகவும் மெதுவாகவும் இயங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com