அற்புதமான Armadillo: இயற்கையின் கவசம் அணிந்த விலங்கு! 

Armadillo
Armadillo
Published on

தென் அமெரிக்காவின் புதர்களில் ஊர்ந்து செல்லும் ஒரு விசித்திரமான உயிரினம்தான் Armadillo. கவசம் போன்ற தோள் அமைப்பை கொண்ட இந்த சிறிய விலங்கு பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் பல சுவாரசியமான தகவல்களையும் கொண்டுள்ளது. இந்தப் பதிவில் ஆர்மடில்லோவின் வாழ்விடங்கள், உணவுமுறை, இனப்பெருக்க மற்றும் சில சுவாரசியமான தகவல்களை முழுமையாகத் தெரிந்துகொள்வோம்.

இவ்வுலகில் 20க்கும் மேற்பட்ட ஆர்மடில்லோ இனங்கள் உள்ளன. அவை அனைத்துமே அமெரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றன. புல்வெளிகள், காடுகள், மலைப் பாங்கான பகுதிகள் என பல்வேறு வாழ்விடங்களில் இவை வாழ்கின்றன. சில இனங்கள் தண்ணீரில் நீந்தவும், மரங்களில் ஏறவும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. 

ஆர்மடில்லோக்கள் பூச்சிகள், புழுக்கள், தாவரங்கள் மற்றும் சிறிய விலங்குகளை உண்ணும். நீண்ட ஒட்டும் நாக்கால் தரையில் உள்ள உணவுகளை எடுத்து சாப்பிடும். சில இனங்கள் இரும்புகள் மற்றும் தேனீக்களை வேட்டையாடுவதில் திறமையானவை. ஆண் ஆர்மடில்லோக்கள் பெண் ஆர்மடில்லோக்களை கவர பல வழிகளில் போட்டி போடுகின்றன. சில இனங்கள் சத்தம் போட்டு, சண்டையிட்டு, தங்கள் வாசனையைப் பரப்பி பெண்களைக் கவர முயற்சி செய்யும். பெண் ஆர்மடில்லோ கருவுற்ற பிறகு 1 முதல் 8 குட்டிகளை ஈனும். இந்த குட்டிகள் பிறந்த சில மணி நேரங்களிலேயே நடக்கவும் உண்ணவும் ஆரம்பித்துவிடும். 

ஆர்மடில்லோ பற்றிய சுவாரசியமான தகவல்கள்: 

  • ஆர்மடில்லோக்கள் தங்கள் கவசம் போன்ற உடல் அமைப்புக்குள்ளே சுண்டு, வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன. 

  • சில இனங்கள் தங்கள் கவசத்தைப் பயன்படுத்தி பாறைகளைக் கூட உடைத்து உணவு தேடும். அந்த அளவுக்கு அவற்றின் கவசம் கடினமானது. 

  • இவை சிறந்த மோப்ப சக்தி உடையவை. இதன் மூலமாக நிலத்துக்கு அடியில் உள்ள உணவுகளை எளிதாகக் கண்டறிய முடியும். 

  • சில ஆர்மடில்லோ இனங்கள் லெப்ரோஸி நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்டவை என்பதால், அவற்றை மருத்துவ ஆராய்ச்சியில் பயன்படுத்தி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்:
‘எடீமா’ எனப்படும் கால் வீக்கம் குணமாக எளிய இயற்கை வைத்தியம்!
Armadillo

இப்படி, இயற்கையின் அற்புத படைப்பான ஆர்மடில்லோக்கள் தங்களின் தனித்துவமான நடத்தை மற்றும் செயல்பாடுகளால் சுற்றுச்சூழலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றைப் பற்றி மேலும் நாம் ஆராய்ந்து அறிந்து கொள்வது மூலம் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய புரிதலை மேம்படுத்திக் கொள்ளலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com